தமிழ் செய்திகள்  /  Sports  /  March Sports Rewind: Nikath Zareen Wins Gold, First Wpl.. And Many More Events

March Sports Rewind: தங்கம் வென்ற நிகாத் ஜரீன், முதல் WPL.. மேலும் பல நிகழ்வுகள்

Manigandan K T HT Tamil

Mar 31, 2023, 07:00 AM IST

Important Sports News From March 2023: மார்ச் 5ம் தேதி இந்திய டென்னிஸ் முகமாக 20 ஆண்டுகள் திகழ்ந்துவரும் சானியா மிர்ஸா, டென்னிஸ் வாழ்க்கையை நிறைவு செய்தார்.
Important Sports News From March 2023: மார்ச் 5ம் தேதி இந்திய டென்னிஸ் முகமாக 20 ஆண்டுகள் திகழ்ந்துவரும் சானியா மிர்ஸா, டென்னிஸ் வாழ்க்கையை நிறைவு செய்தார்.

Important Sports News From March 2023: மார்ச் 5ம் தேதி இந்திய டென்னிஸ் முகமாக 20 ஆண்டுகள் திகழ்ந்துவரும் சானியா மிர்ஸா, டென்னிஸ் வாழ்க்கையை நிறைவு செய்தார்.

மார்ச் 1: இந்திய ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, சர்வதேச கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை எடுத்து சாதனை படைத்தார். அத்தகைய சாதனையை படைத்த 2 வது இந்திய வீரர் ஆனார் ஜடேஜா. முதல் வீரர் கபில் தேவ்.

ட்ரெண்டிங் செய்திகள்

April Sports Rewind: செஸ் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த குகேஷ், அனல் பறந்த ஐபிஎல்.. ஸ்போர்ட்ஸில் முக்கிய நிகழ்வுகள்

Archer Deepika Kumari: வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி ஒலிம்பிக்கிற்கான TOPS திட்டத்தில் மீண்டும் சேர்ப்பு

Chennaiyin FC: சென்னையின் எஃப்சி கேப்டனாக 2025 வரை நீடிக்கப்போவது இந்தப் பிளேயர் தான்!

Archery World Cup: நான்கு தங்க பதக்கங்களை அள்ளிய இந்திய அணி! தங்கம் வென்றார் வில் வித்தை வீராங்கனை ஜோதி சுரேகா

இரானி கோப்பை கிரிக்கெட்டில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரட்டை சதம் விளாசினார்

மார்ச் 2: இந்திய இளம் கிராண்ட்மாஸ்டரும், சென்னையைச் சேர்ந்தவருமான டி.குகேஷ், ஆசிய செஸ் கூட்டமைப்பின் 2022 சிறந்த வீரர் விருதை வென்றார்.

மார்ச் 3: இந்தூர் டெஸ்டில் ஆஸி., அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மார்ச் 4: இந்தியாவில் முதல் முறையாக மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடங்கியது. முதல் ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியது.

துபாயில் டூட்டி ப்ரி டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ரஷ்ய வீரர் டேனில் மெத்வதேவ் சாம்பியன் ஆனார்.

தாய்லாந்தில் நடந்த உலகக் கோப்பை மகளிர் ஸ்னூக்கர் போட்டியில் தமிழக வீராங்கனை அனுபமா 2வது தங்கப் பதக்கத்தை வென்றார்.

மார்ச் 5: இந்திய டென்னிஸ் முகமாக 20 ஆண்டுகள் திகழ்ந்துவரும் சானியா மிர்ஸா, டென்னிஸ் வாழ்க்கையை நிறைவு செய்தார்.

சந்தோஷ் கோப்பை கால்பந்து போட்டியில் கர்நாடக அணி சாம்பியன் பட்டம் வென்றது. 54 ஆண்டுகளுக்கு பிறகு கர்நாடக அணி வெற்றி பெற்றது மட்டுமல்லாமல், முதல் முறையாக சந்தோஷ் கோப்பை கால்பந்து போட்டி வெளிநாட்டில் (சவுதி அரேபியா) நடந்தது.

மார்ச் 6: ஸ்பெயினில் நடந்த சர்வதேச பாரா பாட்மிண்டன் போட்டியில் இந்தியா 4 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 10 பதக்கங்களை வென்று அசத்தியது.

மார்ச் 12: ஆஸி., க்கு எதிரான கடைசி மற்றும் 4வது டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலி சதம் விளாசினார். இது 3 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் விளாசிய சதம் ஆகும். அவர் மொத்தம் 186 ரன்கள் எடுத்தார்.

மார்ச் 13: பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இந்தியா வென்றது. அத்துடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கும் தகுதி பெற்றது.

பார்டர் கவாஸ்கர் கோப்பையுடன் இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா (இடது),. ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் (வலது)

மார்ச் 16: தலைநகர் டெல்லியில் மகளிருக்கான 13வது உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி தொடங்கியது. இந்தியாவில் இப்போட்டி நடப்பது மூன்றாவது முறை.

மார்ச் 17: ஆஸி., க்கு எதிரான முதல் ஒரு நாள் ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

மார்ச் 18: ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் மோகன் பகான் அணி பெங்களூர் எஃப்சியை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் நியூசி., வீரர்கள் கேன் வில்லியம்சன், ஹென்றி நிகோலஸ் ஆகியோர் இரட்டை சதம் விளாசி அசத்தினர்.

மார்ச் 19: இந்தியாவை 2வது ஒரு நாள் கிரிக்கெட்டில் 10 விக்கெட்டில் வீழ்த்தியது ஆஸி.,

மார்ச் 20: சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் சம்மேளனம் சார்பில் மத்தியப் பிரதேச மாநிலம், போபாலில் உலகக் கோப்பை ரைபிள், பிஸ்டல் சாம்பியன்ஷிப் போட்டி தொடங்கியது.

அமெரிக்காவில் நடந்த இண்டியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸ், கஜகஸ்தான் வீராங்கனை எலனா ரைபாகினா ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றனர்.

மார்ச் 22: சென்னையில் நடந்த 3வது ஒரு நாள் ஆட்டத்திலும் ஆஸி., வென்று தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

மார்ச் 25: டெல்லியில் நடந்த மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் நீது கங்காஸ், சவீதி போரா முறையே தங்கள் எடைப்பிரிவில் உலக சாம்பியன் பட்டம் வென்றனர்.

மார்ச் 26: டெல்லியில் நடந்த மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் நிகாத் ஜரீன், லவ்லினா ஆகியோர் முறையே தங்கள் எடைப்பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றனர்.

முதல் மகளிர் ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

ஸ்விஸ் ஓபன் பாட்மிண்டன் சாம்பியன் போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி சாம்பியன் ஆகியது.

<p>முதல் சாம்பியனாக மும்பை இந்தியன்ஸ் ஆனதை தொடர்ந்து வாண வேடிக்கை நிகழ்த்தப்பட்டது</p>

மார்ச் 27: கேரளத்தில் இந்தியன் கிராண்ட் ப்ரீ 2 தடகள போட்டியில் மகளிருக்கான 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் தமிழக வீராங்கனை அர்ச்சனா சுசீந்திரன் தங்கம் வென்றார்.

84வது சீனியர் தேசிய டேபிள் டென்னிஸ் போட்டியில் ஆடவர் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த ஜி.சத்தியன், மகளிர் பிரிவில் ஸ்ரீஜா அகுலா ஆகியோர் சாம்பியன் ஆகினர்.

மார்ச் 31: 16 ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சிஎஸ்கேவும், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன.

டாபிக்ஸ்