தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ’கலைஞர் கருணாநிதியின் 100 ரூபாய் நாணயத்தை வெளியிடுவது தமிழ்நாட்டுக்கு பெருமை!’ பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேட்டி!

’கலைஞர் கருணாநிதியின் 100 ரூபாய் நாணயத்தை வெளியிடுவது தமிழ்நாட்டுக்கு பெருமை!’ பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேட்டி!

Kathiravan V HT Tamil

Aug 14, 2024, 08:12 PM IST

google News
இதை நாங்கள் அரசியலாக பார்க்க போவது கிடையாது. கலைஞர் கருணாநிதி ஐயாவுக்கு கிடைக்க கூடிய மரியாதை கிடைக்க வேண்டும். அதில் பாஜக சார்பில் கலந்து கொள்வோம். மத்திய அரசு நாணயம் வெளியிடுவது தமிழ்நாட்டுக்கு கிடைத்த பெருமையாக நான் பார்க்கிறேன்.
இதை நாங்கள் அரசியலாக பார்க்க போவது கிடையாது. கலைஞர் கருணாநிதி ஐயாவுக்கு கிடைக்க கூடிய மரியாதை கிடைக்க வேண்டும். அதில் பாஜக சார்பில் கலந்து கொள்வோம். மத்திய அரசு நாணயம் வெளியிடுவது தமிழ்நாட்டுக்கு கிடைத்த பெருமையாக நான் பார்க்கிறேன்.

இதை நாங்கள் அரசியலாக பார்க்க போவது கிடையாது. கலைஞர் கருணாநிதி ஐயாவுக்கு கிடைக்க கூடிய மரியாதை கிடைக்க வேண்டும். அதில் பாஜக சார்பில் கலந்து கொள்வோம். மத்திய அரசு நாணயம் வெளியிடுவது தமிழ்நாட்டுக்கு கிடைத்த பெருமையாக நான் பார்க்கிறேன்.

கலைஞர் கருணாநிதியின் 100 ரூபாய் நாணயம் வெளியீட்டு விழாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் தன்னை அழைத்ததாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறி உள்ளார். 

திமுக அரசுக்கு சாட்டை அடி தீர்ப்பு 

சென்னையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பாஜக எதை செய்தாலும் அதனை தடுக்க மாநில அரசு முனைப்பு காட்டுகிறது. இல்லம் தோறும் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என பிரதமர் வேண்டுகோள் விடுத்து உள்ளார். பாஜக சார்பில் இருசக்கர வாகன பேரணி நடத்த காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது. இதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அனுமதியை பெற்று உள்ளோம். இது திமுக அரசுக்கு சாட்டை அடி தீர்ப்பாக அமைந்து உள்ளது. 

நாளை தமிழ்நாடு முழுவதும் பாஜக பொதுமக்கள் உடன் இணைந்து தேசிய கொடியை எல்லா இடத்திலும் எடுத்து செல்வார்கள். சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்களின் சிலைகள், நினைவிடங்களில் பாஜகவினர் மரியாதை செய்ய உள்ளனர். 

தமிழ்நாட்டில் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைகள் அதிகம் ஆகி வருகின்றது. இதில் திமுகவை சேர்ந்த ஒரு நிர்வாகி சம்பந்தப்பட்டு இருகின்றார். வரும் 16ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் பாஜக சார்பில் மௌன ஊர்வலம் நடத்தப்படும். 

கேள்வி:- பாஜக உடன் கூட்டணி வைத்துக் கொள்வது தற்கொலைக்கு சமம் என செல்லூர் ராஜூ கூறி உள்ளாரே?

கூட்டணி வேண்டும்; கூட்டணி வேண்டாம் என்று ஒருவர் சொல்வது பய உணர்வை காட்டுவதாக உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் ஒரே குரலில் பேசத் தொடங்கி உள்ளோம். எல்லா தலைவர்களும் 2026ஆம் ஆண்டில் கூட்டணி ஆட்சி வேண்டும் என்று சொல்கிறோம். நாங்கள் வேறு சில கட்சிகள் பற்றி பேசுவதே கிடையாது. முன்னாள் அமைச்சர்கள் சொல்லும் கருத்து எனக்கே காமெடியாக உள்ளது. நான் அதிமுக எனும் கட்சியை மறந்து ஒரு வருட காலம் ஆகின்றது. 

