தமிழ் செய்திகள்  /  Sports  /  Pujara Smashes Incredible 174 Off Just 131 Balls For Sussex In Royal London One Day Cup

டெஸ்ட் பேட்ஸ்மேன் புஜாராவின் ருத்ரதாண்டவம்! 174 ரன்கள் குவிப்பு

Aug 15, 2022, 03:34 PM IST

இதுவரை இல்லாத அளவு மிரட்டலான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ள புஜாரா, 131 பந்தில் 174 ரன்கள் அடித்துள்ளார். இதில் 20 பவுண்டரி, 5 சிக்ஸர் என 132.82 ஸ்டிரைக் ரேட் பெற்று சர்ரெ அணிக்கு எதிரான இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் ஆட்டத்தில் ரன் குவித்துள்ளார்.

இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட் விளையாடி வரும் இந்திய டெஸ்ட் பேட்ஸ்மேன் சட்டீஸ்வர் புஜாரா, ராயல் லண்டன் ஒரு நாள் போட்டியில் சசெக்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அந்த அணியின் கேப்டனாகவும் இருந்து வரும் இவர் சர்ரெ அணிக்கு எதிரான போட்டியில் இதுவரை இல்லாத அளவில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Chennaiyin FC: சென்னையின் எஃப்சி கேப்டனாக 2025 வரை நீடிக்கப்போவது இந்தப் பிளேயர் தான்!

Archery World Cup: நான்கு தங்க பதக்கங்களை அள்ளிய இந்திய அணி! தங்கம் வென்றார் வில் வித்தை வீராங்கனை ஜோதி சுரேகா

PKL: 'சீசன் 1 முதல் பி.கே.எல்லின் ஒரு பகுதியாக இருக்க கனவு கண்டோம்': ஆங்கில கபடி வீரர்கள் பேட்டி

D Gukesh: ரசிகர்களின் அன்பால் திக்குமுக்காடிப்போன சென்னையைச் சேர்ந்த இளம் செஸ் வீரர் டி.குகேஷ்!-வைரல் வீடியோ

பேட்டில் பட்டதெல்லாம் பவுண்டரி என சொல்லும் விதமாக நாலபுறமும் பவுண்டரி சிக்ஸர்களாக விளாசி தள்ளிய அவர் 131 பந்துகளில் 174 ரன்கள் குவித்தார்.

புஜாரா அதிரடியால் சசெக்ஸ் அணி 50 ஓவரில் 378 ரன்கள் குவித்தது. அதேபோல் தனது சிறப்பான கேப்டன்சி மூலம் சர்ரெ அணியை 162 ரன்களில் ஆல் அவுட்டாக்கி 216 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை பெற செய்தார்.

புஜாரா இந்த தொடரில் ஆரம்பத்திலிருந்தே நல்ல பார்மில் இருந்து வருகிறார். தற்போது ஐந்து இன்னிங்ஸில் 367 ரன்கள் குவித்து, இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் எடுத்த வீரராக உள்ளார்.

இந்தத் தொடரில் புஜாராவின் சராசரி 91.75 எனவும், ஸ்டிரைக் ரேட் 120.72 எனவும் உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் டாப் ஆர்டர் டெஸ்ட் பேட்ஸ்மேனாக இருந்து வரும் புஜாரா மோசமான பார்ம் காரணமாக இந்த ஆண்டு தொடக்கத்தில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் பங்கேற்ற அவர் தனது பார்மை மீட்டடெடுத்தது மட்டுமில்லாமல் கணிசமான ரன்களையும் குவித்து வருகிறார்.

முதலில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜொலித்த அவர், தற்போது ஒரு நாள் போட்டியிலும் சிறப்பாக பேட் செய்த ரன் குவிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

டாபிக்ஸ்