தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  த்ரில் போட்டியில் அர்ஜெண்டினாவை வீழ்த்தி தென் கொரியா காலிறுதிக்கு தகுதி

த்ரில் போட்டியில் அர்ஜெண்டினாவை வீழ்த்தி தென் கொரியா காலிறுதிக்கு தகுதி

Jan 23, 2023, 11:24 PM IST

Hockey World cup 2023: கடைசி வரை த்ரில்லாக சென்றுகொண்டிருந்த ஆட்டம் டிராவில் முடிய, பெணால்டி ஷூட் அவுட் முறையில் அர்ஜெண்டினாவை வீழ்த்தி தென்கொரியா அணி வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது. (PTI)
Hockey World cup 2023: கடைசி வரை த்ரில்லாக சென்றுகொண்டிருந்த ஆட்டம் டிராவில் முடிய, பெணால்டி ஷூட் அவுட் முறையில் அர்ஜெண்டினாவை வீழ்த்தி தென்கொரியா அணி வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது.

Hockey World cup 2023: கடைசி வரை த்ரில்லாக சென்றுகொண்டிருந்த ஆட்டம் டிராவில் முடிய, பெணால்டி ஷூட் அவுட் முறையில் அர்ஜெண்டினாவை வீழ்த்தி தென்கொரியா அணி வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது.

உலகக் கோப்பை ஹாக்கி தொடரின் நாக்அவுட் சுற்று போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் அர்ஜெண்டினா - தென் கொரியா அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெற்றது. ஆட்டத்தின் முதல் பாதில் அர்ஜெண்டினா 1 கோல் அடித்து முன்னிலை பெற்றது.

ட்ரெண்டிங் செய்திகள்

ISL 2024 Final: ஐபிஎல்-இல் விட்டதை ஐஎஸ்எல்-இல் பிடித்த மும்பை! இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம்

ISL 2024 Final: மூன்றாவது கோப்பையை எதிர்நோக்கும் மும்பை சிட்டி! பழிதீர்க்க காத்திருக்கும் மோகன் பகான் - இன்று பைனல்

Mallika Nadda: ஸ்பெஷல் ஒலிம்பிக் ஆசிய பசிபிக் ஆலோசனை கவுன்சில் தலைவராக மல்லிகா நட்டா நியமனம்

Olympic Qualifiers: ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் பங்கேற்க சர்வதேச பயிற்சி: நன்றி தெரிவித்த ஃபென்சர் தனிக்ஷா

இதன் பின்னர் இரண்டாவது பாதியில் மேலும் 2 கோல்கள் அடிக்க, பதிலுக்கு தென் கொரியா 2 கோல்கள் அடித்தது. இருப்பினும் அர்ஜெண்டினா 3-2 என முன்னிலையிலேயே இருந்தது. இதைத்தொடர்ந்து மூன்றாவது பாதியில் அர்ஜெண்டினா 1, தென் கொரியா 1 கோல்கள் அடிக்க மீண்டும் 4-3 என அர்ஜெண்டினா முன்னிலை பெற்றது.\

ஆட்டத்தின் இறுதி பாதி நேரத்தில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென் கொரிய வீரர்கள் 2 கோல்கள் அடிக்க, அர்ஜெண்டினா ஒரு கோல் மட்டுமே அடித்தது. கடைசி வரை த்ரில்லாக சென்ற இந்த ஆட்டம் 5-5 என்ற கணக்கில் ஆட்டம் டிராவில் முடிவுற்றது.

இதைத்தொடர்ந்து வெற்றியாளரை தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. பெனால்டி ஷூட் அவுட்டில் கொரியா அணி 3-2 என்ற கணக்கில் அர்ஜெண்டினாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. தென் கொரியா அணி கால் இறுதி ஆட்டத்தில் பலம் வாய்ந்த நெதர்லாந்தை எதிர்கொள்கிறது.

இன்று நடைபெற்ற மற்றொரு நாக்அவுட் ஆட்டத்தில் ஜெர்மனி அணி பிரான்ஸ் அணியை 5-1 என்ற கோல் கணக்கில் வீழத்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது.

 

டாபிக்ஸ்