தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Asian Games Chess: மூன்றாவது சுற்று செஸ் போட்டியில் இந்திய வீரர்கள் வெற்றி.. ஹரிகா தோல்வி

Asian Games Chess: மூன்றாவது சுற்று செஸ் போட்டியில் இந்திய வீரர்கள் வெற்றி.. ஹரிகா தோல்வி

Manigandan K T HT Tamil

Sep 25, 2023, 05:30 PM IST

google News
மற்றொரு ஆட்டத்தில் அர்ஜூன் 1-0 என்ற செட் கணக்கில் வியட்நாமின் என்கோக் ட்ரூங் சன் குயெனை தோற்கடித்தார். விதித் 1-0 என்ற கோல் கணக்கில் திலாந்தின் லாவோஹவிராபாப் பிரினை வென்றார்.

ஆசிய விளையாட்டு போட்டியில் ஆடவர் தனிநபர் செஸ் போட்டியில் அர்ஜூன், விதித் வெற்றியடைந்தனற். மகளிர் பிரிவில் கோனேறு ஹம்பி டை செய்தார். ஹரிகா தோல்வி கண்டார்.

சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆண்கள் தனிநபர் பிரிவில் அர்ஜூன் குமார், விதித் சந்தோஷ் ஆகியோர் 3-வது சுற்றில் வெற்றி பெற்றனர்.

ஹரிகா 1-0 என்ற கணக்கில் சீனாவின் ஹவு யிஃபானிடம் தோற்றார். ஹம்பி 0.5-0.5 என்ற கணக்கில் சீனாவின் ஜூ ஜினருடன் விளையாடினார்.

மற்றொரு ஆட்டத்தில் அர்ஜூன் 1-0 என்ற செட் கணக்கில் வியட்நாமின் என்கோக் ட்ரூங் சன் குயெனை தோற்கடித்தார். விதித் 1-0 என்ற கோல் கணக்கில் திலாந்தின் லாவோஹவிராபாப் பிரினை வென்றார்.

முன்னதாக தனிநபர் சதுரங்கத்தின் இரண்டாவது சுற்றில் விதித் 1-0 என்ற செட் கணக்கில் கஜகஸ்தானின் காசிபெல்க் நோகர்பெக்கிடமும், அர்ஜூன் 0.5-0.5 என்ற செட் கணக்கில் வியட்நாமின் லெ துவான் மின்னுடனும் தோல்வியடைந்தனர்.

மற்றொரு ஆட்டத்தில் ஹரிகா 1-0 என்ற செட் கணக்கில் சிங்கப்பூரின் கோங் கியான்யூனையும், ஹம்பி 1-0 என்ற செட் கணக்கில் வியட்நாமின் பாம் லெ தாவோ குயெனையும் வென்றனர்.

ஆடவர் முதல் சுற்றில் விதித் 1-0 என்ற கணக்கில் வங்கதேசத்தின் ரகுமான் முகமது பஹத்தை தோற்கடித்தார். அர்ஜூன் 1-0 என்ற கோல் கணக்கில் பிலிப்பைன்ஸின் பெர்சமினா பாலோவை வென்றார்.

ஆடவர் மற்றும் பெண்களுக்கான தனிநபர் சதுரங்கப் போட்டிகளின் நான்கு சுற்றுகளும் திங்கள்கிழமை நடைபெறவுள்ளன.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சதுரங்கம் 2006 ஆம் ஆண்டில் தோஹா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் 2010 ஆம் ஆண்டில் குவாங்சோவில் மட்டுமே இடம்பெற்றது.

ஆசிய விளையாட்டு செஸ் போட்டியில் இந்தியா 2 தங்கம், 2 வெண்கலம் என மொத்தம் 4 பதக்கங்களை வென்றுள்ளது. தோஹாவில் 2006 ஆம் ஆண்டில் பெண்கள் தனிநபர் மற்றும் கலப்பு குழு போட்டிகளில் கோனேரு ஹம்பி இரண்டு தங்கப் பதக்கங்களையும் வென்றார்.

ஆசிய விளையாட்டு 2023 செஸ்: இந்திய அணி

ஆண்கள்: டி.குகேஷ், விதித் குஜ்ரதி, அர்ஜூன் எரிகைசி, பி.ஹரிகிருஷ்ணா, ஆர்.

பெண்கள்: கோனேரு ஹம்பி, டி.ஹரிகா, ஆர்.வைஷாலி, வந்திகா அகர்வால், சவிதா ஸ்ரீ.

துப்பாக்கி சுடுதல் மற்றும் படகோட்டி வீரர்கள் இன்று ஹாங்ஜோ 2023 இல் இந்தியாவின் பட்டியலில் ஐந்து பதக்கங்களை சேர்த்தனர், அதே நேரத்தில் மகளிர் கிரிக்கெட் அணி இறுதிப் போட்டியில் பங்களாதேஷை தோற்கடித்து தங்கம் வென்றது.

இதன் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 2 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 11 பதக்கங்களை வென்றுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி