தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Matheesha Pathirana: இலங்கை அணிக்காக Odi தொடரில் அறிமுகமாகும் 'ஜூனியர் மலிங்கா'

Matheesha Pathirana: இலங்கை அணிக்காக ODI தொடரில் அறிமுகமாகும் 'ஜூனியர் மலிங்கா'

Manigandan K T HT Tamil

Jun 01, 2023, 12:52 PM IST

google News
Srilanka vs Afghanistan: பதிரானாவுக்கு 20 வயது தான் ஆகிறது. ஆனால், ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் தனது சிறந்த பந்துவீச்சு திறனால் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.
Srilanka vs Afghanistan: பதிரானாவுக்கு 20 வயது தான் ஆகிறது. ஆனால், ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் தனது சிறந்த பந்துவீச்சு திறனால் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.

Srilanka vs Afghanistan: பதிரானாவுக்கு 20 வயது தான் ஆகிறது. ஆனால், ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் தனது சிறந்த பந்துவீச்சு திறனால் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.

ஆப்கனுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது. முதல் ஒரு நாள் கிரிக்கெட்டில் சிஎஸ்கேவில் கலக்கிய பதிரானா இலங்கையில் அணியில் அறிமுகமாகிறார்.

இவர் ஏற்கனவே கடந்த ஆண்டு இலங்கை டி20 அணியில் இடம்பிடித்துவிட்டார். தற்போது சிஎஸ்கேவில் டெத் ஓவரில் கலக்கிய பதிரானா ஒரு நாள் தொடரில் அறிமுகமாகிறார்.

மொத்தம் 12 ஆட்டங்களில் சிஎஸ்கேவில் பந்துவீசிய பதிரானா 19 விக்கெட்டுகளை சாய்த்தார். எதிரணியின் ரன் வேகத்துக்கும் முட்டுக்கட்டைப் போட்டார்.

இவரை மிகவும் ஊக்கப்படுத்தினார் சிஎஸ்கே கேப்டன் தோனி. இலங்கை முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா ஸ்டைலிஸ் ஓடிவந்து சிறப்பாக யார்க்கர் பந்துவீசக் கூடிய பதிரானாவுக்கு ஒரு நாள் தொடரில் இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் வாய்ப்பு வழங்கியிருக்கிறது.

உலகக் கோப்பை தகுதிச்சுற்றில் பதிரானா சிறப்பாக செயல்படுவார் என இலங்கை நம்பியிருக்கிறது. 1996ம் ஆண்டு இலங்கை அணி உலகக் கோப்பையை வென்றிருக்கிறது. இரண்டு முறை ரன்னர் அப் ஆகியிருக்கிறது.

இலங்கைக்கு ஆப்கானிஸ்தான் அணி சுற்றுப் பயணம் மேற்கொள்கிறது. நாளை முதல் 3 ஒரு நாள் ஆட்டங்கள் கொண்ட தொடரில் இரு அணிகளும் விளையாடுகின்றன.

ஹம்பன்தோட்டாவில் நாளை காலை 10 மணிக்கு முதல் ஒரு நாள் போட்டி நடைபெறவுள்ளது.

போன்று போட்டிகளுமே அம்பன்தோட்டாவில் நடக்கிறது. இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் ஜூன் 4ம் தேதியும், மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி ஜூன் 7ம் தேதியும் நடைபெறுகிறது.

சிஎஸ்கேவுக்காக டெத் ஓவர்களில் சிறப்பாக பந்துவீசிய பதிரானா

ஹஷ்மதுல்லா ஷாஹிதி ஆப்கானிஸ்தானை ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் வழிநடத்துகிறார். முஜீப் உர் ரகுமான், நூர் அகமது, முகமது நபி ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் நெருங்கி வரும் நிலையில் இந்தத் தொடர் இலங்கைக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக தெரிகிறது.

இலங்கை அணி ஐசிசி தரவரிசையில் 9வது இடத்தில் இருப்பதால் உலகக் கோப்பைக்கு இன்னும் தகுதி பெறவில்லை. ஜிம்பாப்வேயில் விரைவில் நடைபெறவுள்ள தகுதிச்சுற்றுப் போட்டியில் இலங்கை விளையாடவுள்ளது.

இலங்கையை தசன் ஷனகா வழிநடத்துகிறார். பதும் நிசங்கா, குசல் மென்டிஸ், ஏஞ்செலோ மாத்யூஸ், மஹீஷ் தீக்ஷனா உள்ளிட்ட வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.

டாபிக்ஸ்

மேலும் பேட்மிண்டன், டென்னிஸ், கபடி, கால்பந்து, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.
அடுத்த செய்தி