தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Wtc Final: ஆஸி., வேகப்பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் ஃபிட்னஸ் அப்டேட்

WTC final: ஆஸி., வேகப்பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் ஃபிட்னஸ் அப்டேட்

Manigandan K T HT Tamil

May 31, 2023, 10:41 AM IST

Josh Hazlewood: 32 வயதாகும் ஹேசில்வுட் ஆஸ்திரேலிய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் 57 போட்டிகளில் விளையாடி 215 விக்கெட்டுகளை எடுத்துக் கொடுத்திருக்கிறார். (AFP)
Josh Hazlewood: 32 வயதாகும் ஹேசில்வுட் ஆஸ்திரேலிய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் 57 போட்டிகளில் விளையாடி 215 விக்கெட்டுகளை எடுத்துக் கொடுத்திருக்கிறார்.

Josh Hazlewood: 32 வயதாகும் ஹேசில்வுட் ஆஸ்திரேலிய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் 57 போட்டிகளில் விளையாடி 215 விக்கெட்டுகளை எடுத்துக் கொடுத்திருக்கிறார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி ஜூன் 7ம் தேதி தொடங்குகிறது. இங்கிலாந்தில் நடைபெறவுள்ள இந்த பைனல் போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன.

ட்ரெண்டிங் செய்திகள்

FIFA WC 26 qualifiers: இரண்டாவது பட்டியலை வெளியிட்டார் இந்திய தலைமைப் பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக்

Madrid Open Tennis: மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி: முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ரூப்லேவ்

ISL 2024 Final: ஐபிஎல்-இல் விட்டதை ஐஎஸ்எல்-இல் பிடித்த மும்பை! இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம்

ISL 2024 Final: மூன்றாவது கோப்பையை எதிர்நோக்கும் மும்பை சிட்டி! பழிதீர்க்க காத்திருக்கும் மோகன் பகான் - இன்று பைனல்

இதற்காக இந்திய அணியின் ஒரு பகுதியினர் ஏற்கனவே லண்டன் சென்றுவிட்டனர்.

இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில், ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் ஃபிட்னஸ் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.

ஹேசில்வுட் ஒரு சிறிய உடல்நலப் பிரச்சனையுடன் போராடி வருகிறார், இதன் காரணமாக அவர் இந்த மாத தொடக்கத்தில் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) அமைப்பான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுடனான தனது நேரத்தை குறைக்க வேண்டியிருந்தது.

ஆனால், தற்போது அவர் முழு டிரைனிங்கில் ஈடுபட்டு வருகிறார். முழு உடல் தகுதியுடன் மீண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்தில் தான் அவர் பயிற்சி செய்து வருகிறார். இதன்மூலம், அவர் பிளேயிங் லெவனில் இடம்பிடிப்பார் என நம்பப்படுகிறார்.

இதுகுறித்து ஹேசில்வுட் கூறுகையில், "எனது ஃபிட்னஸ் லெவல் நன்றாக இருக்கிறது. ஒவ்வொரு செசனும் எனக்கு முக்கியம். ஜூன் 7ம் தேதி வரை நான் பயிற்சியில் ஈடுபடுவேன்.

எங்களுக்கு இன்னும் மூன்று முதல் நான்கு செசன்ஸ் இருக்கும். எனவே, அனைத்து பயிற்சிகளையும் சரியாக மேற்கொள்ள வேண்டியிருக்கிறது என்றார் ஹேசில்வுட்.

இவர், இந்தியாவில் நடந்த பார்டர்-கவாஸ்கர் போட்டித் தொடரில் கூட பங்கேற்கவில்லை. எனினும், ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆர்சிபி அணிக்காக 3 ஆட்டங்களில் மட்டும் விளையாடினார்.

32 வயதாகும் ஹேசில்வுட் ஆஸ்திரேலிய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் 57 போட்டிகளில் விளையாடி 215 விக்கெட்டுகளை எடுத்துக் கொடுத்திருக்கிறார்.

அவர் மொத்தம் டெஸ்டில் மட்டும் 12,235 பந்துகளை வீசியிருக்கிறார். ஒரு நாள் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை அவர் 107 விக்கெட்டுகளையும், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 53 விக்கெட்டுகளையும் காலி செய்திருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்