தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Fifa Wc 2022: அமெரிக்காவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது நெதர்லாந்து

FIFA WC 2022: அமெரிக்காவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது நெதர்லாந்து

I Jayachandran HT Tamil

Dec 04, 2022, 06:14 AM IST

கத்தாரில் நடைபெறும் உலகக்கோப்பை போட்டியில் அமெரிக்காவை 3-1 என்ற கோல்கணக்கில் வென்று காலிறுக்குள் நுழைந்தது நெதர்லாந்து.
கத்தாரில் நடைபெறும் உலகக்கோப்பை போட்டியில் அமெரிக்காவை 3-1 என்ற கோல்கணக்கில் வென்று காலிறுக்குள் நுழைந்தது நெதர்லாந்து.

கத்தாரில் நடைபெறும் உலகக்கோப்பை போட்டியில் அமெரிக்காவை 3-1 என்ற கோல்கணக்கில் வென்று காலிறுக்குள் நுழைந்தது நெதர்லாந்து.

அல் ரய்யான்: 2022 உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்றிரவு நடைபெற்ற ரவுண்டு 16 போட்டியில் அமெரிக்காவை 3-1 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்குள் நெதர்லாந்து அணி நுழைந்தது.

ட்ரெண்டிங் செய்திகள்

FIFA WC 26 qualifiers: இரண்டாவது பட்டியலை வெளியிட்டார் இந்திய தலைமைப் பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக்

Madrid Open Tennis: மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி: முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ரூப்லேவ்

ISL 2024 Final: ஐபிஎல்-இல் விட்டதை ஐஎஸ்எல்-இல் பிடித்த மும்பை! இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம்

ISL 2024 Final: மூன்றாவது கோப்பையை எதிர்நோக்கும் மும்பை சிட்டி! பழிதீர்க்க காத்திருக்கும் மோகன் பகான் - இன்று பைனல்

பிபா உலகக்கோப்பையின் 22ஆவது சீசன் கத்தாரில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில ரவுண்டு 16 நாக்அவுட் சுற்று போட்டிகள் நேற்று தொடங்கின.

அல் ரய்யானில் உள்ள கலிபா ஸ்டேடியத்தில் நம்பர்

8ஆவது அணியான நெதர்லாந்தும் 16ஆவது அணியான அமெரிக்காவும் மோதின.

முதல் பாதி ஆட்டத்தில் அமெரிக்காதான் ஆதிக்கம் செலுத்தியது. இருப்பினும் அதை கோலாக மாற்ற வாய்ப்பில்லாமல் போய்விட்டது. நெதர்லாந்து தடுப்பு வீரர்கள் அமெரிக்க அணியின் முயற்சிகளை சிறப்பாகத் தடுத்து விளையாடினர்.

இரண்டாவது பாதியில் நெதர்லாந்து சுதாரித்துக் கொண்டு எதிர்ப்பு ஆட்டத்தில் இறங்கினர். 61ஆவது நிமிடத்தில் மெம்பிஸ் அடித்த பந்து கோல்போஸ்டை ஜஸ்ட் மிஸ் செய்தது.

76ஆவது நிமிடத்தில் அமெரிக்காவின் கிறிஸ்டின் ஹாஜி ரைட்டுக்கு சூப்பராக பாஸ் செய்தார். அதை ஹாஜி ரைட் சிறப்பாக அடித்து முதல் கோலைப் போட்டார்.

81ஆவது நிமிடத்தில நெதர்லாந்தின் டென்ஜெல், பிளைண்டு தள்ளிவிட்ட பந்தை கோலாக மாற்றி சமன் செய்தார்.

அடுத்த 2 கோல்களை அடிக்க டென்ஜெல் உதவி செய்தார். இதன்மூலம் உலகக் கோப்பையில் 2 கோல் அடிக்க உதவிய முதல் நெதர்லாந்து வீரர் என்ற பெருமையை அவர் படைத்துள்ளார்.

ஆட்டத்தின் இறுதியில் 3-1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து அணி வெற்றி பெற்றது.

இதுவரை நடைபெற்ற உலகக் கோப்பை போட்டிகளில் கடைசி 11 ஆட்டத்தில் ஒன்றில்கூட நெதர்லாந்து தோற்கவில்லை. 3 போட்டிகளை டிரா செய்துள்ளது.

டாபிக்ஸ்