Asian Games 2023: ஒரே நாளில் 2 பதக்கங்களை தட்டி தூக்கிய இந்திய வீரர்
Shooting: ஒரே நாளில் இரண்டு பதக்கங்கள் வெல்வேன் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை என்றார் ஐஸ்வரி.
ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் குழு பிரிவில் தங்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த ஐஸ்வரி, அதே பிரிவின் தனிநபர் பிரிவிலும் வெண்கலப் பதக்கம் வென்றார்.
இரண்டு பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர்.
ஒரே நாளில் இரண்டு பதக்கங்கள் வெல்வேன் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை என்றார் ஐஸ்வரி.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இவர் மேலும் கூறுகையில், இது ஒரு தங்கப் பதக்கம் மட்டுமே அடங்கியது அல்ல (குழுப் போட்டியில்) ஆனால் எங்கள் உலக சாதனையும் கூட, எனவே இது மிகவும் சிறப்பு வாய்ந்தது. குழு பிரிவில் தங்கம் வென்று ஆசிய விளையாட்டுப் போட்டியில் புதிய உலக சாதனை படைத்ததில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். தேசிய கீதம் இசைக்கப்படும்போது ஒரு விளையாட்டு வீரருக்கு இது பெருமையான தருணம், அதற்கு நிகர் வேறு எதுவும் இல்லை.
திவ்யான்ஷ் சிங், ருத்ரங்ஷ் பாட்டீல் ஆகியோரும் குரூப் பிரிவில் அங்கம் வகித்தனர்.
திவ்யான்ஷ் சிங் கூறுகையில், "முதலில் எங்கள் பயிற்சியாளர்கள் எங்களை வாழ்த்தினர். போட்டி குறித்து எங்களிடம் கேட்கவில்லை. இதனால் பயிற்சியாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்றோம் என்று தெரிந்ததும் எதிர்பாராத மகிழ்ச்சி. மற்ற தனிநபர் பதக்கங்களை வென்றபோது அந்த மகிழ்ச்சியை இதற்கு முன்பு ஒருபோதும் உணர்ந்ததில்லை. நமது தேசிய கீதம் இசைக்கப்படுவதைக் கேட்டதும் ஏற்பட்ட உணர்வை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியாது" என்றார்.
ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் ஐஸ்வரி மொத்தம் 228.8 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றார். துப்பாக்கி சுடுதல் போட்டியில் சக வீரர் ருத்ரான்ஷ் பாட்டீலை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. பாட்டீல் 208.7 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளார்.
ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிள் டீம் பிரிவில் 1893.7 புள்ளிகள் பெற்று சீனாவின் உலக சாதனையான 1893 புள்ளிகளை முறியடித்து இந்தியா தனது முதல் தங்கத்தை வென்றது.
இதுவரை இந்தியா 1 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 10 பதக்கங்களை வென்றுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்