தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Saina Nehwal: பேட்மிடனுக்கு பதிலாக டென்னிஸ் தேர்ந்தெடுத்திருந்தால் சிறந்து விளங்கியிருப்பேன் - சாய்னா நேவால்

Saina Nehwal: பேட்மிடனுக்கு பதிலாக டென்னிஸ் தேர்ந்தெடுத்திருந்தால் சிறந்து விளங்கியிருப்பேன் - சாய்னா நேவால்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jul 11, 2024 05:55 PM IST

பேட்மிண்டன் விளையாடுவதற்குப் பதிலாக டென்னிஸ் விளையாட்டை தேர்ந்தெடுத்திருந்தால், ஒரு விளையாட்டு வீராங்கனையாக சிறந்து விளங்கியிருப்பேன் என்று இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேட்மிடனுக்கு பதிலாக டென்னிஸ் தேர்ந்தெடுத்திருந்தால் சிறந்து விளங்கியிருப்பேன் என சாய்னா நேவால் பேச்சு
பேட்மிடனுக்கு பதிலாக டென்னிஸ் தேர்ந்தெடுத்திருந்தால் சிறந்து விளங்கியிருப்பேன் என சாய்னா நேவால் பேச்சு (PTI)

இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனைகளில் ஒருவராக இருப்பவர் சாய்னா நேவால். உலகின் நம்பர் 1 இடத்தைப் பிடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை மட்டுமல்ல, இந்தியாவுக்காக பேட்மிண்டனில் முதல் ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் பெண் வீராங்கனையாகவும் உள்ளார்.

ராஷ்டிரபதி பவனில் வைத்து இந்திய குடியரசு தலைவர் துரெளபதி முர்முவுடன் இணைந்து, பேட்மிண்டன் விளையாட்டை விளையாடினார் சாய்னா நேவால்.

டென்னிஸ் விளையாட்டில் சிறப்பாக செயல்பட்டிருப்பேன்

இதையடுத்து ராஷ்டிரபதி பவனில் நடந்த "ஹெர் ஸ்டோரி-மை ஸ்டோரி" நிகழ்வின்போது பேசிய சாய்னா, "என் பெற்றோர் என்னை டென்னிஸில் சேர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் சில நேரங்களில் நான் நினைத்ததுண்டு.

அதிக பணம் மட்டுமல்லாமல், அதிக பலமும் என்னிடம் இருந்தது. எனவே பேட்மிண்டனை விட டென்னிஸில் என்னால் சிறப்பாக செயல்பட்டிருக்க முடியும். என்றார்.

ட்ரெண்டிங் செய்திகள்

பேட்மின்டன் விளையாட்டின் மீது ஆர்வத்தை ஏற்படுத்த பலருக்கும் சாய்னா ஒரு ஊக்கமாக இருந்தபோதிலும், 34 வயதான அவர் தனது 8 வயதில் முதன்முதலில் பேட்மிண்டன் ராக்கெட்டைத் தேர்ந்தெடுக்கும்போது யாரும் பெரிதாக கவனிக்கவில்லை.

எனக்கு முன்மாதிரி யாரும் இல்லை

"நான் பேட்மிண்டன் விளையாட்டை விளையாட தொடங்கும் போது, ​​எனக்கு முன்மாதிரி என பின்பற்றவதற்கு யாரும் இருந்ததில்லை. 'நான் உலகின் நம்பர் ஒன் ஆக வேண்டும் அல்லது ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவராக ஆக வேண்டும்' என்று யாரும் என்னிடம் சொன்னது கிடையாது. அதை எதிர்பார்க்கவும் இல்லை. பேட்மிண்டன் விளையாட்டில் எனக்கு முன் இதை யாரும் செய்யவும் இல்லை.

இருப்பினும் இளைஞர்கள் தங்களுக்கு பிடித்தமான விளையாட்டில் ஈடுபடுத்தி கொள்ள வேண்டும். நான் எப்போதும் குழந்தைகளிடமும், அவர்களின் பெற்றோர்களிடமும் விளையாட்டில் கவனம் செலுத்தச் சொல்கிறேன்.

பெண்கள் விளையாட்டில் ஈடுபடுத்த வேண்டும்

சீனா 60-70 பதக்கங்களை வெல்கிறது, எங்களுக்கு 3-4 மட்டுமே கிடைக்கும். எத்தனையோ மருத்துவர்கள் மற்றும் பொறியாளர்கள் உள்ளனர். அவர்களின் பெயர்கள் செய்தித்தாள்களில் வருவதில்லை.

பெண்கள் குறிப்பாக முன்னோக்கி வந்து உடற்தகுதி பெறவும், விளையாட்டுகளில் ஈடுபடவும் நான் விரும்புகிறேன். இப்போது நாங்கள் குழந்தைகளுக்காக இருக்கிறோம், உலகின் நம்பர் ஒன்கள், ஒலிம்பிக் சாம்பியன்கள் மற்றும் பல பதக்கம் வென்றவர்கள் முன் மாதிரியாக உள்ளனர்." என்றார்

அவரது தொழில் வாழ்க்கையைப் பற்றி யோசித்த அவர், திறமையின் பற்றாக்குறையை தனது கடின உழைப்பு ஈடுசெய்தது என்றார்.

தொடர்ந்து "எனது கடின உழைப்பை நேசித்தேன். நான் மிகவும் திறமையான நபர் அல்ல. ஒரு திறமையான வீரர் 100 முறை செய்தால் அதை நான் 1000 முறை செய்ய வேண்டும். ஆனால் நான் கடின உழைப்பை விரும்புகிறேன். எனது பயிற்சியாளர்கள் ஒருபோதும் என் அணுகுமுறையை விட்டுக்கொடுக்க மாட்டார்கள்."

இவ்வாறு அவர் பேசினார்.

சாய்னா பதக்கங்கள்

லண்டன் ஒலிம்பிக் வெண்கலத்தைத் தவிர, நேவால் உலக சாம்பியன்ஷிப்பில் ஒரு வெண்கலம் மற்றும் வெள்ளி மற்றும் பல காமன்வெல்த் விளையாட்டுப் தங்கம், பெண்கள் ஒற்றையர் பிரிவில் இரண்டு பதக்கங்களை வென்றுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன: