தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Jonny Bairstow: பேர்ஸ்டோ விக்கெட் அப்பீல் விவகாரம்-ஸ்டூவர்டு பிராட் கருத்து

Jonny Bairstow: பேர்ஸ்டோ விக்கெட் அப்பீல் விவகாரம்-ஸ்டூவர்டு பிராட் கருத்து

Manigandan K T HT Tamil

Jul 04, 2023, 04:46 PM IST

google News
Stuart Broad: இந்த விக்கெட்டும் இங்கிலாந்து அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்த விக்கெட்டுக்கு இங்கிலாந்து ரசிகர்கள் கடுமையாக எதிர்ப்பு குரல்களை எழுப்பினர். (AP)
Stuart Broad: இந்த விக்கெட்டும் இங்கிலாந்து அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்த விக்கெட்டுக்கு இங்கிலாந்து ரசிகர்கள் கடுமையாக எதிர்ப்பு குரல்களை எழுப்பினர்.

Stuart Broad: இந்த விக்கெட்டும் இங்கிலாந்து அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்த விக்கெட்டுக்கு இங்கிலாந்து ரசிகர்கள் கடுமையாக எதிர்ப்பு குரல்களை எழுப்பினர்.

ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி உலகப் புகழ் பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது.

இந்த போட்டியில் வெற்றிக்காக போராடிய இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 155 ரன்கள் எடுத்தார். அவர் களத்தில் இருந்த வரை இங்கிலாந்து வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் துர்தஷ்டசமாக அவர் அவுட்டான நிலையில் இங்கிலாந்து அணி 371 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் 327 ரன்களுக்கு ஆல்அவுட்டானது.

இந்தப் போட்டியில் இங்கிலாந்து வீரர் பேர்ஸ்டோவின் ரன் அவுட் திருப்பு முனையாக அமைந்ததுடன், சர்ச்சையும் கிளப்பியுள்ளது. அவர் பந்து வீசி கீப்பரிடம் சென்ற பிறகு, சிறிது விநாடிகள் கழித்து கிரீஸூக்கு வெளியே சென்ற பிறகு, ஆஸ்திரேலியா விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி உடனடியாக ஸ்டம்பில் அடித்து அவுட் அப்பீல் செய்தார்.

இது மூன்றாவது நடுவரிடமும் அப்பீல் செல்ல அவர் அவுட் கொடுத்தார். இந்த விக்கெட்டும் இங்கிலாந்து அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்த விக்கெட்டுக்கு இங்கிலாந்து ரசிகர்கள் கடுமையாக எதிர்ப்பு குரல்களை எழுப்பினர்.

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் 5-வது நாளில் ஜானி பேர்ஸ்டோ சர்ச்சைக்குரிய வகையில் ஆட்டமிழந்ததை அடுத்து, ஜானி பேர்ஸ்டோவுக்கான ஸ்டம்பிங் மேல்முறையீட்டை திரும்பப் பெறுவது குறித்து ஆஸ்திரேலிய மூத்த வீரர்கள் யாரும் பரிசீலிக்காதது ஆச்சரியமாக இருப்பதாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் தெரிவித்துள்ளார்.

"நாங்கள் மதிய உணவின் போது ஆஸ்திரேலியர்களிடம் சொன்னதை என்னால் நம்ப முடியவில்லை, அவர்களில் ஒரு மூத்த வீரர் கூட அவர்கள் என்ன செய்தார்கள் என்று கேள்வி எழுப்பவில்லை. இது என்னை வியப்பில் ஆழ்த்தியது. ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் மிகவும் சிறந்த மனிதர். ஆனால், அவர் எதுவும் குறிப்பிடவில்லை. லார்ட்ஸில் இருந்தவர்கள் தீவிர கிரிக்கெட் ரசிகர்கள். அவர்களிடமிருந்து இதுபோன்ற எதிர்வினையை நான் இதற்கு முன்பு பார்த்ததில்லை" என்று பிராட் குறிப்பிட்டுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி