தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Fifa World Cup 2022: ஆட்டம் தொடங்கிய 68 விநாடியில் கோல்! கனடா வீரர் உலக சாதனை

Fifa world cup 2022: ஆட்டம் தொடங்கிய 68 விநாடியில் கோல்! கனடா வீரர் உலக சாதனை

Nov 28, 2022, 12:00 PM IST

குரோஷியாவுக்கு எதிரான போட்டியில் கனடா வீரர் அல்போன்சா டேவிஸ் ஆட்டம் தொடங்கிய 68 விநாடியேலேயே கோல் அடித்து சாதனை புரிந்துள்ளார். இருப்பினும் இந்த போட்டியில் தோல்வியை தழுவி தொடரை விட்டு வெளியேறியுள்ளது கனடா அணி.

22வது உலகக் கோப்பை தொடர் குரூப் எஃப் பிரிவில் குரோஷியா - கனடா அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. இதில் ஆட்டம் தொடங்கிய 68 விநாடியில், கனடா நாட்டின் சக வீரர்களின் பாஸ்கள் சிறப்பாக எடுத்து பினிஷ் செய்து கோலாக்கினார் பார்வேர்டு வீரர் அல்போன்சா டேவிஸ். இதன் மூலம் உலகக் கோப்பை தொடரில் அதிவேக கோல் அடித்த வீரர்கள் என்ற சாதனையை புரிந்தார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Madrid Open Tennis: மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி: முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ரூப்லேவ்

ISL 2024 Final: ஐபிஎல்-இல் விட்டதை ஐஎஸ்எல்-இல் பிடித்த மும்பை! இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம்

ISL 2024 Final: மூன்றாவது கோப்பையை எதிர்நோக்கும் மும்பை சிட்டி! பழிதீர்க்க காத்திருக்கும் மோகன் பகான் - இன்று பைனல்

Mallika Nadda: ஸ்பெஷல் ஒலிம்பிக் ஆசிய பசிபிக் ஆலோசனை கவுன்சில் தலைவராக மல்லிகா நட்டா நியமனம்

இந்த கோல் உலகக் கோப்பை தொடரில் கனடா அணியின் முதல் கோலாக அமைந்திருப்பதோடு, சாதனை கோலாவும் மாறியுள்ளது.

இதற்கு அடுத்தபடியாக ஆட்டத்தின் முடிவு வரை கோல் அடிப்பதற்காக கனடா அணி மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் கைகொடுக்காமல் போனது. இந்தப் போட்டியில் குரோஷியா அணி ஆட்டத்தின் 36, 44, 70, 90 ஆகிய நிமிடங்களில் மொத்தம் நான்கு கோல்கள் அடித்தன.

இதன்மூலம் 4-1 என்ற கோல் கணக்கில் குரோஷியா வெற்றி பெற்றது. குரூப் பிரிவில் 2 போட்டிகளில் தோல்வியை தழுவிய கனடா தொடரை விட்டு வெளியேறியது.

முதல் போட்டியில் பெல்ஜியம் அணிக்கு எதிராக 1-0 என்ற கணக்கில் கனடா அணி தோல்வியை தழுவியது. தற்போது குரோஷியா அணியிடம் இரண்டாவது தோல்வியை சந்தித்துள்ள நிலையில், கடைசி போட்டியில் டிசம்பர் 1ஆம் தேதி மொராக்கோ அணியை எதிர்கொள்கிறது.

டாபிக்ஸ்