தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Wpl Eliminator: ஹாட்ரிக் வீழ்த்தி வரலாறு படைத்த வோங்! பைனலில் மும்பை

WPL Eliminator: ஹாட்ரிக் வீழ்த்தி வரலாறு படைத்த வோங்! பைனலில் மும்பை

Mar 24, 2023, 11:51 PM IST

மகளிர் ஐபிஎல் தொடரில் முதல் ஹாட்ரிக் வீழ்த்திய பெளலர் என்ற பெருமையை பெற்ற இஸ்ஸி வோங், மும்பை அணியை 72 ரன்கள் வித்தியாசத்தில் மிகப் பெரிய வெற்றியை பெறுவதற்கு காரணமாக அமைந்தார். இறுதி போட்டியில் டெல்லி அணியை எதிர்கொள்கிறது மும்பை இந்தியன்ஸ். (PTI)
மகளிர் ஐபிஎல் தொடரில் முதல் ஹாட்ரிக் வீழ்த்திய பெளலர் என்ற பெருமையை பெற்ற இஸ்ஸி வோங், மும்பை அணியை 72 ரன்கள் வித்தியாசத்தில் மிகப் பெரிய வெற்றியை பெறுவதற்கு காரணமாக அமைந்தார். இறுதி போட்டியில் டெல்லி அணியை எதிர்கொள்கிறது மும்பை இந்தியன்ஸ்.

மகளிர் ஐபிஎல் தொடரில் முதல் ஹாட்ரிக் வீழ்த்திய பெளலர் என்ற பெருமையை பெற்ற இஸ்ஸி வோங், மும்பை அணியை 72 ரன்கள் வித்தியாசத்தில் மிகப் பெரிய வெற்றியை பெறுவதற்கு காரணமாக அமைந்தார். இறுதி போட்டியில் டெல்லி அணியை எதிர்கொள்கிறது மும்பை இந்தியன்ஸ்.

ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை அணி நாட் ஸ்கிவர்-பிரண்ட் அதிரடி, அமெலியா கெர் கேமியோ ஆட்டத்தால் 182 ரன்கள் குவித்தது. இதையடுத்து 183 ரன்கள் என இமாலய இலக்கை யுபி வாரியர்ஸ் அணி சேஸ் செய்ய களமிறங்கியது

ட்ரெண்டிங் செய்திகள்

ISL 2024 Final: ஐபிஎல்-இல் விட்டதை ஐஎஸ்எல்-இல் பிடித்த மும்பை! இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம்

ISL 2024 Final: மூன்றாவது கோப்பையை எதிர்நோக்கும் மும்பை சிட்டி! பழிதீர்க்க காத்திருக்கும் மோகன் பகான் - இன்று பைனல்

Mallika Nadda: ஸ்பெஷல் ஒலிம்பிக் ஆசிய பசிபிக் ஆலோசனை கவுன்சில் தலைவராக மல்லிகா நட்டா நியமனம்

Olympic Qualifiers: ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் பங்கேற்க சர்வதேச பயிற்சி: நன்றி தெரிவித்த ஃபென்சர் தனிக்ஷா

ஆனால் அந்த அணிக்கு தொடக்கமே மோசமாக அமைந்தது. டாப் ஆர்டர் பேட்டர்கள் ஸ்வேதா செஹ்ராவத் 1, கேப்டன் அலிசா ஹீலி 11 ரன்னில் அவுட்டாகினர். சிறிது நேரம் கழித்து தஹிலா மெக்ராத் 7 ரன்னில் நடையை கட்ட, மூன்று முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதையடுத்து அணியை சரிவிலிருந்து மீட்டார் கிரண் நவ்கிரே. அவருடன் க்ரேஸ் ஹாரிஸ் பார்ட்னர்ஷிப் அமைத்தார். ஆனாலும் இந்த இணை நீண்ட நேரம் நீடிக்கவில்லை. ஹாரிஸ் 14 ரன்னில் அவுட்டானார்.

ஒரு புறம் விக்கெட்டுகளை சரிந்தாலும் பவுண்டரி, சிக்ஸர் என அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கிரண் நவ்கிரே 43 ரன் எடுத்தபோது, மும்பை வேகப்பந்து வீச்சாளர் வோங் அவரது விக்கெட்டு தூக்கினார்.  அவரது விக்கெட்டோடு இல்லாமல் சிம்ரன் ஷேக், சோஃபி எக்லெஸ்டோன் ஆகியோரின் விக்கெட்டுகளையும் அடுத்தடுத்து வீழ்த்தி, மகளிர் ஐபிஎல் தொடரில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த முதல் வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.

யுபி வாரியர்ஸ் தோல்வி உறுதியான நிலையில், அனைத்து முக்கிய விக்கெட்டுகளை வீழ்ந்தபோதிலும் பொறுமையாக பேட் செய்து ரன்குவிப்பில் ஈடுபட்டு வந்த தீப்தி ஷர்மா, 16 ரன்னில் பெவிலியன் திரும்பினார். இவரைத்தொடர்ந்து அஞ்சலி சர்வானி, ராஜேஸ்வர் கெய்க்வாட் ஆகியோரும் நடையகட்ட 17.4 ஓவரில் 110 ரன்களுக்கு யுபி வாரியர்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் 72 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றதுடன், இறுதிப்போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக விளையாடவுள்ளது.

வேகத்தால் மிரட்டிய இஸ்ஸி வோங் வெறும் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பேட்டிங்கில் கலக்கிய நாட் ஸ்கிவர்-பிரண்ட், பந்துவீச்சிலும் ஒரு விக்கெட் வீழ்த்தி ஆட்டநாயகி விருதை தட்டி சென்றார்.

முதல் மகளிர் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை டெல்ல கேபிடல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் இடையே பார்போர்ன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

டாபிக்ஸ்