தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  இரண்டாவது முறை..கோப்பை வெல்லாமல் வெறும் கையுடனே திரும்பிய பி.வி. சிந்து! இந்த சீசனில் தொடரும் தோல்வி முகம்

இரண்டாவது முறை..கோப்பை வெல்லாமல் வெறும் கையுடனே திரும்பிய பி.வி. சிந்து! இந்த சீசனில் தொடரும் தோல்வி முகம்

Oct 19, 2024, 04:40 PM IST

google News
பாரிஸ் ஒலிம்பிக் பெற்ற தோல்விக்கு பின்னர் தொடர் தோல்வியை சந்தித்து வரும் பி.வி. சிந்து, இந்த சீசனில் பங்கேற்றிருக்கும் தொடரில் கோப்பை வெல்லாமல் வெறும் கையுடனே திரும்பி வருகிறார். (AP)
பாரிஸ் ஒலிம்பிக் பெற்ற தோல்விக்கு பின்னர் தொடர் தோல்வியை சந்தித்து வரும் பி.வி. சிந்து, இந்த சீசனில் பங்கேற்றிருக்கும் தொடரில் கோப்பை வெல்லாமல் வெறும் கையுடனே திரும்பி வருகிறார்.

பாரிஸ் ஒலிம்பிக் பெற்ற தோல்விக்கு பின்னர் தொடர் தோல்வியை சந்தித்து வரும் பி.வி. சிந்து, இந்த சீசனில் பங்கேற்றிருக்கும் தொடரில் கோப்பை வெல்லாமல் வெறும் கையுடனே திரும்பி வருகிறார்.

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடர் டென்மார்க் நாட்டிலுள்ள ஓடென்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து தோல்வியுடன் வெளியேறியுள்ளார்.

இந்தோனேஷியா வீராங்கனைக்கு எதிராக தோல்வி

பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற வீராங்கனையான கிரிகோரியா துஞ்சங் என்பவரை எதிர்கொண்டார் பி.வி. சிந்து. பரபரப்பான இந்த ஆட்டத்தில் 13-21, 21-16, 9-21 என்ற புள்ளி கணக்கில் பி.வி. சிந்து தோல்வியுற்றார். சுமார் ஒரு மணி நேரம் இந்த போட்டி நீடித்தது.

உலக அளவில் 8வது இடத்தில் இருந்து வரும் இந்தோனேஷியா வீராங்கனைக்கு எதிராக பி.வி. சிந்து இதுவரை 12 முறை நேருக்கு நேர் மோதியுள்ளார். இதில் 2 முறை மட்டும் பி.வி. சிந்துவை அவர் வீழ்த்தியுள்ளார். ஆனால் அந்த இரு போட்டிகளும் முக்கிய போட்டியாக அமைந்திருந்தது சிந்துவுக்கு துர்தஷ்டமாகியுள்ளது.

ஐந்தாம் சீட் வீராங்கனையான துஞ்சங் அரையிறுதியில் டாப் சீட் வீராங்கனையான தென் கொரியாவின் அன் சே யங் என்பவரை எதிர்கொள்கிறார்.

டாப் சீட் சீனா வீராங்கனையை வீழ்த்திய சிந்து

முன்னதாக, காலிறுதிக்கான தகுதி சுற்று போட்டியில் உலக அளவில் 7வது இடத்தையும், நான்காம் சீட் வீராங்கனையான பலம் வாய்ந்த ஹான் யூ வை எதிர்கொண்டார் பி.வி. சிந்து. கடினமாக சென்ற இந்த போட்டியில் பி.வி. சிந்து 18-21, 21-12, 21-16 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றார்.

முதல் சுற்று போட்டியில் சீனா தைப்பே வீராங்கனை பை யூ போ என்பவரை 21-8, 13-7 என்ற புள்ளிக்கணக்கில் எளிதாக வீழ்த்தினார்.

டென்மார்க் ஓபன் தொடர்

டானிஷ் ஓபன் என்று அழைக்கப்படும் இந்த தொடர் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் தொடராக உள்ளது.

1936ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வந்த இந்த பேட்மிண்டன் தொடர் உலக அளவில் இரண்டாவது பழமையான பேட்மிண்டன் தொடராக இருந்து வருகிறது.

இந்த தொடருக்கான முதல் பட்டத்தை ஆண்கள் ஒற்றையர் பிரிவில், 1980இல் நடைபெற்ற தொடரில் முன்னாள் பேட்மிண்டன் பிரகாஷ் படுகோனே வென்றார். இதன் பின்னர் 32 ஆண்டுகள் கழித்து பெண்கள் ஒற்றையர் பிரிவில் சாய்னா நேவால் பட்டம் வென்றார்.

தொடர்ந்து 2017இல் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்ரீகாந்த் கிடாம்பி பதக்கத்தை தன் வசமாக்கினார். மொத்தமாக இந்த தொடரில் இந்தியா 3 முறை மட்டுமே பதக்கம் வென்றுள்ளது.

தொடர் தோல்வி

ஒலிம்பிக் போட்டியில் இரண்டாவது சுற்றில் வெளியேறிய பி.வி. சிந்து, பின்னர் கடந்த வாரம் பின்லாந்து நாட்டில் நடைபெற்ற ஆர்டிக் ஓபன் தொடரில் முதல் சுற்றிலேயே வெளியேறினார். அதன் பிறகு தற்போது டென்மார்க் ஓபன் காலிறுதி வரை சென்று தோல்வியை தழுவியுள்ளார்.

அதிக சம்பளம் பெறும் வீராங்கனையாக பி.வி. சிந்து

இந்திய நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி. சிந்து ஒற்றையர், இரட்டையர் பிரிவுகளில் பல்வேறு வெற்றிகளை குவித்து இந்தியாவுக்காக பல்வேறு பதக்கங்களை பெற்று தந்துள்ளார். இந்தியாவுக்காக இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை பெற்று தந்த பிவி சிந்து கடந்த ஆண்டில் அதிக சம்பளம் பெற்ற வீராங்கனைகள் லிஸ்டில் 12வது இடத்தை பிடித்துள்ளார்

இவர் களத்தில் ரூ. 82 லட்சமும், களத்துக்கு வெளியே ரூ. 57.5 கோடி வரை சம்பளமாக பெறுவதாக போபர்ஸ் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை