தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  சென்னையில் முதல் முறையாக பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டி!

சென்னையில் முதல் முறையாக பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டி!

Aug 15, 2022, 11:20 PM IST

சென்னையில் முதல் முறையாக பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டி வரும் செப்டம்பர் மாதத்தில் நடைபெறவுள்ளது. இந்த டென்னிஸ் தொடருக்கு தமிழக அரசு ஸ்பான்சராக செயல்படுகிறது.
சென்னையில் முதல் முறையாக பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டி வரும் செப்டம்பர் மாதத்தில் நடைபெறவுள்ளது. இந்த டென்னிஸ் தொடருக்கு தமிழக அரசு ஸ்பான்சராக செயல்படுகிறது.

சென்னையில் முதல் முறையாக பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டி வரும் செப்டம்பர் மாதத்தில் நடைபெறவுள்ளது. இந்த டென்னிஸ் தொடருக்கு தமிழக அரசு ஸ்பான்சராக செயல்படுகிறது.

சென்னை நுங்கம்பாகக்த்தில் உள்ள டென்னிஸ் ஸ்டேடியத்தில் செப்டம்பர் 12 முதல் 18 வரை முதல் முறையாக பெண்கள் டபிள்யுடிஏ 250 சர்வதேச டென்னிஸ் போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த போட்டியை தமிழக அரசு ஸ்பான்சர் செய்து நடத்தவுள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

FIFA WC 26 qualifiers: இரண்டாவது பட்டியலை வெளியிட்டார் இந்திய தலைமைப் பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக்

Madrid Open Tennis: மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி: முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ரூப்லேவ்

ISL 2024 Final: ஐபிஎல்-இல் விட்டதை ஐஎஸ்எல்-இல் பிடித்த மும்பை! இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம்

ISL 2024 Final: மூன்றாவது கோப்பையை எதிர்நோக்கும் மும்பை சிட்டி! பழிதீர்க்க காத்திருக்கும் மோகன் பகான் - இன்று பைனல்

இதுதொடர்பாக தமிழ்நாடு டென்னிஸ் சங்க தலைவர், முன்னாள் டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜ் கூறியதாவது:

அண்மையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்பாக நடத்தி முடித்துள்ளார். இதற்கு தமிழக அரசுக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

செப்டம்பார் மாதம் நடைபெற இருக்கும் பெண்களுக்கான டபிள்யுடிஏ 250 டென்னிஸ் போட்டி தொடரை வெற்றிகரமாக இங்கு நடத்த ஆர்வமாக உள்ளோம். இந்த தொடர் தமிழகத்தில் மட்டுமில்லாமல், இந்திய அளவிலும் பெண்கள் டென்னிஸ் பிரபலம் அடையவும், வளர்ச்சி அடையவும் உதவும் என்றார்.

ஆடவருக்கான ஏடிபி டென்னிஸ் போட்டியில் சென்னையில் 1997ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்தப்போட்டியானது கோல்டு பிளேக் ஓபன். டாடா ஓபன், சென்னை ஓபன் என பல பெயர்களில் 21 ஆண்டுகள் வரை நடைபெற்றது. 2018ஆம் ஆண்டில் இந்தப் போட்டி மகாராஷ்டிர மாநிலம் புணேவுக்கு மாற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து தற்போது முதல் முறையாக பெண்களுக்கான சர்வதேச டென்னிஸ் போட்டியான டபிள்யுடிஏ 250 போட்டிகளில் சென்னை நடைபெறவுள்ளன.