தமிழ் செய்திகள்  /  Sports  /  Yashasvi Jaiswal To Join Indian Squad For Wtc Final As Stand-by

World Test Championship: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல்-இந்திய அணியில் இடம்பிடித்த இளம் வீரர்

Manigandan K T HT Tamil

May 28, 2023, 04:33 PM IST

Yashasvi Jaiswal: அவருக்கு ஜூன் 3ம் தேதி திருமணம் என்பதால் இங்கிலாந்துக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தேர்வுக் குழுவுக்கு ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துவிட்டார்.
Yashasvi Jaiswal: அவருக்கு ஜூன் 3ம் தேதி திருமணம் என்பதால் இங்கிலாந்துக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தேர்வுக் குழுவுக்கு ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துவிட்டார்.

Yashasvi Jaiswal: அவருக்கு ஜூன் 3ம் தேதி திருமணம் என்பதால் இங்கிலாந்துக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தேர்வுக் குழுவுக்கு ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துவிட்டார்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் சார்பில் ரன் மெஷினாக செயல்பட்ட யஷஸ்வி ஜெய்ஸ்வால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் விளையாட இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Chennaiyin FC: சென்னையின் எஃப்சி கேப்டனாக 2025 வரை நீடிக்கப்போவது இந்தப் பிளேயர் தான்!

Archery World Cup: நான்கு தங்க பதக்கங்களை அள்ளிய இந்திய அணி! தங்கம் வென்றார் வில் வித்தை வீராங்கனை ஜோதி சுரேகா

PKL: 'சீசன் 1 முதல் பி.கே.எல்லின் ஒரு பகுதியாக இருக்க கனவு கண்டோம்': ஆங்கில கபடி வீரர்கள் பேட்டி

D Gukesh: ரசிகர்களின் அன்பால் திக்குமுக்காடிப்போன சென்னையைச் சேர்ந்த இளம் செஸ் வீரர் டி.குகேஷ்!-வைரல் வீடியோ

ஆனால், ஆடும் லெவனில் இல்லாமல் பெஞ்சில் அமர வைக்கப்படுவார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்தில் அடுத்த மாதம் நடக்கிறது. இந்தப் போட்டிக்கான இந்திய அணியில் சிஎஸ்கேவில் ஓபனிங் பேட்ஸ்மேனாக கலக்கிய ருதுராஜ் கெய்க்வாட் இந்திய அணியில் இடம்பிடித்திருந்தார். அவருக்கு ஜூன் 3ம் தேதி திருமணம் என்பதால் இங்கிலாந்துக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தேர்வுக் குழுவுக்கு ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துவிட்டார்.

இந்நிலையில், அவரது இடத்திற்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் சேர்க்கப்பட்டுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் இந்த சீசனில் 14 இன்னிங்ஸ்களில் விளையாடிய அவர் 625 ரன்களை குவித்துள்ளார்.

மேலும், ஒரு சதம், 5 அரை சதங்களையும் அவர் இந்த சீசனில் விளைசியிருக்கிறார். 21 வயதாகும் யஷஸ்வி ஜெய்ஸ்வால், இன்னும் இந்திய அணிக்காக தேர்வாகாமல் இருந்து வந்தார். முதல் தர கிரிக்கெட்டில் ரன்குவிப்பில் ஈடுபட்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் தேர்வுக் குழுவின் கவனத்தை ஈர்த்தார். முதல் தர கிரிக்கெட்டில் 1845 ரன்களை அவர் குவித்துள்ளார். அதுவும் 15 ஆட்டங்களில் மட்டுமே விளையாடி என்பது குறிப்பிடத்தக்கது. உள்ளூர் கிரிக்கெட்டில் மொத்தம் 9 சதங்களையும் 2 அரை சதங்களையும் அவர் பதிவு செய்திருக்கிறார்.

யஷஸிவி ஜெய்ஸ்வால்

WTC இறுதிப் போட்டிக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, கே. எல். ராகுல், கே.எஸ். பரத் (Wk), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாக்குர், முகமது ஷமி, முகமது சிராஜ் , உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனட்கட்.

WTC ஆஸ்திரேலிய அணி: பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுசேன், மேத்யூ ரென்ஷா, மார்கஸ் ஹாரிஸ், அலெக்ஸ் கேரி, ஜோஷ் இங்கிலிஸ், கேமரூன் கிரீன், ஸ்காட் போலாண்ட், ஜோஷ்காட் போலாண்ட் ஹேசில்வுட், நாதன் லியோன், மிட்செல் ஸ்டார்க் மற்றும் டோட் மர்பி.

டாபிக்ஸ்