தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Rohit Sharma: மைதானத்தில் திடீரென நுழைந்த சிறுவன்: பதறிப்போன ரோஹித் சர்மா!

Rohit Sharma: மைதானத்தில் திடீரென நுழைந்த சிறுவன்: பதறிப்போன ரோஹித் சர்மா!

Jan 21, 2023, 06:46 PM IST

சிறுவன் துரத்திக்கொண்டு பின்னால் வந்த பாதுகாப்பு அதிகாரி, ரோஹித்தை அணைத்துக் கொண்டிருந்த சிறுவனை முட்டி மோதி அவரிடம் இருந்து பிரித்தார்.
சிறுவன் துரத்திக்கொண்டு பின்னால் வந்த பாதுகாப்பு அதிகாரி, ரோஹித்தை அணைத்துக் கொண்டிருந்த சிறுவனை முட்டி மோதி அவரிடம் இருந்து பிரித்தார்.

சிறுவன் துரத்திக்கொண்டு பின்னால் வந்த பாதுகாப்பு அதிகாரி, ரோஹித்தை அணைத்துக் கொண்டிருந்த சிறுவனை முட்டி மோதி அவரிடம் இருந்து பிரித்தார்.

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டி சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் இன்று நடைபெற்றது. முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி, இந்திய அணியின் அபார பந்துவீச்சால் விரைவில் ஆட்டமிழந்ததது. 

ட்ரெண்டிங் செய்திகள்

FIFA WC 26 qualifiers: இரண்டாவது பட்டியலை வெளியிட்டார் இந்திய தலைமைப் பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக்

Madrid Open Tennis: மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி: முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ரூப்லேவ்

ISL 2024 Final: ஐபிஎல்-இல் விட்டதை ஐஎஸ்எல்-இல் பிடித்த மும்பை! இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம்

ISL 2024 Final: மூன்றாவது கோப்பையை எதிர்நோக்கும் மும்பை சிட்டி! பழிதீர்க்க காத்திருக்கும் மோகன் பகான் - இன்று பைனல்

108 ரன்கள் மட்டுமே எடுத்த நியூசிலாந்து அணியின் எளிய இலக்கை நோக்கி, இரண்டாவதாக களமிறங்கிய இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர், பொறுமையாகவும், அதே நேரத்தில் அடிக்க வேண்டிய பந்துகளை அடித்தும் ரன்களை சேர்த்தனர். 

குறிப்பாக, இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, சிறப்பாக ஆடி அரை சதம் அடித்தார். ராய்பூர் மைதானத்தில் நடைபெறும் முதல் ஒரு நாள் போட்டி இது என்பதால், சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள், மைதானம் முழுக்க குவிந்து இருந்தனர். 

அவர்களை உற்சாகப்படுத்த ரோஹித் சர்மா அவ்வப்போது பவுண்டரிகளை பறக்கவிட்டுக்கொண்டிருந்தார்.  குறிப்பாக, டிக்னர் வீசிய 10வது ஓவரில் முதல் இரு பந்துகளில் ரன் அடிக்காத ரோஹித் சர்மா, அடுத்தடுத்து இரு பந்துகளில் 4 மற்றும் 6 ரன்களை விளாசினார். 

இதனால் மைதானத்தில் ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். அப்போது 15 வயது நிரம்பிய சிறுவன் ஒருவன், திடீரென மைதானத்திற்கு உள்ளே நுழைந்தான். ஆடுகாளத்தில் நின்று கொண்டிருந்த ரோஹித் சர்மாவை நோக்கி ஓடிவந்த அந்த சிறுவன், அவரை கட்டியணைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான். 

கடும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் அந்த சிறுவன் உள்ளே நுழைந்ததை ரோஹித் சர்மா உள்ளிட்ட யாருமே எதிர்பார்க்கவில்லை. ஒரு நொடி ரோஹித் அதிர்ந்து போனார். சிறுவனை துரத்திக்கொண்டு பின்னால் வந்த பாதுகாப்பு அதிகாரி, ரோஹித்தை அணைத்துக் கொண்டிருந்த சிறுவனை ஒரே முட்டாக முட்டி மோதி, அவரிடம் இருந்து பிரித்தார். 

அந்த சிறுவனை மடக்கி பிடித்த போது, ‘சின்னப்பையன் விட்டு விடுங்க’ என்று ரோஹித் சர்மா கூற, அதன் பின் அந்த சிறுவனை அங்கிருந்து பாதுகாப்பு அதிகாரி வெளியேற்றினார். திடீரென நடந்த இந்த சம்பவத்தை பெவிலியனில் அமர்ந்திருந்த இந்திய வீரர்கள் ரசித்து மகிழ்ந்தனர். அதே போல, மைதானத்தில் இருந்த ரசிகர்களும் ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இருப்பினும் இந்த சம்பவத்தால் பாதுகாப்பு அதிகாரிகள் பதறிப்போயினர். 

டாபிக்ஸ்