தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Kuwait Building Fire: குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க ஏற்பாடு!

Kuwait Building Fire: குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க ஏற்பாடு!

Divya Sekar HT Tamil

Jun 14, 2024, 09:19 AM IST

google News
Kuwait Building Fire: குவைத் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல் கொச்சியிலிருந்து தனித்தனி வாகனம் மூலம் சொந்த ஊர் கொண்டு செல்லப்பட்டு உறவினர்களிடம் இன்று ஒப்படைக்கப்படும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.
Kuwait Building Fire: குவைத் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல் கொச்சியிலிருந்து தனித்தனி வாகனம் மூலம் சொந்த ஊர் கொண்டு செல்லப்பட்டு உறவினர்களிடம் இன்று ஒப்படைக்கப்படும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.

Kuwait Building Fire: குவைத் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல் கொச்சியிலிருந்து தனித்தனி வாகனம் மூலம் சொந்த ஊர் கொண்டு செல்லப்பட்டு உறவினர்களிடம் இன்று ஒப்படைக்கப்படும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.

குவைத் நாட்டின் தெற்கு நகரமான மங்காஃபில் உள்ள ஒரு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 40 இந்தியர்கள் உட்பட 49 வெளிநாட்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 50 பேர் காயமடைந்தனர். புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட இந்த கட்டிடம் தீப்பிடித்து எரிந்தது. அதிகாலையில் தொடங்கிய தீ வேகமாக கட்டிடம் முழுவதும் பரவி பலர் உள்ளே சிக்கிக்கொண்டனர். 

ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 5 லட்சம் ரூபாய் நிவாரண உதவி

இந்த விபத்து குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில்,” குவைத் தீவிபத்தில் ஏழு தமிழர்கள் உயிரிழந்துள்ளதாக வந்த செய்தி மிகுந்த வேதனை தருகிறது.

உயிரிழந்தவர்களின் உடல்களைத் தனிவிமானம் மூலம் இந்தியா கொண்டு வந்து, குடும்பத்தினரிடம் விரைவில் ஒப்படைப்பதற்கான ஒருங்கிணைப்புகளைத் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு, ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 5 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

தீக்காயங்களுக்குச் சிகிச்சை பெற்று வருபவர்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து, தமிழ்நாடு அரசு துணைநின்றிடும்” என பதிவிட்டுள்ளார்.

வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான்

இந்நிலையில், குவைத் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல் கொச்சியிலிருந்து தனித்தனி வாகனம் மூலம் சொந்த ஊர் கொண்டு செல்லப்பட்டு உறவினர்களிடம் இன்று ஒப்படைக்கப்படும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.

குவைத் விபத்தில் உயிரிழந்த இந்தியர்கள் உடல் கேரள மாநிலம் கொச்சின் கொண்டு வரப்படும் நிலையில் விபத்தில் உயிரிழந்த 7 தமிழர்களின் உடல்களை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைக்க வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கொச்சின் செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “குவைத் நாட்டில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் இரவு நேரத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர்.

தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். உயிரிழந்தவர்கள் உடலை மீட்டு உறவினர்களிடம் விரைந்து ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். உயிரிழந்தவர்களின் உடலுக்கு முதலமைச்சர் 5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். 

உயிரிழந்தவர்களின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது

இன்று காலை 9 மணிக்கு மேல் உயிரிழந்தவர்கள் உடல் கொச்சி வந்தடையும். கொச்சியிலிருந்து தனித்தனி வாகனம் மூலம் உயிரிழந்தவர்களின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது என்றார்.

குவைத் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருபவர்களின் தகவல் வரும் நிலையில் உள்ளது, அதற்குண்டான உதவிகளை தமிழ்நாடு அரசு சார்பாக அங்கு உள்ள தமிழ் சங்கங்கள் மூலமாக செய்து தருவதற்கு துறை ஏற்பாடு செய்துள்ளது. மேலும் ஏதேனும் பாதிப்பு ஒன்று இரண்டு தமிழர்களுக்கு இருந்தால் அவர்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என்று கூறினார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.
அடுத்த செய்தி