தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  75th Independence Day: புதிய ஜெர்சியை வெளியிட்ட பிசிசிஐ

75th Independence day: புதிய ஜெர்சியை வெளியிட்ட பிசிசிஐ

Aug 15, 2022, 07:59 PM IST

நாட்டின் 75வது சுதந்திர தின ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சியை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
நாட்டின் 75வது சுதந்திர தின ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சியை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

நாட்டின் 75வது சுதந்திர தின ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சியை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

75வது சுதந்திர தின ஆண்டு விழா நாடுமுழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நாட்டு மக்கள் தங்களது வீடுகளில் தேசிய கொடியை பறக்கவிட்டு சுதந்திர தினத்தை கொண்டாடினர்.

ட்ரெண்டிங் செய்திகள்

ISL 2024 Final: ஐபிஎல்-இல் விட்டதை ஐஎஸ்எல்-இல் பிடித்த மும்பை! இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம்

ISL 2024 Final: மூன்றாவது கோப்பையை எதிர்நோக்கும் மும்பை சிட்டி! பழிதீர்க்க காத்திருக்கும் மோகன் பகான் - இன்று பைனல்

Mallika Nadda: ஸ்பெஷல் ஒலிம்பிக் ஆசிய பசிபிக் ஆலோசனை கவுன்சில் தலைவராக மல்லிகா நட்டா நியமனம்

Olympic Qualifiers: ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் பங்கேற்க சர்வதேச பயிற்சி: நன்றி தெரிவித்த ஃபென்சர் தனிக்ஷா

இதையடுத்து இந்த நாளில் இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சியை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இந்திய அணி வரும் ஆகஸ்ட் 18 முதல் 22 வரை ஜிம்பாப்வே சென்று அந்த அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. இந்தப் போட்டிகள் அனைத்து ஹராரேவில் நடைபெற உள்ளன.

ஆசிய கோப்பையில் விளையாடும் வீரர்களில் சிலர் மட்டுமே இந்தப் போட்டியில் பங்கேற்க உள்ளனர். மற்றபடி இளம் வீரர்களுக்கும், ரிசர்வ் வீரர்களும் இந்த தொடரில் பங்கேற்கவுள்ளனர். இதன் பின்னர் ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் ஆசிய கோப்பை 2022 தொடரில் இந்தியா பங்கேற்கவுள்ளது.

இதற்கிடையே, சுதந்திர தினமான இன்று இந்திய அணியின் புதிய ஒரு நாள் ஜெர்சியை பிசிசிஐ தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளது. அதில் ஜெர்சியின் முன் பகுதியில் கோடுகளுக்கு இடையே, இடது பக்கத்தில் மூவர்ண கொடி இடம்பிடித்து. 75 என்ற எண் பலமுறை ப்ரிண்ட் செய்யப்பட்டதாக புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

பிசிசிஐ தனது பதிவில், 75வது ஆண்டு விழா சுதந்திர தின கொண்டாட்டத்தை தேசிய கொடி இடம்பெற்றிருக்கும் இந்த ஜெர்சியை அணிந்து கொண்டாடுவோம். மிக குறைந்த அளவு எண்ணிக்கை மட்டுமே உள்ளது என குறிப்பிட்டுள்ளது.

டாபிக்ஸ்