தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  செல்போனை பிடுங்கியதால் விரக்தி – 10ம் வகுப்பு மாணவி எடுத்த தவறான முடிவு

செல்போனை பிடுங்கியதால் விரக்தி – 10ம் வகுப்பு மாணவி எடுத்த தவறான முடிவு

Priyadarshini R HT Tamil

Mar 20, 2023, 09:08 AM IST

Student Suicide : செல்போனை பிடுங்கி தலைமை ஆசிரியரிடம் தாய் ஒப்படைத்ததால் 10ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
Student Suicide : செல்போனை பிடுங்கி தலைமை ஆசிரியரிடம் தாய் ஒப்படைத்ததால் 10ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

Student Suicide : செல்போனை பிடுங்கி தலைமை ஆசிரியரிடம் தாய் ஒப்படைத்ததால் 10ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

ஈரோடு மாவட்டம் நம்பியூரை சேர்ந்தவர் ரமேஷ். இவர் நம்பியூர் பகுதியில் உள்ள ஒரு இரும்பு கடையில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி அமுதா (43). இவர் திருப்பூரில் தங்கியிருந்து அங்குள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர்களுடைய மகள்கள் ரூபினிப்ரியா (17), வர்ஷா (15).

ட்ரெண்டிங் செய்திகள்

Savukku Shankar Arrest: ‘சவுக்கு சங்கர் கைது! முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்!’ ஸ்டாலினுக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை

’காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயகுமார் தன்சிங் கொலைக்கு போலீஸ்தான் காரணம்!’ ஆதாரத்தை அடுக்கும் அன்புமணி ராமதாஸ்!

Jayakumar Dhanasingh: ‘நெல்லை காங்கிரஸ் பிரமூகர் எரித்துக் கொலையா?’ விளாசும் ஈபிஎஸ்! சந்தேகம் கிளப்பும் அண்ணாமலை

Congress: ’காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனசிங் மரணத்திற்கு நான் காரணமா?’ ரூபி மனோகரன் எம்.எல்.ஏ பரபரப்பு பேட்டி!

இதில் வர்ஷா நம்பியூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். வர்ஷா எப்போதும் செல்போனிலேயே நேரம் செலவழித்து வந்ததாக தெரிகிறது. இதனால் தாய் அமுதா திருப்பூரில் இருந்து வீட்டுக்கு வரும்போதெல்லாம் செல்போனை வைத்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்துமாறு கூறி வந்துள்ளார். 

இந்தநிலையில் 2 நாட்களுக்கு முன் அமுதா வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது வர்ஷா படிப்பில் கவனம் செலுத்தாமல் செல்போன் பார்த்துக்கொண்டு இருந்தது தெரிந்தது. இதனால் ஆத்திரமடைந்து அமுதா மகளிடம் இருந்து செல்போனை பிடுங்கி, வர்ஷா படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் ஒப்படைத்து விட்டதாக தெரிகிறது. மேலும் 10ம் வகுப்பு தேர்வு முடிந்த பின்னர் செல்போனை மகளிடம் தருமாறு கூறியுள்ளார். 

இதனால் வெறுப்படைந்த வர்ஷா 2 நாட்களாக யாரிடமும் பேசாமலும், சாப்பிடாமலும் இருந்துள்ளார். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத இரவு நேரத்தில் வீட்டின் விட்டத்தில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

டியூஷச் சென்றிருந்த ரூபினிப்ரியா வீட்டுக்கு வந்து பார்த்தபோது வர்ஷா தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து கதறி துடித்தார். இதுகுறித்து நம்பியூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வர்ஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

செல்போனை தாய் பிடுங்கிக்கொண்டதால் 10ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டது அவரது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இதுமட்டுமல்ல பல்வேறு பிரச்னைகளுக்கு இந்த செல்போன்தான் காரணம் என்று அவர்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர். 

வாழ்க்கையில்வரும் கவலைகளும், துன்பங்களும் நிரந்தமானது அல்ல. அவற்றை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம்அதை எதிர்கொள்வதில் தான் உள்ளது. தற்கொலைஎதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கையை மகிழ்வாய் வாழும் வழிகளை கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். ஒருவேளை உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உருவானாலோ அதிலிருந்து மீண்டும் வர கீழ்காணும் எண்களைஅழைக்கலாம். 

மாநிலஉதவி மையம் :104

சினேகாதன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசிஎண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்