IPL 2022: சிஎஸ்கேவை போல் நான்காவது தோல்வி!ஆர்சிபியிடம் வெற்றியை நழுவவிட்ட மும்பை
Apr 10, 2022, 12:00 AM IST
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு என்ன நடந்தனவே அது கொஞ்சமும் மாறாமல் மும்பை அணிக்கும் நிகழ்ந்துள்ளது. பேட்டிங்கில் கரையேறினாலும், பெளலிங்கில் கரையேறமுடியாமல் தவித்து நான்காவது தோல்வியை நடப்பு ஐபிஎல் தொடரில் பதிவு செய்துள்ளது.
மும்பை அணியின் முக்கிய பேட்ஸ்மேன்கள் சொதப்பிய போதிலும் ஒற்றை ஆளாக களத்தில் நின்று கெத்தாக அதிரடி காட்டி அணியை 151 என்ற கெளரவமான ஸ்கோரை எட்ட வைத்தார் சூர்யகுமார் யாதவ்.
ஆனால் மும்பையின் அந்த ஸ்கோரை ஆர்சிபி அணி 18.3 ஓவர்களில் கடந்து வெற்றி பெற்றது.
இதற்கு முன் நடைபெற்ற சன் ரைசரஸ் போட்டியில் சென்னை அணிக்கு என்ன நடந்ததோ, அதே விஷயங்கள் கொஞ்சமும் மாறாமல் மும்பைக்கும் நிகழ்ந்துள்ளது.
டாஸில் தோல்வி, முதலாவது பேட்டிங், தட்டி தடுமாறி 150 ரன்களை கடந்த செட் செய்த டார்கெட்ட எளிதாக சேஸ் செய்து எதிரணி வென்று அந்த பேட்டர்ன் சிஎஸ்கே மற்றும் எம்ஐ ஆகிய இரு அணிகளுக்கும் ஒரு சேர நிகழ்ந்துள்ளது.
வெற்றி பெறும் அணிகளை குறிப்பிடுவதுதான் வழக்கம் என்றாலும் இந்த தோல்வியுற்ற சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் யார் முன்னிலை வகிக்கிறார்கள் என்று கூறும் அளவுக்கு இரு அணிகளுக்கும் போட்டா போட்டியே நிகழ்கிறது.
மும்பை அணி இலக்கை விரட்ட இரண்டாவதாக பேட்டிங் செய்த ஆர்சிபி அணியின் தொடக்க பேட்ஸ்மேனாக களமிறங்கிய கேப்டன் டு பிளெசிஸ் 16 ரன்களில் வெளியேறினார். ஆனால் தொடக்கம் முதலே அதிரடி காட்டிய மற்றொரு தொடக்க பேட்ஸ்மேன் அனுஜ் ராவத் சிறப்பாக பேட்டிங் செய்து அரைசதம் அடித்தார்.
47 பந்துகளில் 66 ரன்கள் எடுத்த அவர் 2 பவுண்டரிகள், 6 சிக்சர்கள் அடித்த நிலையில் ரன் அவுட் ஆனார். இவரோடு இணைந்து நல்ல பார்னர்ஷிப் அமைத்த விராட் கோலி 36 பந்துகளில் 48 ரன்கள் எடுத்தார்.
பின்னர் தினேஷ் கார்த்திக் 7, மேக்ஸ்வெல் 8 என ஆட்டமிழக்காத நிலையில் ஆர்சிபி அணி வெற்றிக்கு தேவையான 152 ரன்களை எட்டியது.
சன் ரைசர்ஸ் போட்டியில் இளம் வீர்ர அபிஷேக் ஷர்மா சிறப்பாக விளையாடி ஆட்ட நாயகன் விருதை வென்றது போல், இந்தப் போட்டியில் அரைசதம் அடித்து அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்த அனுஷ் ராவத் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
சாம்பியன் அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இதுவரை நான்கு போட்டிகள் விளையாடி முடித்துள்ள நிலையில், அனைத்து போட்டிகளிலும் தோல்வியை தழுவி புள்ளிப்பட்டியலில் முறையே 7 மற்றும் 8 ஆகிய இடங்களில் உள்ளன.