தமிழ்நாட்டில் தலித்துகளுக்கு பாதுகாப்பே இல்லை! ஆம்ஸ்ட்ராங் மனைவியை சந்தித்த பின் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே பேட்டி
TN BSP chief Armstrong murder: தமிழகத்தில் தலித் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. பல தலித் தலைவர்களும் இங்கு இருக்க வேண்டும் என்பது எனது கோரிக்கையும் கூட. தலித் தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என முதல்வரிடம் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் தலித்துகளுக்கு பாதுகாப்பே இல்லை! ஆம்ஸ்ட்ராங் மனைவியை சந்தித்த பின் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே பேட்டி (PTI)
தமிழ்நாட்டில் நடைபெறும் தலித் படுகொலைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே பொறுப்பு, பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்து உள்ளார்.
சென்னையில் மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் இல்லத்திற்கு சென்ற மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, அவரது மனைவி பொற்கொடியை சந்தித்து ஆறுதல் கூறினார்.
சிபிஐ விசாரணை வேண்டும்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "இந்த கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கு பின்னால் யாரோ கொலைக்கு திட்டமிட்டுள்ளனர். எனவே, சிபிஐ விசாரணையை அறிவிக்க வேண்டும் என்று முதல்வரிடம் கேட்டுக்கொள்கிறேன். சிபிஐ விசாரணையில், முக்கிய குற்றவாளிகளை நிச்சயம் பிடிப்போம்.