தமிழ் செய்திகள்  /  Sports  /  Ind Vs Nz 3rd T20: Newzealand Opted To Bat First After Match Delayed An Hour Due To Rain

ind vs nz 3rd t20: மழையால் ஆட்டம் தாமதம்! நியூசிலாந்து முதலாவது பேட்டிங்

Nov 22, 2022, 12:57 PM IST

மழையால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில் ஒரு மணி நேரம் ஆட்டம் தாமதமாக தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
மழையால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில் ஒரு மணி நேரம் ஆட்டம் தாமதமாக தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

மழையால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில் ஒரு மணி நேரம் ஆட்டம் தாமதமாக தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இந்தியா - நியூசிலாந்து இடையே மூன்றாவது டி20 போட்டி நேப்பியரில் உள்ள மெக்லீன் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது. போட்டி தொடங்குவதற்கு முன்னர் அங்கு மழை பெய்த நிலையில் அரை மணி நேரம் தாமதமாக டாஸ் வீசப்பட்டது.

ட்ரெண்டிங் செய்திகள்

Chennaiyin FC: சென்னையின் எஃப்சி கேப்டனாக 2025 வரை நீடிக்கப்போவது இந்தப் பிளேயர் தான்!

Archery World Cup: நான்கு தங்க பதக்கங்களை அள்ளிய இந்திய அணி! தங்கம் வென்றார் வில் வித்தை வீராங்கனை ஜோதி சுரேகா

PKL: 'சீசன் 1 முதல் பி.கே.எல்லின் ஒரு பகுதியாக இருக்க கனவு கண்டோம்': ஆங்கில கபடி வீரர்கள் பேட்டி

D Gukesh: ரசிகர்களின் அன்பால் திக்குமுக்காடிப்போன சென்னையைச் சேர்ந்த இளம் செஸ் வீரர் டி.குகேஷ்!-வைரல் வீடியோ

இதையடுத்து டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் செளத்தி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். கேன் வில்லியம்சன் மருத்துவ காரணங்களுக்காக விளையாடாத நிலையில் அவருக்கு பதிலாக மார்க் சாப்மேன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அதேபோல் இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக ஹர்ஷல் படேல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

நேப்பியர் மெக்லீன் பார்க் மைதானத்தில் முதல் முறையாக டி20 போட்டிகளில் இந்திய அணி பங்கேற்கிறது. இரு பக்கம் சைடு பவுண்டரிகள் மிகவும் சிறியதாக இருக்கும் இந்த மைதானம் பேட்ஸ்மேன்களின் சொர்க்கபுரி என்ற அழைக்கப்படுகிறது. இங்கு நடைபெறும் போட்டிகளில் பெளலர்களை காட்டிலும், பேட்ஸ்மேன்கள் நன்கு சாதித்துள்ளனர்.

ஆனால் இன்றைய போட்டி தொடங்குவதற்கு முன் மழை பெய்ததால் பிட்சில் ஏற்பட்டுள்ள ஈரப்பதம் காரணமாக பேட்டிங் செய்வதில் கொஞ்சம் சிரமம் இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மழை காரணமாக ஆட்டம் ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்கியுள்ளது.