தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  10th And 11th Failed Students To Note! Today Is The Last Day To Apply For Supplementary Examination!

Supplementary Exam : 10, 11ம் வகுப்பு தவறிய மாணவர்கள் கவனிக்க! துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி!

Priyadarshini R HT Tamil

May 27, 2023, 07:51 AM IST

10th and 11th Supplementary Exam : 10, 11ம் வகுப்பு மாணவர்களே சிறப்பு உடனடி துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். எனவே மறக்காமல் தேர்வுகளுக்கு விண்ணபித்துவிடுங்கள்.
10th and 11th Supplementary Exam : 10, 11ம் வகுப்பு மாணவர்களே சிறப்பு உடனடி துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். எனவே மறக்காமல் தேர்வுகளுக்கு விண்ணபித்துவிடுங்கள்.

10th and 11th Supplementary Exam : 10, 11ம் வகுப்பு மாணவர்களே சிறப்பு உடனடி துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். எனவே மறக்காமல் தேர்வுகளுக்கு விண்ணபித்துவிடுங்கள்.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் நடைபெற்றன. இந்த பொதுத் தேர்வுக்கான முடிவுகள் அனைத்தும் ஒரே நாளில் காலை, மதியம் என இருவேளைகளிலும் மே 19ம் தேதி வெளியானது.

ட்ரெண்டிங் செய்திகள்

Today Gold Rate : மாதத்தின் முதல் நாளே குட் நியூஸ்.. தங்கம் சவரனுக்கு 920 குறைவு.. நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!

LPG Price : குட் நியூஸ் மக்களே.. வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைப்பு.. வெளியான புதிய விலைப்பட்டியல்!

Weather Update : இந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு.. ஆனால் இங்கு வெயில் கொளுத்தும்!

Weather Update: ’ஊட்டியில் வெயில் உச்சம்! இரவு 10 மணி வரை 6 மாவட்டங்களில் மழை!’ வானிலை ஆய்வு மையம் அவசர எச்சரிக்கை!

இதில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 91.39 சதவீத மாணவர்களும் ,11ம் வகுப்பு பொதுத் தேர்வில் 90.94 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த பொதுத்தேர்வை எழுதியுள்ள மாணவர்கள் மறுகூட்டலுக்காக விடை தாள் நகல் பெற விரும்பினால் மே 24ம் தேதி முதல் 27ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனக் கூறப்பட்டது.

இதற்கிடையில், இந்த பொதுத் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கான, துணைத் தேர்வு குறித்த அறிவிப்பை தேர்வுத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ளார்.

அதில் 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வு வரும் ஜூன் 27ம் தேதி முதல் ஜூலை 5ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்த தேர்வுகளை எழுத விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும். பள்ளி மூலமாகவும், தனித்தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைந்துள்ள அரசு சேவை மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இன்று விண்ணப்பிக்க தவறினால், மாணவர்கள் கூடுதலாக ரூ.1,000 செலுத்தி மே 30 மற்றும் 31ம் தேதிகளில் தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த துணைத் தேர்வுக்கான கட்டணம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் www.dge.tn.gov.in என்ற தளத்தில் சென்று தெரிந்துகொள்ளலாம்.

இந்த மாணவர்களுக்கு உடனடியாக மறுதேர்வு எழுத துணைத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 10ம் வகுப்பு அட்டவணை

ஜூன் 27 - மொழிப்பாடம்.

ஜூன் 28 - ஆங்கிலம்.

ஜூன் 30 - கணிதம்.

ஜூலை 1 - விருப்பத்தேர்வு மொழிபடம்.

ஜூலை 3 - அறிவியல்.

ஜூலை 4 - சமூக அறிவியல்.

என கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 11ம் வகுப்பு துணைத்தேர்விற்கான கால அட்டவணையையும் அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. அந்தத் தேர்வுகளும் ஜூன் 27ம் தேதி முதல் 5ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 27, 28, 30, 1, 3, 4, 5 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 1.15 வரை 11ம் வகுப்பு துணைத்தேர்வுகள் நடைபெறவுள்ளது.

டாபிக்ஸ்