தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  International Left Handers Day History And It Importance

Left Handers day: தனித்துவம் கொண்ட இடது கை பழக்கம் உடையவர்கள் !

Aug 13, 2022, 11:59 PM IST

இடது கை பழக்கம் உடையர்களுக்கான சர்வதேச நாள் ஆகஸ்ட் 13, 1992 முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாள் கடைப்பிடிப்பதற்கான காரணமாக இடது கை பழக்கம் உடையவர்களை குறிக்கும் மருத்துவ சொல்லான சினிஸ்ட்ராலிட்டி என்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது.

  • இடது கை பழக்கம் உடையர்களுக்கான சர்வதேச நாள் ஆகஸ்ட் 13, 1992 முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாள் கடைப்பிடிப்பதற்கான காரணமாக இடது கை பழக்கம் உடையவர்களை குறிக்கும் மருத்துவ சொல்லான சினிஸ்ட்ராலிட்டி என்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது.
இடது கை பழக்கம் உடையவர்களை எபிஜெனிடிக் என ஆராய்ச்சியாளர்கள் குறிக்கிறார்கள். இதனை ஜெனிடிக், உயிரியல் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றின் கலவை என்கிறார்கள்
(1 / 8)

உலகத்தில் உள்ள மக்கள் தொகையில் பொரும்பாலோனோர் வலது கை பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள். இடதுகை பழக்கம் உடையவர்கள் உலகம் முழுவதிலும் மொத்தம் 10 முதல் 12 சதவீதத்தினர் உள்ளார்கள்
(2 / 8)

உலக அளவில் பல்வேறு பிரபலங்கள் இடதுகை பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் பட்டியல் சற்று ஆச்சர்யம் அளிக்கலாம். நிலவில் முதன்முதலாக காலடி எடுத்து வைத்த நீல் ஆம்ஸ்டராங், அமெரிக்கா முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, ஹாலிவுட் நடிகை ஏஞ்சிலினா ஜோலி என இந்த பட்டியல் பெரிதாக நீள்கிறது
(3 / 8)

இந்தியாவை பொறுத்தவரை பிரதமர் நரேந்திர மோடி, ரதன் டாட்டா, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டென்டுல்கர், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் ஆகியோர் இடது கையில் எழுதும், அதிகமாக பயன்படுத்தும் பழக்கம் உடையவர்களே
(4 / 8)

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல்வேறு பொருள்கள், எலெக்ட்ரிக் சாதனங்கள் என அனைத்து வலது பயனாளர்களுக்கு ஏற்றவாறே உற்பத்தி செய்யப்படுகின்றன. இதை இடது கை பழக்கம் உடையவர்கள் பயன்படுத்த சிரமம் அடைகிறார்கள். இது அவர்களுக்கான அநீதியாகவே பார்க்கப்படுகிறது
(5 / 8)

இடது கை பழக்கம் உள்ளவர்களை அமெரிக்கர்கள் செளத்பாவ்ஸ் என்று அழைக்கிறார்கள். பாக்ஸிங், பேஸ்பால் உள்பட சில விளையாட்டுகளில் இடதுகை பயண்படுத்துபவர்களை செளத்பாவ்ஸ் என்று கூறுகிறார்கள். அதேபோல் அமெரிக்காவில் உள்ள ஏராளமான பிரபலங்கள் இடது கை பழக்கம் உள்ளவர்களாகவே உள்ளார்கள்
(6 / 8)

இடது கையை பயன்படுத்துபவர்களுக்கு வலது மூளை பகுதி அதிகமாக ஆதிக்கம் செலுத்தும். படைப்பாற்றல், உள்ளுணர்வு போன்ற விஷயங்கள் மையமாக வலது மூளை உள்ளது. எனவே இடக்கை பழக்கம் உடையவர்கள் தர்க்க ரீதியாக இருப்பதை விட ஆக்கப்பூர்வமாக இருப்பார்கள்
(7 / 8)

இந்த நாளில் இடது கை பழக்கம் உடைய நண்பர்களோடு இணைந்து சாப்பாடு அல்லது காபி சாப்பிட்டு அவர்களைப் போல் அனைத்தையும் இடது கையில் செய்யும் பழக்கம் பல்வேறு நாடுகளில் இருந்து வருகிறது. அத்தோடு இடது கைகளில் செய்யும் அனைத்தும் விஷயங்களையும் போட்டோ எடுத்து, இடதுகை பழக்கம் உடையவர்கள் சிறப்பானவர்கள் என்பதை குறிக்கும் விதமாக புகைப்படங்கள், விடியோக்களை பகிரும் பழக்கமும் இருந்து வருகிறது
(8 / 8)

:

    பகிர்வு கட்டுரை