தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Fifa Wc 2022:அர்ஜெண்டினாவை வீழ்த்திய சவூதி வீரர்களுக்கு ரோல்ஸ்ராய்ஸ் கார் பரிசு

FIFA WC 2022:அர்ஜெண்டினாவை வீழ்த்திய சவூதி வீரர்களுக்கு ரோல்ஸ்ராய்ஸ் கார் பரிசு

I Jayachandran HT Tamil

Nov 26, 2022, 07:03 AM IST

பிபா உலகக்கோப்பை 2022ல் அர்ஜெண்டினா அணியை வீழ்த்திய சவூதி அரேபிய வீரர்கள் அனைவருக்கும் ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளிக்கப்படுகிறது.
பிபா உலகக்கோப்பை 2022ல் அர்ஜெண்டினா அணியை வீழ்த்திய சவூதி அரேபிய வீரர்கள் அனைவருக்கும் ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளிக்கப்படுகிறது.

பிபா உலகக்கோப்பை 2022ல் அர்ஜெண்டினா அணியை வீழ்த்திய சவூதி அரேபிய வீரர்கள் அனைவருக்கும் ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளிக்கப்படுகிறது.

ரோல்ஸ்ராய்ஸ் கார்
ட்ரெண்டிங் செய்திகள்

ISL 2024 Final: ஐபிஎல்-இல் விட்டதை ஐஎஸ்எல்-இல் பிடித்த மும்பை! இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம்

ISL 2024 Final: மூன்றாவது கோப்பையை எதிர்நோக்கும் மும்பை சிட்டி! பழிதீர்க்க காத்திருக்கும் மோகன் பகான் - இன்று பைனல்

Mallika Nadda: ஸ்பெஷல் ஒலிம்பிக் ஆசிய பசிபிக் ஆலோசனை கவுன்சில் தலைவராக மல்லிகா நட்டா நியமனம்

Olympic Qualifiers: ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் பங்கேற்க சர்வதேச பயிற்சி: நன்றி தெரிவித்த ஃபென்சர் தனிக்ஷா

ரியாத்: கத்தாரில் நடைபெற்றுவரும் 2022ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜெண்டினாவை சவூதி அரேபியா அணி அதிரடியாக தோற்கடித்தது.

இதைப் பாராட்டும் விதமாகவும் வீரர்களை ஊக்குவிக்கும் நோக்கத்திலும் சவூதி அரேபியா அணியில் இடம்பெற்ற அனைத்து வீரர்களுக்கும் ஒரு ரோல்ஸ்ராய்ஸ் கார் பரிசாக வழங்கப்படும் என சவூதி அரேபியா அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பைக் கேட்டதும் சவூதி வீரர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். அடுத்தடுத்த போட்டிகளிலும் இதேபோல் வெற்றிகளைக் குவிப்போம் எனக் கூறினர்.

போட்டி முடிந்த தாயகம் திரும்பியதும் அவர்களுக்கு ரோல்ஸ் ராய்ஸ் காரை சவூதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சலமான் அல் சவூத் வழங்கவிருக்கிறார் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

எல்லா வீரர்களுக்குமே RM6 million Rolls Royce Phantom கார் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

கத்தாரில் உள்ள லுசாய்ல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பிபா உலகக்கோப்பையை இரண்டு முறை கைப்பற்றிய சாம்பியனான அர்ஜெண்டினாவை சவூதி அரேபியா அணி அதிரடியாக விளையாடி தோற்கடித்தது.

உலகக்கோப்பை வரலாற்றில் அர்ஜெண்டினாவுக்கு கிடைத்த மிகப்பெரிய அதிர்ச்சி இது என்றும், இந்தாண்டின் சிறந்த சாதனையென்றும் உலகளவில் கால்பந்து ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

டாபிக்ஸ்