தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Ipl: அடித்தளம் அ்மைத்த ராசா! பினிஷ் செய்த ஷாருக்கான்! பஞ்சாப்புக்கு 3வது வெற்றி

IPL: அடித்தளம் அ்மைத்த ராசா! பினிஷ் செய்த ஷாருக்கான்! பஞ்சாப்புக்கு 3வது வெற்றி

Apr 15, 2023, 11:49 PM IST

LSG vs PBKS: ஓபனிங் பேட்ஸ்மேன்கள் சொதப்பியபோதிலும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக களமிறங்கிய ஆல்ரவுண்டர் ராசா அணிக்கு சரியான அடித்தளம் அமைத்து கொடுத்தார். கடைசியாக பேட் செய்த ஷாருக்கான அதிரடியாக பினிஷ் செய்து பஞ்சாப்புக்கு மூன்றாவது வெற்றியை தேடி தந்தார். (AFP)
LSG vs PBKS: ஓபனிங் பேட்ஸ்மேன்கள் சொதப்பியபோதிலும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக களமிறங்கிய ஆல்ரவுண்டர் ராசா அணிக்கு சரியான அடித்தளம் அமைத்து கொடுத்தார். கடைசியாக பேட் செய்த ஷாருக்கான அதிரடியாக பினிஷ் செய்து பஞ்சாப்புக்கு மூன்றாவது வெற்றியை தேடி தந்தார்.

LSG vs PBKS: ஓபனிங் பேட்ஸ்மேன்கள் சொதப்பியபோதிலும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக களமிறங்கிய ஆல்ரவுண்டர் ராசா அணிக்கு சரியான அடித்தளம் அமைத்து கொடுத்தார். கடைசியாக பேட் செய்த ஷாருக்கான அதிரடியாக பினிஷ் செய்து பஞ்சாப்புக்கு மூன்றாவது வெற்றியை தேடி தந்தார்.

ஐபிஎல் 2023, 21வது லீக் ஆட்டத்தில் லக்னெள அணியை அதன் சொந்த மண்ணில் வைத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி மூன்றாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகளில் 3இல் வெற்றி பெற்ற பஞ்சாப் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

FIFA WC 26 qualifiers: இரண்டாவது பட்டியலை வெளியிட்டார் இந்திய தலைமைப் பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக்

Madrid Open Tennis: மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி: முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ரூப்லேவ்

ISL 2024 Final: ஐபிஎல்-இல் விட்டதை ஐஎஸ்எல்-இல் பிடித்த மும்பை! இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம்

ISL 2024 Final: மூன்றாவது கோப்பையை எதிர்நோக்கும் மும்பை சிட்டி! பழிதீர்க்க காத்திருக்கும் மோகன் பகான் - இன்று பைனல்

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த லக்னெள அணி, கேஎல் ராகுலின் அரைசதத்தால் 159 ரன்கள் குவித்தது. இதையடுத்து 160 ரன்களை சேஸ் செய்த பஞ்சாப் அணியின் தொடக்க பேட்ஸ்மேன்களான அதர்வ தைடே 0, பிரப்சிம்ரன் சிங் 4 ரன்னில் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

இதன் பின்னர் பேட் செய்ய வந்த மேத்யூ ஷார்ட், ஹர்ப்ரீத் சிங் ஆகியோர் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இவர்கள் இருவரும் இணைந்து ரன் குவிப்பில் ஈடுபட்ட நிலையில், ஷார்ட் 34 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரது விக்கெட்டுக்கு பிறகு ஹர்ப்ரீத் சிங்குடன் இணைந்து ரன் குவிப்பில் ஈடுபட்டார் ஆல்ரவுண்டர் சிக்கந்தர் ராசா.

ஹர்ப்ரீத் சிங் 22 ரன்கள எடுத்து காலியாக, அடுத்த வந்த கேப்டன் சாம் கரன் 6, ஜித்தேஷ் ஷர்மா 2 ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனார் பஞ்சாப் அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது.

அப்போது பேட் செய்ய வந்த ஷாருக்கான் ஆரம்பம் முதலே அதிரடி காட்ட தொடங்கினார். இதற்கிடையே சிறப்பாக பேட் செய்து ரன் குவிப்பில் ஈடுபட்ட வந்த ராசா அரைசதம் விளாசி 57 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

செட்டான பேட்ஸ்மேனான ராசா அவுட்டானபோதிலும் தனது அதிரடியை தொடர்ந்தார் ஷாருக்கான். 10 பந்துகளில் அவர் 23 ரன்கள் அடிக்க, 19.3 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்து பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.

லக்னெள அணியில் சிறப்பாக பந்து வீசிய இளம் வீரர் யுத்வீர் சிங் 2, ரவி பிஷ்னோய் 2, மார்க் வுட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி புள்ளிப்பட்டியலில் 4வது இடத்துக்கு முன்னேறிய நிலையில், லக்னெள அணி தொடர்ந்து 2வது இடத்தில் நீடித்து வருகிறது.

டாபிக்ஸ்