தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Malaysia Masters: உலகின் நம்பர் 6 வீராங்கனையை வீழ்த்தி அரையிறுதியில் பிவி சிந்து! 452 வெற்றி பெற்று சாதனை

Malaysia Masters: உலகின் நம்பர் 6 வீராங்கனையை வீழ்த்தி அரையிறுதியில் பிவி சிந்து! 452 வெற்றி பெற்று சாதனை

May 24, 2024, 05:49 PM IST

google News
Malaysia Masters: மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் உலகின் நம்பர் 6 வீராங்கனையான சீனாவின் ஹான் யூ என்பவரை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். இது பிவி சிந்துவின் 452 வெற்றியாக இருப்பதோடு, அதிக வெற்றிகளை பெற்ற இந்திய வீராங்கனை என்ற சாதனையாகவும் அமைந்துள்ளது. (PTI)
Malaysia Masters: மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் உலகின் நம்பர் 6 வீராங்கனையான சீனாவின் ஹான் யூ என்பவரை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். இது பிவி சிந்துவின் 452 வெற்றியாக இருப்பதோடு, அதிக வெற்றிகளை பெற்ற இந்திய வீராங்கனை என்ற சாதனையாகவும் அமைந்துள்ளது.

Malaysia Masters: மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் உலகின் நம்பர் 6 வீராங்கனையான சீனாவின் ஹான் யூ என்பவரை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். இது பிவி சிந்துவின் 452 வெற்றியாக இருப்பதோடு, அதிக வெற்றிகளை பெற்ற இந்திய வீராங்கனை என்ற சாதனையாகவும் அமைந்துள்ளது.

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் மலேசியா தலைநகர் கோலலாப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில், சீன வீராங்கனை ஹான் யூ வீழ்த்திய இந்திய நட்சத்திர வீராங்கனையான பிவி சிந்து, அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

சாதனை வெற்றி

உலகின் நம்பர் 6 வீராங்கனையான ஹான் யூவுக்கு எதிரான ஆட்டத்தில் 21-13 14-21 21-12 என்ற புள்ளிக்கணக்கில் பிவி சிந்து வென்றார். இந்த போட்டி 55 நிமிடங்கள் வரை நீடித்தது.

பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் முதல் சுற்றில் ஆதிக்கம் செலுத்தினார் பிவி சிந்து. இதன் பின்னர் இரண்டாவது செட்டில் கம்பேக் கொடுத்த ஹான் யூ, தொடர்ச்சியாக முன்னிலை வகித்தார். இதன் மூலம் இந்த செட்டை தன் வசமாக்கினார்.

வெற்றியாளரை தீர்மானிக்கும் விதமாக இருந்த மூன்றாவது செட்டில் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்தினார் சிந்து. ஆரம்பத்திலேயே 11-3 என முன்னிலை பெற்றார். இதன் பிறகு அடுத்தடுத்து புள்ளிகளை பெற்று வெற்றியும் பெற்றார். 

இந்த வெற்றி பிவி சிந்துவின் 452வது வெற்றியாக அமைந்துள்ளது. இதன் மூலம் பேட்மிண்டன் விளையாட்டில் அதிக வெற்றிகளை பெற்ற இந்தியர் என்ற சாதனை புரிந்துள்ளார் பிவி சிந்து.

பழி தீர்த்த பிவி சிந்து

கடந்த மாதம் சீனாவில் உள்ள நிங்போவில் நடைபெற்ற ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில், ஹான் யூவுக்கு எதிராக பிவி சிந்து தோல்வியை தழுவினார். இதைத்தொடர்ந்து அதற்கு தற்போது பழி தீர்த்து கொண்டுள்ளார் பிவி சிந்து.

இந்த வெற்றியை தொடர்ந்து அரையிறுதியில் தாய்லாந்து நாட்டின் பூசனன் ஓங்பாம்ருங்பன் ஆகியோரில் ஒருவரை அரையிறுதியில் எதிர்கொள்ள இருக்கிறார். இந்த போட்டி மே 25ஆம் தேதி (நாளை) காலை 7.30 மணிக்கு தொடங்குகிறது.

பிவி சிந்து - பூசனன் ஓங்பாம்ருங்பன் இதுவரை

இந்த இருவரும் இதுவரை 18 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். இதில் சிந்து 17 முறை வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த 2019இல் நடைபெற்ற ஹாங்காங் ஓபன் போட்டியில் பிவி சிந்துவை வீழ்த்தியுள்ளார் பூசனன் ஓங்பாம்ருங்பன். இதுவே சிந்துவுக்கு எதிராக அவர் பெற்ற ஒரே வெற்றியாகும்.

மலேசியா மாஸ்டர்ஸ் போட்டியில் இந்த இருவரும் முதல் முறையாக மோதிக்கொள்ள இருக்கிறார்கள். அத்துடன் 2022ஆம் ஆண்டுக்கும் பிறகு தற்போது தான் இவர்கள் மோதவுள்ளார்கள்.

இந்த போட்டியை ஸ்போர்ஸ் 18 சேனலில் இந்தியாவில் கண்டுகளிக்கலாம்.

அஷ்மிதா சாலிஹா வெளியேற்றம்

மற்றொரு இந்திய வீராங்கனையான அஷ்மிதா சாலிஹா, காலிறுதி போட்டியில் ஆறாவது சீட் சீனா வீராங்கனையான ஜாங் யி மான் என்பவருக்கு எதிராக தோல்வியை தழுவினர். இந்த போட்டியில் 10-21 15-21 என்ற நேர் செட்களில் தோல்வி அடைந்து அஷ்மிதா சாலிஹா வெளியேறினார்.

மலேசியா மாஸ்டர்ஸ் இறுதிப்போட்டி மே 26ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் உலகின் நம்பர் 6 வீராங்கனையான சீனாவின் ஹான் யூ என்பவரை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். இது பிவி சிந்துவின் 452 வெற்றியாக இருப்பதோடு, அதிக வெற்றிகளை பெற்ற இந்திய வீராங்கனை என்ற சாதனையாகவும் அமைந்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி