தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Ipl 2022: மற்றொரு பெளலிங் சொதப்பல்! சிஎஸ்கேவுக்கு நான்காவது தோல்வி

IPL 2022: மற்றொரு பெளலிங் சொதப்பல்! சிஎஸ்கேவுக்கு நான்காவது தோல்வி

Apr 09, 2022, 11:01 PM IST

google News
பேட்டிங்கில் தடுமாறி எடுத்த 155 ரன்களை தடுக்க தவறிய சிஎஸ்கே பெளலர்கள் தொடர்ச்சியாக நான்காவது தோல்வியை தழுவியுள்ளனர். தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய சன்ரைசர்ஸ் பேட்ஸ்மேன்கள் எந்த வித டென்ஷனும் இல்லாமல் ரன் குவிப்பில் ஈடுபட்டதோடு நடப்பு சீசனில் முதல் வெற்றி பெற்று கணக்கை தொடங்கியுள்ளனர். (IPL Twitter)
பேட்டிங்கில் தடுமாறி எடுத்த 155 ரன்களை தடுக்க தவறிய சிஎஸ்கே பெளலர்கள் தொடர்ச்சியாக நான்காவது தோல்வியை தழுவியுள்ளனர். தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய சன்ரைசர்ஸ் பேட்ஸ்மேன்கள் எந்த வித டென்ஷனும் இல்லாமல் ரன் குவிப்பில் ஈடுபட்டதோடு நடப்பு சீசனில் முதல் வெற்றி பெற்று கணக்கை தொடங்கியுள்ளனர்.

பேட்டிங்கில் தடுமாறி எடுத்த 155 ரன்களை தடுக்க தவறிய சிஎஸ்கே பெளலர்கள் தொடர்ச்சியாக நான்காவது தோல்வியை தழுவியுள்ளனர். தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய சன்ரைசர்ஸ் பேட்ஸ்மேன்கள் எந்த வித டென்ஷனும் இல்லாமல் ரன் குவிப்பில் ஈடுபட்டதோடு நடப்பு சீசனில் முதல் வெற்றி பெற்று கணக்கை தொடங்கியுள்ளனர்.

டிஒய் பாட்டில் ஸ்டேடியத்தில் இன்றைய போட்டியின் பிட்ச் முதல் பேட்டிங்குக்கு மந்தமாகவே செயல்பட்டது. சன் ரைசர்ஸ் பந்து வீச்சாளர்களின் பந்து மெல்ல எழும்பியே பேட்டுக்கு வந்ததால் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தவித்தனர். இருந்தபோதிலும் மொயின் அலி - ராயுடு ஆகியோரின் சிறப்பான பார்னர்ஷிப், கடைசி நேரத்தில் ஜடேஜாவின் சின்ன கேமியோ இன்னிங்ஸ் காரணமாக அணியின் ஸ்கோர் 154 என உயர்ந்தது.

இதையடுத்து 155 இலக்கை விரட்ட சன் ரைசர்ஸ் தொடக்க பேட்ஸ்மேனாக அபிஷேக் ஷர்மா - கேன் வில்லியம்சன் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கம் முதல் சிஎஸ்கே பெளலர்களின் பந்து வீச்சை எளிதாக எதிர்கொண்டு ஆதிக்கம் செலுத்த தொடங்கிய இவர்கள் பவுண்டரி, சிக்ஸர்கள் என ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.

சென்னை அணி பெளலர்கள் அனைவரின் ஓவர்களில் பாரபட்சம் இல்லாமல் ரன்கள் குவித்தனர். சிறப்பாக ஆடிய வில்லியம்சன் 32 ரன்கள் முகேஷ் செளத்ரி பந்தில் ஆட்டமிழந்தார். மறுபக்கம் சிறப்பாக பேட்டிங் செய்த அபிஷேக் ஷர்மா அரை சதம் அடித்தார். மூன்றாவது பேட்ஸ்மேனாக களமிறங்கிய ராகுல் திரிபாதி விரைவாக ரன் குவிப்பில் ஈடுபட்டார். 50 பந்துகளில் 75 ரன்கள் எடுத்த அபிஷேக் ஷர்மா, பிராவோ பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

இருந்தபோதிலும் சிற்பபாக விளையாடி வந்த சன் ரைசர்ஸ் பேட்ஸ்மேன்கள் 17.4 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 155 ரன்கள் எடுத்து இந்த சீசனில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்தனர். மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள சன் ரைசர்ஸ் முதலாவது வெற்றியை இன்று பதிவு செய்துள்ள நிலையில், விளையாடிய நான்கு போட்டிகளிலும் சிஎஸ்கே அணி தோல்வியுற்றுள்ளது.

அற்புதமான பேட்டிங்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெளலர்களை கதிகலங்க செய்த அபிஷேக் ஷர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

வெற்றிக்கு பின்னர் கேன் வில்லியம்சன் கூறும்போது, " நீங்கள் விளையாடும் அனைத்து போட்டிகளும் கடினமாகவே உள்ளது. அதனால் நாங்கள் ஆட்டத்திறனை மேம்படுத்தவே முயற்சித்தோம். இது முதல் வெற்றியாக இருந்தாலும் கடந்த போட்டியில் நாங்கள் சரியாக செய்த விஷயங்களை பார்க்க வேண்டும். நிதானமாக இருந்து பணியை மேற்கொள்ள வேண்டும். நாங்கள் விளையாடும் கிரிக்கெட்டில் கவனம் செலுக்கிறோம். இந்த இலக்கு கடினமாக இருந்ததால் பார்னர்ஷிப் அமைக்க முடிவு செய்தோம். முதல் இன்னிங்ஸை பார்த்து இவ்வாறு விளையாடினோம். சவால் விடுக்கும் போட்டிகளில் அனைவரும் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும் என்றார்.

தோல்விக்குப் பின் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ரவீந்திர ஜடேஜா கூறும்போது, "நாங்கள் 20 முதல் 25 ரன்கள் குறைவாக எடுத்துள்ளோம். மோசமான எங்களது பந்து வீச்சு ஏமாற்றமாக அமைந்தது. கடைசி வரை போராட முயற்சித்தோம். 155 ரன்கள் கட்டுப்படுத்த நல்ல ஸ்கோர் என்றாலும் பெளலர்களின் விக்கெட் தேடல் முயற்சி பலன் அளிக்கவில்லை. நாங்கள் ஆட்டத்தை மேம்படுத்த முயற்சிப்போம். எங்கே குறைபாடு உள்ளது என்பதை அணியாக இணைந்து பேசவேண்டும். நாங்கள் ஒன்றாக இணைந்து கடினமாக பயிற்சி மேற்கொண்டு வலிமையான அணியாக திரும்பி வருவோம்" என்றார்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி