Yuzvendra Chahal: ஆர்சிபி என்னிடம் சத்தியம் செய்தார்கள் - யுஸ்வேந்தர சாஹல் வேதனை!
Jul 17, 2023, 10:24 AM IST
பெங்களூர் அணிக்காக 140 போட்டிகளில் விளையாடி உள்ளேன் ஆனால் ஏலத்தில் எடுக்கவில்லை என கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்தர சாஹல் வேதனை தெரிவித்துள்ளார்.
ஆர்சிபி அணிக்காக 8 ஆண்டுகள் விளையாடி உள்ளேன் ஆனால் அவர்கள் என்னை ஏலத்தில் எடுக்கவில்லை கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்தர சாஹல் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக 8 ஆண்டுகள் விளையாடிய யுஸ்வேந்தர சாஹல், 2022 ஆம் ஆண்டு முதல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடுகிறார். அதிக விக்கெட்களுக்காக 2022 ஆம் ஆண்டு ஊதா நிறத் தொப்பி விருதை வாங்கினார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய கிரிக்கெட் வீரர் டிவைன் பிராவோ 183 விக்கெட்டுகள் எடுத்து முதலிடத்தில் இருந்தார். அதற்குப் பிறகு ராஜஸ்தான் ராயல்ஸ் அணையின் சுழல் பந்துவீச்சாளரான யுஸ்வேந்தர சாஹல் 145 போட்டுகளில், 187 விக்கெட்டுகள் எடுத்து பிராவோவை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தை பிடித்தார்.
அதன் பின்னர் பெங்களூரு அணி 2022 ஆம் ஆண்டு ஏலத்தில் உங்களை எடுக்காதது ஏன் என யுஸ்வேந்தர சாஹலிடம் நேர்காணல் ஒன்றில் கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது அவர், பெங்களூர் ஆர்சிபி அணிக்காக 140 போட்டுகளில் நான் விளையாடி உள்ளேன். ஆனால் பெங்களூரு அணியிடமிருந்து சரியான தகவல்கள் என்னிடம் தெரிவிக்கவில்லை. மற்றவர்களைக் காட்டிலும் உனக்காக நான் ஏலத்திற்குச் செல்வேன் எனச் சத்தியம் செய்தனர்.
ஆனால் பெங்களூர் அணிக்காக எட்டு ஆண்டுகள் விளையாடிய என்னை அவர்கள் ஏலத்தில் எடுக்கவில்லை. அதனால் நான் மிகவும் கோபம் அடைந்தேன். சின்னசாமி கிரிக்கெட் விளையாட்டு மைதானம் எனக்கு மிகவும் பிடித்த மைதானத்தில் ஒன்று.
என் மீது விராட் கோலி மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். அவரது தலைமையில் நான் சிறப்பாக விளையாடினேன். பெங்களூர் அணிக்கு நான் விளையாடிய போது 16 ஓவருக்கு பின்பு எனக்கு பவுலிங் தர மாட்டார்கள். ஆனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் டெத் ஓவரும் நான் வீசினேன். எதுவாக இருந்தாலும் சரி நடப்பது நன்மைக்கே என தெரிவித்தார்.
யுஸ்வேந்தர சாஹல் கூறிய இந்த கருத்துக்குப் பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களது கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: