Manu Bhaker: துப்பாக்கி சுடுதலில் முதல் ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீராங்கனை..! மனு பாக்கரின் சுவாரஸ்ய பின்னணி கதை
Jul 29, 2024, 10:30 AM IST
ப்பாக்கி சுடுதலில் முதல் ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீராங்கனை என்ற பெருமையை பெற்றிருக்கும் மனு பாக்கர், இந்தியாவின் 12 ஆண்டு கால பதக்க காத்திருப்பை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார். மனு பாக்கரின் சுவாரஸ்ய பின்னணி கதை பற்றி பார்க்கலாம்
பாரிஸ் ஒலிம்பிக் 2024 போட்டிகளில் துப்பாக்கி சுடுதலில் வெண்கலம் வென்று இந்தியாவுக்கான பதக்க கணக்கை தொடங்கியுள்ளார் 22 வயதாகும் இளம் துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான மனு பாக்கர்.
ஞாயிற்றுக்கிழமை நடந்த பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் பதக்கத்தை வென்றார் மனு பாக்கர். இந்தியாவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பதக்கப் போட்டியாளர்ராக திகழ்ந்த மனு பாக்கர், தனது மீதான எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளார்.
ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை
துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்காக ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் பெண்மணி என்ற பெருமையைப் மனு பாக்கர் பெற்றுள்ளார். கடந்த 2016இல் ரியோ மற்றும் 2020இல் டோக்கியோ இந்தியா துப்பாக்கி சுடுதலில் பதக்கம் வெல்லாமல் போனாது. இதையடுத்து மனு வென்றிருக்கும் பதக்கம், ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுவதில் இந்தியாவின் 12 ஆண்டு கால பதக்க வறட்சியை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.
துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு பதக்கத்தை மீட்டெடுத்து கொடுத்த மனு பாக்கர், 221.7 புள்ளிகளை பெற்றார். 0.1 புள்ளி கணக்கில் வெற்றி கணக்கை கோட்டை விட்டார். இருப்பினும் இந்தியாவுக்காக இந்த ஒலிம்பிக்கில் அவர் முதல் பதக்கத்தை வென்றிருப்பதற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
மனு பாக்கர் பின்னணி
ஹரியானா மாநிலத்தை சேர்ந்த மனு பாக்கர் துப்பாக்கி சுடுதலில் 16 வயதிலேயே காமன்வெல்த் தங்க பதக்கம், யூத் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவராக இருந்துள்ளார். பொதுவாக ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர்களில் பலர் மல்யுத்தம், பாக்ஸிங் போன்ற போர்க்குணம் நிறைந்த விளையாட்டுகளில் ஈடுபாடு மிக்கவர்களாக இருப்பார்கள். ஆனால் இதிலிருந்து மாறுபட்டு மனு பாக்கர் துப்பாக்கி சுடுதலில் தன்னை ஈடுபடுத்தி கொண்டு நட்சத்திர வீரராக உருவெடுத்துள்ளார்.
பாக்கரின் துப்பக்கி சுடுதல் பயணம் சுவாரஸ்யம் மிக்கது. பன்முக தடகள வீராங்கனையாக திகழ்ந்த அவர், டென்னிஸ், ஸ்கேட்டிங் மற்றும் தற்காப்புக் கலையான தாங்டா ஆகியவற்றிலும் தேர்ந்தவராக திகழ்ந்தார். இதில் தேசிய அளவில் அங்கீகாரங்களையும் பெற்றார். ஆயினும்கூட, 2016 ரியோ ஒலிம்பிக்கில் தூண்டப்பட்ட தூண்டுதலில் தனது பாதையை திசைதிருப்பினார்.
தேசிய அளவில் முதல் வெற்றி
பதினான்கு வயதில், பாக்கரின் மனது விளையாட்டுகளில் மீது அலைபாய்ந்தது. ஏறக்குறைய மனக்கிளர்ச்சியான முடிவோடு, ஒரு கைத்துப்பாக்கியை வாங்கும்படி அவர் தந்தையை சமாதானப்படுத்தியுள்ளார். அவரது திறமையால் அடுத்தடுத்த உயரங்களை எட்டினார்.
தேசிய சாம்பியன்ஷிப்பில் அனுபவம் வாய்ந்த ஒலிம்பிக் வீராங்கனை ஹீனா சித்துவுக்கு எதிரான ஒரு அற்புதமான வெற்றி, அவரது வருகையை அறிவித்தது.
அதைத் தொடர்ந்து சர்வதேச அங்கீகாரம் வேகமாக வந்தது. ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் தொடங்கி ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தோல்வியடைந்தது வரை, பாக்கரின் பயணம் வெற்றிகள் மற்றும் தோல்விகள் கலந்த கலவையாக இருந்தது.
இந்தியாவுக்கான முதல் தங்கம்
யூத் ஒலிம்பிக்கில் அவரது பொன்னான தருணம்தான், துப்பாக்கி சுடும் வீராங்கனை என்ற அந்தஸ்தை உறுதிப்படுத்தியது. தனது 16 வயதில், துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் முதல் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்றவர் ஆனார், இது அவரை தேசிய நட்சத்திரமாக உயர்த்தியது.
அனுபவமிக்க துப்பாக்கி சுடும் வீரர் ஜஸ்பால் ராணாவின் வழிகாட்டுதலால், பாக்கரின் ஏற்றம் தொடர்ந்தது. ஒலிம்பிக் தேர்வு சோதனைகளில் ஆதிக்கம் மிக்க செயல்திறன் இந்திய துப்பாக்கி சுடும் அணியில் அவரது இடத்தை உறுதிப்படுத்தியது, டோக்கியோவில் அவரது ஒலிம்பிக் அறிமுகத்துக்கு களம் அமைத்தது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
டாபிக்ஸ்