கேள்வி:- கூட்டணி இல்லாமல் அதிமுக ஆட்சிக்கு வரும் என பொன்னையன் கூறி உள்ளாரே?

ஜிம்பாவே கிரிக்கெட் அணி உலக கோப்பையை வெல்வோம் என சொல்கிறார்கள், நேபாள அணி அடுத்த உலக கோப்பையை வெல்வோம் என்று கூறுகிறார்கள் அதை நான் எப்படி தடுக்க முடியும். யார் எதை வேண்டுமானாலும் சொல்லட்டும், அவர்களுக்கு எல்லா உரிமையும் உள்ளது. அவர்களுக்கு நல்வாழ்த்துகள். பொன்னையன் அண்ணன் அவர்கள் மறுபடியும் ஆட்டத்திற்குள் வர வேண்டும் என நினைக்கிறார். அவர் இப்போது ஆட்டத்திற்கு உள் இல்லை. ராஜாஜியுடன் எடப்பாடி பழனிசாமியை ஒப்பிடுவது குறித்து நான் எந்த கருத்தையும் கூற விரும்பவில்லை. 

கேள்வி:- தலித்துகள் முதலமைச்சர் ஆகும் சூழல் இல்லை என்று திருமாவளவன் கூறி உள்ளாரே?

நான் சூழல் இருப்பதாகவே பார்க்கிறேன். நான் அந்த சூழல் இல்லை என்று கூறமாட்டேன். தமிழ்நாட்டில் தலித் என்று ஒரு தலைவரை அடையாளப்படுத்திவிட்டால் அவர்களுக்கு ஓட்டு போடா மாட்டார்கள் என்று நான் நினைக்கவில்லை. கக்கன் ஐயா வாழ்ந்த பூமி இது, நல்லவர்களுக்கு இங்கு இடம் உள்ளதாகவே நான் பார்க்கிறேன். 2026 தேர்தலில் சீட் அதிகமாக தருவார்களா என்று திருமாவளவன் பார்க்கிறார். ஒரிசாவில் ஒரு பழங்குடி இனத்தை சேர்ந்த ஒருவரை முதலமைச்சராக பாஜக நியமனம் செய்து உள்ளது. அண்ணன் திருமாவளவன் சொல்லும் இந்த கருத்தை ஏற்றுக் கொண்டால் இந்த கட்சியில் நான் இருப்பதே தவறாக போய்விடும். 

தொலைபேசி மூலம் முதல்வர் பேசினார்

முதலமைச்சர் அவர்கள் தொலைபேசி மூலமாக என்னை அழைத்து இருந்தார்கள். முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு கலைஞர் கருணாநிதி ஐயா உடைய 100 ஆண்டு கால சாதனையாக 100 ரூபாய் நாணயத்தை வெளியிட வேண்டும் என மாநில அரசு, மத்திய அரசிடம் அனுமதி கேட்டு இருந்தார்கள். அந்த நிகழ்வுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வருகிறார். இந்த நிகழ்வில் கலந்து கொள்ள என்னை அவர் அழைத்து இருந்தார். இதை நாங்கள் அரசியலாக பார்க்க போவது கிடையாது. கலைஞர் கருணாநிதி ஐயாவுக்கு கிடைக்க கூடிய மரியாதை கிடைக்க வேண்டும். அதில் பாஜக சார்பில் கலந்து கொள்வோம். மத்திய அரசு நாணயம் வெளியிடுவது தமிழ்நாட்டுக்கு கிடைத்த பெருமையாக நான் பார்க்கிறேன். கலைஞர் அவர்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பல காலகட்டத்தில் வேலை செய்து உள்ளனர். 

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை