Asia Cup Cricket: பாகிஸ்தானுக்கு இந்திய கிரிக்கெட் அணி செல்கிறதா?-ஜெய் ஷா பதில்
May 25, 2023, 03:50 PM IST
BCCI: உலகக் கோப்பை மற்றும் சர்வதேச போட்டிகளில் மட்டுமே இந்தியாவும் பாகிஸ்தானும் மோதி விளையாடி வருகின்றன.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வரும் செப்டம்பர் மாதம் நடத்துகிறது. 8 அணிகள் பங்கெடுக்கும் அந்தப் போட்டியில், இந்திய அணியை, இந்திய கிரிக்கெட் வாரியம் அனுப்ப மறுத்து வருகிறது.
அரசியல் ரீதியிலான காரணத்தால் கிரிக்கெட் வீரர்களை பாகிஸ்தானுக்கு அனுப்ப முடியாது என்று பிசிசிஐ தரப்பு தெளிவுப்படுத்திவிட்டது. இரு தரப்பு கிரிக்கெட் போட்டிக்கும் உடன்பட மாட்டோம் என பிசிசிஐ தெரிவித்தது.
உலகக் கோப்பை மற்றும் சர்வதேச போட்டிகளில் மட்டுமே இந்தியாவும் பாகிஸ்தானும் மோதி விளையாடி வருகின்றன.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இந்திய அணி தங்கள் நாட்டுக்கு வரவில்லை என்றால் இந்தியாவில் நடக்கவிருக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நாங்கள் புறக்கணிப்போம் என பாகிஸ்தான் மல்லுக்கட்டி நிற்கிறது.
இருப்பினும், இந்தியா தொடர்ந்து பாகிஸ்தானுக்கு பயணம் செய்து விளையாட மறுத்து வந்ததால், பொதுவான இடத்திலும் சில ஆட்டங்களை நடத்த பாகிஸ்தான் முன்வந்திருக்கிறது.
இந்நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரில் உலகின் மிகப் பெரிய ஸ்டேடியமான நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் ஐபிஎல் பைனல் போட்டி நடக்கவுள்ளது.
அன்றைய தினம் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி குறித்து முடிவு எடுக்கப்படும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் கிரிக்கெட் வாரியத் தலைவர்கள் ஐபிஎல் பைனல் போட்டியைக் காண வருகை தருகின்றனர்.
அப்போது அவர்களுடன் கலந்தாலோசனை நடத்தி ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்பான முடிவு எடுக்கப்படும் என்றார் ஜெய் ஷா.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் நஜம் சேதியும் அந்த ஆலோசனைக் கூட்டத்தில் காணொலி முறையில் பங்கேற்கிறார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
டாபிக்ஸ்