தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Ipl 2022: சன்ரைசர்ஸ் வெற்றிக்கு 193 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பெங்களூரு

IPL 2022: சன்ரைசர்ஸ் வெற்றிக்கு 193 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பெங்களூரு

Karthikeyan S HT Tamil

May 08, 2022, 07:53 PM IST

google News
சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் அதிகபட்சமாக பெங்களூரு கேப்டன் டூ பிளெஸிஸ் 50 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 73 ரன்கள் விளாசினார்.
சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் அதிகபட்சமாக பெங்களூரு கேப்டன் டூ பிளெஸிஸ் 50 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 73 ரன்கள் விளாசினார்.

சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் அதிகபட்சமாக பெங்களூரு கேப்டன் டூ பிளெஸிஸ் 50 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 73 ரன்கள் விளாசினார்.

நடப்பு ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 54 ஆவது ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. பெங்களூரு அணி அதே வீரர்களுடன் களமிறங்கியது. ஹைதராபாத் அணியில் சூச்சித் மற்றும் ஆப்கான் வீரர் ஃபருக்கி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

டாஸ் வென்று பெங்களூரு அணி கேப்டன் டூ பிளெஸ்ஸிஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். இதன்படி பெங்களூரு அணி முதலில் களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர் விராட் கோஹ்லி சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினார்.

அடுத்து வந்த ராஜத் பட்டிடார், டூ பிளெஸ்ஸி உடன் ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 38 பந்துகளை சந்தித்து 48 ரன்கள் எடுத்திருந்த போது பட்டிடார் சுச்சித் வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

இதன் பின்னர் நான்காவது ஆட்டக்காரராக களமிறங்கிய மேக்ஸ் வெல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 24 பந்துகளில் 33 ரன்கள் எடுத்திருந்த போது தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய தினேஷ் கார்த்திக் வாணவேடிக்கை நிகழ்த்தினார். 

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் நான்கு சிக்ஸர்களை பறக்கவிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். 8 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர் 30 ரன்களை எடுத்தார். இறுதியாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு பெங்களூரு அணி 192 ரன்கள் எடுத்தது. நிலைத்து நின்று ஆடிய டூ பிளெஸ்ஸிஸ் 73 ரன்களை விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். 4 பவுண்டரி, 2 சிக்ஸர் உதவியுடன் இந்த ரன்களை அவர் ரன்களை அவர் விளாசினார்.

ஹைதராபாத் அணி தரப்பில் ஜெகதீஸ் 2 விக்கெட், கார்த்திக் தியாகி ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். இதனைத் தொடர்ந்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி களமிறங்கியுள்ளது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி