தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Ipl 2023: ஐபிஎல் திருவிழா இன்று ஆரம்பம்.. முதல் ஆட்டத்தில் Csk Vs Gt மோதல்

IPL 2023: ஐபிஎல் திருவிழா இன்று ஆரம்பம்.. முதல் ஆட்டத்தில் CSK vs GT மோதல்

Manigandan K T HT Tamil

Mar 31, 2023, 06:45 AM IST

Indian Premier Leauge: இந்த ஆண்டு பென் ஸ்டோக்ஸ், ஜடேஜா, மொயீன் அலி என ஆல்-ரவுண்டர்களுடன் களம் காண்பதால் சீறிப் பாயும் என எதிர்பார்க்கலாம். (@ChennaiIPL)
Indian Premier Leauge: இந்த ஆண்டு பென் ஸ்டோக்ஸ், ஜடேஜா, மொயீன் அலி என ஆல்-ரவுண்டர்களுடன் களம் காண்பதால் சீறிப் பாயும் என எதிர்பார்க்கலாம்.

Indian Premier Leauge: இந்த ஆண்டு பென் ஸ்டோக்ஸ், ஜடேஜா, மொயீன் அலி என ஆல்-ரவுண்டர்களுடன் களம் காண்பதால் சீறிப் பாயும் என எதிர்பார்க்கலாம்.

இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL)எனப்படும் ஆடவர் ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி மார்ச் 31ம் தேதி தொடங்கி மே 28ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

FIFA WC 26 qualifiers: இரண்டாவது பட்டியலை வெளியிட்டார் இந்திய தலைமைப் பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக்

Madrid Open Tennis: மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி: முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ரூப்லேவ்

ISL 2024 Final: ஐபிஎல்-இல் விட்டதை ஐஎஸ்எல்-இல் பிடித்த மும்பை! இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம்

ISL 2024 Final: மூன்றாவது கோப்பையை எதிர்நோக்கும் மும்பை சிட்டி! பழிதீர்க்க காத்திருக்கும் மோகன் பகான் - இன்று பைனல்

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறவுள்ள 16வது சீசன் ஐபிஎல் போட்டியில் 10 அணிகள் பங்கேற்று விளையாடவுள்ளன.

சிஎஸ்கே, ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகள் விளையாடுகின்றன.

2023 சீசன் ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்தில் 4 முறை சாம்பியனான எம்.எஸ்.தோனி தலைமையிலான சிஎஸ்கேவும், நடப்பு சாம்பியனான ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் இன்று (மார்ச் 31ம் தேதி) குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரில் உள்ள உலகின் மிகப் பெரிய ஸ்டேடியமான நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மோதுகின்றன.

2021ம் ஆண்டு சாம்பியன் சிஎஸ்கேவும், நடப்புச் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும் இன்று கோதாவில் குதிக்கின்றன.

இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக சிஎஸ்கே அணியினர் அகமதாபாத் நகருக்கு சென்றடைந்தனர்.

இந்த முறையும் சிஎஸ்கே அணி தோனி தலைமையில் களமிறங்குகிறது. டெவன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அம்பதி ராயுடு, மொயீன் அலி, பென் ஸ்டோக்ஸ், ஷிவம் துபே, ஜடேஜா, பிரெடோரியஸ், தீபக் சஹர் என வலுவான வீரர்கள் சிஎஸ்கேவில் இடம்பிடித்துள்ளார்.

ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி அறிமுகமான முதல் சீசனிலேயே கோப்பையைக் கைப்பற்றி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

அந்த அணியில் பாண்டியா, மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), சுப்மன் கில், கேன் வில்லியம்சன், ராகுல் தெவாடியா, ரஷித் கான், ஷிவம் மாவி, முகமது ஷமி, ஸ்ரீகர் பரத், ரித்திமான் சஹா, சாய் சுதர்ஷன், விஜய் சங்கர் உள்ளிட்ட வீரர்கள் உள்ளனர்.

கடந்த ஆண்டு சிஎஸ்கே அணி புள்ளிப் பட்டியலில் 9வது இடத்தில் இருந்தது.

இந்த ஆண்டு பென் ஸ்டோக்ஸ், ஜடேஜா, மொயீன் அலி என ஆல்-ரவுண்டர்களுடன் களம் காண்பதால் சீறிப் பாயும் என எதிர்பார்க்கலாம்.

இந்த சீசன் ஐபிஎல் தான் தோனிக்கு கடைசி ஐபிஎல்-ஆக இருக்கும் என்று கூறப்படுவதால் தொடக்க ஆட்டத்தில் இருந்து வீரர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் என எதிர்பார்க்கலாம். இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு தயார் நிலையில் உள்ளனர்.

யெல்லோ ஆர்மியும் அகமதாபாத்தில் குவியத் தொடங்கிவிட்டனர். தொடக்க நிகழ்ச்சியில் நடிகை தமன்ன நடனம் ஆடப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வழக்கம்போல் கோலாகலமாக 16வது ஐபிஎல் போட்டிகள் தொடங்குகிறது. இன்றிரவு 7.30 மணிக்கு முதல் ஆட்டம் தொடங்குகிறது. ஜியோ சினிமா செயலியில் ஐபிஎல் போட்டிகளை காணலாம்.

டாபிக்ஸ்