தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Netherlands: நெதர்லாந்து அணிக்காக சதம் விளாசிய இந்திய வம்சாவளி வீரர்!

Netherlands: நெதர்லாந்து அணிக்காக சதம் விளாசிய இந்திய வம்சாவளி வீரர்!

Manigandan K T HT Tamil

Jul 03, 2023, 05:40 PM IST

google News
Netherlands: அவர் 109 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 11 ஃபோர்ஸ் உள்பட 110 ரன்களை அடித்தார். (@ICC)
Netherlands: அவர் 109 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 11 ஃபோர்ஸ் உள்பட 110 ரன்களை அடித்தார்.

Netherlands: அவர் 109 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 11 ஃபோர்ஸ் உள்பட 110 ரன்களை அடித்தார்.

50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு இந்தியாவில் அக்டோபர்-நவம்பரில் நடக்கவுள்ளது.

இந்தப் போட்டியில் ஏற்கனவே இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் தேர்வாகிவிட்டன. எஞ்சிய 2 அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் ஜிம்பாப்வேவில் நடந்து வருகிறது.

லீக் சுற்று முடிந்து சூப்பர் சிக்ஸ் போட்டிகள் நடந்து வருகின்றன.

சூப்பர் சிக்ஸ் போட்டியில் இன்று நடந்த 5வது ஆட்டத்தில் நெதர்லாந்து-ஓமன் ஆகிய அணிகள் மோதி வருகின்றன.

ஹராரேவில் நடந்துவரும் இந்தப் போட்டியில் ஓமன் டாஸ் ஜெயித்து பவுலிங்கைத் தேர்வு செய்தது.

இதையடுத்து நெதர்லாந்து முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 48 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 362 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக தொடக்க வீரர் விக்ரம்ஜித் சிங், சதம் விளாசினார். அவர் 109 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 11 ஃபோர்ஸ் உள்பட 110 ரன்களை அடித்தார்.

இது அவருக்கு ஒரு நாள் கிரிக்கெட்டில் முதல் சதம் ஆகும். வெஸ்லி பரெஸி 97 ரன்கள் அடித்து சதம் பதிவு செய்யும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டார். 363 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஓமன் விளையாடி வருகிறது.

இவர் இந்தியாவில் பிறந்தவர் ஆவார். பின்னர் அவரது குடும்பம் நெதர்லாந்தில் குடியேறியது. இதனால், அந்த நாட்டின் குடியுரிமையும் அவருக்கு கிடைத்தது. தற்போது 20 வயது ஆகும் அவர், நெதர்லாந்து அணிக்காக விளையாடி வருகிறார்.

சிங் தனது 15 வயதில் நெதர்லாந்து ஏ அணிக்காக அறிமுகமானார்.

அதிகபட்சமாக ஓமன் பவுலர் பிலால் கான் 3 விக்கெட்டுகளையும் முகமது நதீம் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

முன்னதாக, உலகக் கோப்பை போட்டிக்கு இலங்கை தகுதி பெற்றது. சூப்பர் சிக்ஸ் பிரிவில் ஜிம்பாப்வே அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம், இலங்கை தகுதி பெற்றது.

வெஸ்ட் இண்டீஸ் வெளியேறியது. அந்த அணி முதல் முறையாக உலகக் கோப்பை தகுதி பெற முடியாமல் போனது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்றில் ஸ்காட்லாந்து அணியிடம் அதிர்ச்சி தோல்வி கண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி முதல்முறையாக உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி