Annamalai: ’கார் ரேஸ் விவகாரம்! அரசியலுக்கு வந்தீங்களா? நடிக்க வந்தீங்களா? அண்ணாமலைக்கு திருச்சி சூர்யா சரமாரி கேள்வி!
தமிழ்நாடு பாஜகவினரால் மிரட்டப்பட்ட தொழிலதிபர்கள் லிஸ்ட் வேண்டுமா? இந்திய அளவில் அமலாக்கத்துறையை ஏவி, பின்னர் தேர்தல் பத்திரத்திற்கு பணம் வசூலிக்கப்பட்ட கதை தான் ஊரே நாறியது?

’தமிழ்நாட்டில் உள்ள தொழிலதிபர்களை மிரட்டி திமுக பணம் பறிக்கிறது என்று அண்ணாமலை கூறலாமா? வேதம் ஓதுவதற்கு சாத்தானுக்கு தகுதி உண்டா?’ என முன்னாள் பாஜக நிர்வாகி திருச்சி சூர்யா கேள்வி எழுப்பி உள்ளார்.
அண்ணாமலையின் குற்றச்சாட்டு
சென்னையில் கார் பந்தயம் நடத்துவதற்காக தொழிலதிபர்களை மிரட்டி பணம் வாங்கப்படுவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி இருந்தார்.
இது தொடர்பாக ‘எக்ஸ்’ சமூகவலைத்தளத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பதிவிட்டுள்ள இடுகையில், ஊழலுக்கான புதிய வழிமுறைகளைக் கண்டுபிடித்து, தனது இந்தி கூட்டணிக் கட்சிகளுக்குப் புதிய ஊழல் பாதையை அமைத்துக் கொடுப்பதில், திமுக தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறது. கடந்த காலங்களில், மருத்துவக் கல்விச் சேர்க்கைக்கான மாணவர்களின் தகுதிப் பட்டியலைக் கொடுத்து, கட்சிக்கு நன்கொடை வாங்கும் வழியை அறிமுகப்படுத்திய திமுக, இப்போது நன்கொடை வசூலிப்பதில் புதிய உயரத்துக்குச் சென்றுவிட்டனர்.
