தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Ias Transfer: ‘சட்டம் ஒழுங்கு பிரச்னை எதிரொலி!’ உள்துறை செயலாளர் அமுதா Ias இடமாற்றம்! 15 Ias அதிகாரிகளை மாற்றிய அரசு!

IAS Transfer: ‘சட்டம் ஒழுங்கு பிரச்னை எதிரொலி!’ உள்துறை செயலாளர் அமுதா IAS இடமாற்றம்! 15 IAS அதிகாரிகளை மாற்றிய அரசு!

Kathiravan V HT Tamil

Jul 16, 2024, 04:18 PM IST

google News
IAS Transfer: தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைகள் துறை, சென்னை மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளின் செயலாளர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்களை இடமாற்றம் செய்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.
IAS Transfer: தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைகள் துறை, சென்னை மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளின் செயலாளர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்களை இடமாற்றம் செய்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.

IAS Transfer: தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைகள் துறை, சென்னை மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளின் செயலாளர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்களை இடமாற்றம் செய்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் 16 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். 

அமுதா ஐ.ஏ.எஸ் இடமாற்றம் 

தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைகள் துறை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. புதிய உள்துறை செயலாளராக தீரஜ் குமார் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். 

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளராக அமுதா ஐ.ஏ.எஸ் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

கள்ளச்சாராய மரணங்கள், ஆம்ஸ்ட்ராங் படுகொலை உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை சுட்டிக்காட்டி தமிழக அரசை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

சென்னை மாநகராட்சி ஆணையர் இடமாற்றம் 

சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த ஜெ.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். 

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் இயக்குநராக இருந்த ஜே.யு. சந்திரகலா ஐ.ஏ.எஸ் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக நியமனம். 

சிட்கோ நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் எஸ்.மதுமதி ஐ.ஏ.எஸ், பள்ளிக்கல்வித்துறை செயலாளராக நியமனம். 

உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர் கே.கோபால் ஐ.ஏ.எஸ், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன் வளத்துறை செயலாளராக நியமனம். 

பல்வேறு துறைகளின் செயலாளர்கள் இடமாற்றம்

குடிமை பொருட்கள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பதுகாப்புத்துறை முதன்மை செயலாளர் ஹர் சஹய் மீனா ஐ.ஏ.எஸ், சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறைக்கு இடமாற்றம். 

தொழிற்கல்வித்துறை செயலாளர் வீரராகவ ராவ் ஐ.ஏ.எஸ், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை செயலாளராக நியமனம். 

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை செயலாளர் குமார் ஜெயந்த், அரசு தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை செயலாளராக நியமனம். 

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் ராஜாராமன், தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறை செயலாளராக நியமனம். 

தமிழ்நாடு காதி மற்றும் கிராம தொழில்கள் வாரியத்தின் தலைமை செயல் அலுவலர் எஸ்.சுரேஷ் குமார் ஐ.ஏ.எஸ், அரசின் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை செயலாளராக நியமனம். 

டி.ஆர்.டி.ஏ திட்ட இயக்குநர் சி.ஏ.ரிஷப் ஐ.ஏ.எஸ், நிதித்துறை துணை செயலாளராக நியமனம். 

மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன், பொது துறையின் துணை செயலாளராக நியமனம். 

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக இருந்த வளர்மதி ஐ.ஏ.எஸ், சமூகநலன், மகளிர் மேம்பாட்டுத்துறையின் இணை செயலாளராக நியமனம். 

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அன்னி மேரி ஸ்வர்னா, உள்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறைகளின் இணை ஆணையராக நியமனம். 

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரவன் குமார் ஜதாவத், வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை இணை செயலாளராக நியமனம். 

நீலகிரி மாவட்ட ஆட்சியராக இருந்த எம்.அருணா ஐ.ஏ.எஸ் புதுக்கோட்டை ஆட்சியராக நியமனம். 

வணிக வரித்தூறை இணை ஆணையராக இருந்த லஷ்மி பவ்யா தன்னீரு நீலகிரி மாவட்ட ஆட்சியராக நியமனம். 

தமிழ்நாடு மகளிர் வளர்ச்சி ஆணையத்தின் செயல் இயக்குநர் பி.பிரியங்கா ஐ.ஏ.எஸ், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக இடமாற்றம். 

சிப்காட் நிறுவனத்தின் செயல் இயக்குநராக இருந்த பி.ஆகாஷ் ஐ.ஏ.எஸ் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியராக நியமனம். 

வணிகவரித்துறை இணை ஆணையர் பி.ரத்தினசாமி ஐ.ஏ.எஸ். அரியலூர் மாவட்ட ஆட்சியராக நியமனம். 

நிதித்துறை துணை செயலாளர் சிபி ஆதித்ய செந்தில் குமார், கடலூர் மாவட்ட ஆட்சியராக நியமனம். 

தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகு மீனா ஐ.ஏ.எஸ், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக நியமனம்.

தொழில் மற்றும் வணிகத்துறை கூடுதல் ஆணையராக இருந்த கிரேஸ் லால்ரிண்டிகி பச்சுவா ஐ.ஏ.எஸ், பெரம்பலூர் மாட்ட ஆட்சியராக நியமனம். 

நகராட்சி நிர்வாக துறை இணை ஆணையர் சிம்ரன் ஜித் சிங் கஹ்லோன் ராமநாதபுரம் ஆட்சியராக நியமனம். 

பள்ளி கல்வித்துறை செயலாளர் ஜெ.குமரகுருபன் ஐ.ஏ.எஸ், சென்னை மாநகராட்சி ஆணையராக இடமாற்றம். 

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் நர்னாவேர் மணீஷ் சங்கர் ராவ் ஐ.ஏ.எஸ், ஈரோடு மாநகராட்சி ஆணையராக இடமாற்றம். 

கூடுட்டுறவு சங்கங்களில் கூடுதல் பதிவாளர் ஜெ.விஜயராணி ஐ.ஏ.எஸ், சென்னை மாநகராட்சி இணை ஆணையராக நியமனம். 

சேலம் மாநகராட்சி ஆணையர் எஸ்.பாலச்சந்திரன் தாம்பரம் மாநகராட்சி ஆணையராக நியமனம். 

அடுத்த செய்தி