தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Umran Malik To Replace Shami: ஷமிக்கு காயம்: மாற்றாக உம்ரான் மாலிக் அறிவிப்பு!

Umran Malik to replace Shami: ஷமிக்கு காயம்: மாற்றாக உம்ரான் மாலிக் அறிவிப்பு!

Dec 03, 2022, 12:16 PM IST

அகில இந்திய மூத்த தேர்வுக் குழு கூடி, ஷமிக்கு பதிலாக மாற்று வீரரை தேர்வு செய்யும் பணியில் இறங்கியது. அதன் அடிப்படையில் இளம் வேகப்பந்து வீச்சாளரான உம்ரான் மாலிக்கை, முகமது ஷமிக்கு பதிலாக நியமித்துள்ளது
அகில இந்திய மூத்த தேர்வுக் குழு கூடி, ஷமிக்கு பதிலாக மாற்று வீரரை தேர்வு செய்யும் பணியில் இறங்கியது. அதன் அடிப்படையில் இளம் வேகப்பந்து வீச்சாளரான உம்ரான் மாலிக்கை, முகமது ஷமிக்கு பதிலாக நியமித்துள்ளது

அகில இந்திய மூத்த தேர்வுக் குழு கூடி, ஷமிக்கு பதிலாக மாற்று வீரரை தேர்வு செய்யும் பணியில் இறங்கியது. அதன் அடிப்படையில் இளம் வேகப்பந்து வீச்சாளரான உம்ரான் மாலிக்கை, முகமது ஷமிக்கு பதிலாக நியமித்துள்ளது

இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு பதிலாக உம்ரான் மாலிக் இந்திய ஒருநாள் அணியில் அறிவிக்கப்பட்டுள்ளார்.

ட்ரெண்டிங் செய்திகள்

ISL 2024 Final: ஐபிஎல்-இல் விட்டதை ஐஎஸ்எல்-இல் பிடித்த மும்பை! இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம்

ISL 2024 Final: மூன்றாவது கோப்பையை எதிர்நோக்கும் மும்பை சிட்டி! பழிதீர்க்க காத்திருக்கும் மோகன் பகான் - இன்று பைனல்

Mallika Nadda: ஸ்பெஷல் ஒலிம்பிக் ஆசிய பசிபிக் ஆலோசனை கவுன்சில் தலைவராக மல்லிகா நட்டா நியமனம்

Olympic Qualifiers: ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் பங்கேற்க சர்வதேச பயிற்சி: நன்றி தெரிவித்த ஃபென்சர் தனிக்ஷா

பங்களாதேஷ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அந்நாட்டு கிரிக்கெட் அணியுடன் மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் இரு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற உள்ளது.

முதல் ஒரு நாள் போட்டி, நாளை தொடங்க உள்ள நிலையில், நேற்று முதல் இந்திய கிரிக்கெட் அணியினர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தீவிர பந்து வீச்சு பயிற்சியில் ஈடுபட்ட இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.

உடனே இந்தியா அழைத்து வரப்பட்ட அவர் தற்போது பெங்களூருவில் உள்ள என்சிஏவில் பிசிசிஐ மருத்துவக் குழுவின் மேற்பார்வையில் உள்ளார். அவரை தொடர்ந்து ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்திள்ளனர். இதனால் அவர் முதல் மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க முடியாது.

இதைத் தொடர்ந்து அகில இந்திய மூத்த தேர்வுக் குழு கூடி, ஷமிக்கு பதிலாக மாற்று வீரரை தேர்வு செய்யும் பணியில் இறங்கியது. அதன் அடிப்படையில் இளம் வேகப்பந்து வீச்சாளரான உம்ரான் மாலிக்கை, முகமது ஷமிக்கு பதிலாக நியமித்துள்ளது.

இந்த தகவலை இந்திய கிரிக்கெட் வாரிய கவுரவ செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார்.

வங்கதேச ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி விபரம்:

ரோஹித் சர்மா (கேப்டன்ச)

கே.எல். ராகுல் (துணை கேப்டன்)

ஷிகர் தவான்

விராட் கோலி

ரஜத் படிதார்

ஷ்ரேயாஸ் ஐயர்

ராகுல் திரிபாதி

ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்)

இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்),

ஷாபாஸ் அகமது

அக்சர் படேல்

வாஷிங்டன் சுந்தர்

ஷர்துல் தாக்கூர்

தீபக் சாஹர்

குல்தீப் சென்

உம்ரான் மாலிக்

ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர். 

டாபிக்ஸ்