‘பள்ளிகளுக்கு விடுமுறை.. கல்லூரி தேர்வு ரத்து.. கடல் கொந்தளிப்பு..’ மழை சிறப்பு செய்திகள் இதோ!
Nov 29, 2024, 08:15 AM IST
தமிழகத்தில் இன்றைய மழை நிலவரமும், மழை தொடர்பான முக்கிய அறிவிப்புகளும் ஒரே செய்தியில் இதோ அறிந்து கொள்ளலாம். சென்னை முதல் கன்னியாகுமரி வரை அறிய வேண்டிய முக்கிய மழை செய்திகள் பின்வருமாறு:
இன்று தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ள பகுதிகள்
சென்னை ,திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுச்சேரி, காரைக்கால். சென்னை வானிலை ஆய்வு மையம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
சென்னை ஏரிகளின் தற்போதைய நிலை
சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரி, புழல் ஏரி, பூண்டி ஏரி, சோழவரம் ஏரி, கண்ணன்கோட்டை ஏரி ஆகிய 5 ஏரிகளில் 46.99% நீர் இருப்பு உள்ளது. ஏரிகளின் நீர் இருப்பு இதோ:
எந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை
திருவாரூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகள் வழக்கம் போல செயல்படும் என்றும், அங்கு விடுமுறை கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலை கழகத் தேர்வுகள் ரத்து
அண்ணாமலை பல்கலைகழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் இன்று நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகிறது. மறுதேர்வுகள் குறித்த அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும் என்று அண்ணாமலை பல்கலைகழகத் பதிவாளர் அறிவித்துள்ளார்.
சென்னையில் கடல் அலை சீற்றம் அதிகரிப்பு
சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை வழக்கத்தை விட அதிக சீற்றத்துடன் காணப்படுகிறது. கடல் அலை வழக்கத்தை விட 3.7 மீ வரை மேலெழும்பக்கூடும் என இந்திய கடல்சார் தேசிய மையம் எச்சரிக்கைவிடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வானிலை ஆய்வு மையம் தரும் எச்சரிக்கை என்ன
மேலும் மழை தொடர்பான செய்திகள் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் உடன் இணைந்திருங்கள். எங்களின் சமூக வலைதள பக்கங்கள் மூலமாகவும் எங்களை பின்தொடரலாம்.