தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Cricket World Cup 2023: பிசிசிஐ-க்கு செக் வைக்கும் பாகிஸ்தான்! பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்க குழு அனுப்ப முடிவு

Cricket World Cup 2023: பிசிசிஐ-க்கு செக் வைக்கும் பாகிஸ்தான்! பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்க குழு அனுப்ப முடிவு

Jul 01, 2023, 07:13 PM IST

  • இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் விளையாடும் போட்டிகளின் மைதானங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்கு பாதுகாப்பு குழுவை அனுப்பவுள்ளது. இந்த பாதுகாப்பு குழு சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், கொல்கத்தா, அகமதாபாத் ஆகிய மைதானங்களில் இந்த குழுவினர் பாதுகாப்பை ஏற்பாடுகளை ஆய்வு செய்யவுள்ளனர். இந்த குழு அனுமதி அளித்த பின்னர் பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் செல்ல முடியாது என பிசிசிஐ மறுப்பு தெரிவித்த நிலையில், தற்போது உலகக் கோப்பை நடைபெறும் இந்தியாவில் பாகிஸ்தான் விளையாடும் மைதானங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆய்வு செய்யப்படவுள்ளது. பிசிசிஐ மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தொடர்ந்து பாதுகாப்பு குறைபாடுகளை முன்னிருத்தி கருத்துகளை தெரிவித்து வருகின்றன. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இந்த முறை பாகிஸ்தானில் நடைபெறுவதாக இருந்த நிலையில், பாதுகாப்பை காரணம் காட்டி பிசிசிஐ போட்டி நடைபெறும் இடத்தையே மாற்றியது. இப்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பிசிசிஐ போல் பாதுகாப்பு பிரச்னை கையிலெடுத்துள்ளது. இதன் விளைவாக பாகிஸ்தானில் இருந்து பாதுகாப்பு தூதர்கள் இந்தியாவுக்கு சென்று அந்த அணி விளையாடும் 5 மைதானங்களில் ஆய்வு செய்யவுள்ளனர். இனி இந்தியாவுக்கு மேற்கொள்ளும் சுற்றுப்பயணங்களில் அரசு சார்பில் அனுப்பப்படும் பாதுகாப்பு தூதர்கள் குழிவின் அனுமதி பெற்ற பிறகு பயணத்தை தொடர வேண்டும் என்பதை நடைமுறைக்கு கொண்டு வரும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பாதுகாப்பு குழு வீரர்கள், அணி நிர்வாகிகள், ரசிகர்கள், ஊடகத்தை சேர்ந்தவர்களின் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து விவாதித்து, உரிய உத்தரவாதம் பெறும் என கூறப்படுகிறது. இந்த ஆய்வில் பாகிஸ்தான் அணி வேறொரு மைதானத்தில் விளையாட விரும்பினால் தங்களது அறிக்கையில் குறிப்பிடுவார்கள். இது இனி இந்தியாவில் நடைபெறும் அனைத்து சுற்றுப்பயணங்களில் மேற்கொள்ளப்படும் எனவும் கூறப்படுகிறது. இந்த நடைமுறை கிரிக்கெட்டுக்கு மட்டுமில்லாமல் மற்ற விளையாட்டு போட்டிகளிலும் பின்பற்றப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.