தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Poovamma Failed Dope Test:ஊக்கமருந்து பரிசோதனை தோல்வி! பூவம்மாவுக்கு 2 ஆண்டு தடை

poovamma failed dope test:ஊக்கமருந்து பரிசோதனை தோல்வி! பூவம்மாவுக்கு 2 ஆண்டு தடை

Sep 21, 2022, 03:07 PM IST

இந்திய தடகள வீராங்கனை பூவம்மாவுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த 3 மாத தடை, தற்போது 2 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஊக்கமருந்து பயன்படுத்திய விவகாரத்தில் அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்ப்டடுள்ளது.

கடந்த ஆண்டு தேசிய அளவிலான தடகள தொடரான இந்தியா கிராண்ட் ப்ரீ 1 தடகள போட்டியில் பங்கேற்றார் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பூவம்மா ராஜு. இந்த போட்டிகளின்போது அவர் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக கூறப்பட்ட நிலையில், தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பான நாடா (NADA), பூவம்மாவிடமிருந்து மாதிரிகை சேகரித்தன.

ட்ரெண்டிங் செய்திகள்

ISL 2024 Final: ஐபிஎல்-இல் விட்டதை ஐஎஸ்எல்-இல் பிடித்த மும்பை! இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம்

ISL 2024 Final: மூன்றாவது கோப்பையை எதிர்நோக்கும் மும்பை சிட்டி! பழிதீர்க்க காத்திருக்கும் மோகன் பகான் - இன்று பைனல்

Mallika Nadda: ஸ்பெஷல் ஒலிம்பிக் ஆசிய பசிபிக் ஆலோசனை கவுன்சில் தலைவராக மல்லிகா நட்டா நியமனம்

Olympic Qualifiers: ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் பங்கேற்க சர்வதேச பயிற்சி: நன்றி தெரிவித்த ஃபென்சர் தனிக்ஷா

இதைத்தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் முடிவில் உலக ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு வாடா (WADA) தடை செய்திருந்த ஊக்க மருந்தை அவர் பயன்படுத்தியது தெரியவந்தது.

இதனால் கடந்த ஜூன் மாதம் ஊக்கமருந்து தடுப்பு நடவடிக்கை குழு பூவம்மாவுக்கு 3 மாதம் தடை விதித்தது. இதற்கு எதிராக நாடா மேல் முறையீடு செய்தததை தொடர்ந்து பூவம்மாவுக்கு விதிக்கப்பட்ட தடைக்காலம் 2 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

தற்போது பூவம்மா ஊக்கமருந்து பயன்படுத்தியிருப்பது உறுதியாகியுள்ளதால், இந்திய கிராண்ட் ப்ரீ 1 மற்றும் 2 ஆகியவற்றில் வென்ற வெள்ளி பதக்கங்கள் பறிமுல் செய்யப்படும்.