தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Armstrong: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திருப்பம்! போலீசிடம் சிக்கிய பிரபல ரவுடியின் மனைவி! திமுக வழக்கறிஞருக்கு தொடர்பா?

Armstrong: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திருப்பம்! போலீசிடம் சிக்கிய பிரபல ரவுடியின் மனைவி! திமுக வழக்கறிஞருக்கு தொடர்பா?

Kathiravan V HT Tamil

Jul 17, 2024, 07:31 PM IST

google News
Armstrong's murder case: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக பிரபல தாதாவின் மனைவியும் வழக்கறிஞருமான மலர் கொடி மற்றும் ஹரிஹரன் ஆகியோரை செம்பியம் போலீசார் கைது செய்து உள்ளனர்.
Armstrong's murder case: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக பிரபல தாதாவின் மனைவியும் வழக்கறிஞருமான மலர் கொடி மற்றும் ஹரிஹரன் ஆகியோரை செம்பியம் போலீசார் கைது செய்து உள்ளனர்.

Armstrong's murder case: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக பிரபல தாதாவின் மனைவியும் வழக்கறிஞருமான மலர் கொடி மற்றும் ஹரிஹரன் ஆகியோரை செம்பியம் போலீசார் கைது செய்து உள்ளனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் இரண்டு பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். 

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி சென்னை பெரம்பூரில் கொலை செய்யப்பட்டார். 

ஏற்கெனவே 11 பேர் கைது 

இத வழக்கு தொடர்பாக கொலை செய்யப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பியான பொன்னை பாலு , ராமு, திருவேங்கிடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், கோகுல், சக்தி, சந்தோஷ், அருள், சிவசக்தி உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர். 

திருவேங்கிடம் என்கவுண்டர் 

இந்த நிலையில்  காவலர்களை தாக்கிவிட்டு தம்பிக்க முயன்றதாக கூறி திருவேங்கிடம் என்பவர் கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக பிரபல தாதாவின் மனைவியும் வழக்கறிஞருமான் மலர் கொடி மற்றும் ஹரிஹரன் ஆகியோரை செம்பியம் போலீசார் கைது செய்து உள்ளனர். கைது செய்யப்பட்ட 6 பேரிடம் காவல்துறையினர் இன்றைய தினம் விசாரணை நடத்தினர். 

இதில் கைது செய்யப்பட்டு உள்ள திமுக வழக்கறிஞர் அருண் என்பவரின் மனைவி  உடன் மறைந்த பிரபல தாதாவின் மனைவி மலர்கொடி தொடர்பில் இருந்ததாக கூறப்படுகின்றது. இவர்களுக்கு இடையே நடைபெற்ற பணப்பரிவர்தனை குறித்தும் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகின்றது.

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் கொலை

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னையில் வெட்டிக் கொல்லப்பட்டார். பெரம்பூரில் உள்ள அவரது இல்லம் அருகே வெளியில் நின்று கொண்டு இருந்த ஆம்ஸ்ட்ராங்கை, உணவு டெலிவரி ஊழியர்கள் போர்வையில் வந்த அடையாளம் தெரியாத கும்பல் வெட்டிவிட்டு தப்பி சென்றது.

அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்

இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி சென்னை வர உள்ளார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர். மேலும் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்க்கெட்டு விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

எழும்பூரில் பேரணி அறிவிப்பு

ஆம்ஸ்ட்ராங் படுகொலையை கண்டித்து வரும் ஜூலை 20ஆம் தேதி மாலை 3 மணி அளவில் எழும்பூரில் உள்ள ரமடா ஹோட்டலில் தொடங்கும் பேரணி ராஜரத்தினம் அரங்கம் அருகில் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக நீலம் பண்பாட்டு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.ஆர்ம்ஸ்ட்ராங் அவர்கள் கடந்த ஜூலை 5ஆம் தேதியன்று சமூக விரோதிகளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். நாட்டையே உலுக்கிய இக்கொடூர நிகழ்வு தனிப்பட்ட முறையில் நம் ஒவ்வொருவருக்கும் பேரிழப்பாகும்.

நெடுந்தூரம் பயணிக்க வேண்டி உள்ளது

தலித்துகள், சமூக அரசியல் மற்றும் பொருளாதார விடுதலை அடைய இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. அதில் அவர்கள் சந்தித்த இழப்புகள் எண்ணிலடங்கா! இதையெல்லாம் மீறி இயக்கங்கள் வெவ்வேறாக இருந்தாலும் 'அம்பேத்கரியம்' என்கிற ஒற்றைப்புள்ளியில் இணைந்த தலைவர்களே நம் பலம். நூறு வருடத்திற்கும் மேலான தலித் அரசியல் வரலாற்றில் ஒரு தலைவரின் இரப்பே கேள்விக்குறியாகியிருப்பது சுலபமாகக் கடந்து போக கூடிய  நிகழ்வல்ல என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி