தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Yusuf Pathan: எம்பி ஆனார் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான்! நாடாளுமன்ற வேட்பாளராக தேர்வான இந்திய வீரர்கள்

Yusuf Pathan: எம்பி ஆனார் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான்! நாடாளுமன்ற வேட்பாளராக தேர்வான இந்திய வீரர்கள்

Jun 05, 2024, 12:34 AM IST

Yusuf Pathan Lok sabha Election 2024: நாடாளுமன்ற தேர்தலில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் யூசுப் பதான், கீர்த்தி ஆசாத் ஆகியோர் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றதுடன் எம்பி ஆகியுள்ளனர். 

  • Yusuf Pathan Lok sabha Election 2024: நாடாளுமன்ற தேர்தலில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் யூசுப் பதான், கீர்த்தி ஆசாத் ஆகியோர் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றதுடன் எம்பி ஆகியுள்ளனர். 
யூசுப் பதானுக்கு முன், இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலர் மக்களவை எம்.பி.க்களாக இருந்துள்ளனர். இவர்களில் கௌதம் கம்பீர், கீர்த்தி ஆசாத், நவ்ஜோத் சித்து, முகமது அசாருதீன் ஆகியோர் அடங்குவர்.
(1 / 9)

நாடாளுமன்ற தேர்தலில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யூசுப் பதான் வெற்றி பெற்றுள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட யூசுப், பஹ்ரம்பூர் தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியை தோற்கடித்தார்.
(2 / 9)

காங்கிரஸ் வேட்பாளர் ஆதிர் ரஞ்சன் செளத்ரிக்கு எதிராக 85,022 வாக்குகள் வித்தியாசத்தில் யூசுப் பதான் வெற்றி பெற்றுள்ளார். அவர் மொத்தம் 5, 24, 516 வாக்குகளை பெற்றுள்ளார்
(3 / 9)
காங்கிரஸ் வேட்பாளர் ஆதிர் ரஞ்சன் செளத்ரிக்கு எதிராக 85,022 வாக்குகள் வித்தியாசத்தில் யூசுப் பதான் வெற்றி பெற்றுள்ளார். அவர் மொத்தம் 5, 24, 516 வாக்குகளை பெற்றுள்ளார்(PTI)
1983ல் கபில்தேவ் தலைமையில் இந்திய அணி முதல் முறையாக உலகக் கோப்பையை வென்றது. அந்த அணியில் இடம்பிடித்திருந்த கீர்த்தி ஆசாத் 2014 நாடாளுமன்ற தேர்தலில் பீகாரில் உள்ள தர்பங்கா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்
(4 / 9)

மேற்கு வங்க மாநிலத்தில் பர்தமான்-துர்காபூர் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட கீர்த்தி ஆசாத், பாஜக வேட்பாளர் திலீப் கோஷ்க்கு எதிராக 1,37,981 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவர் மொத்தம் 7, 20. 667 வாக்குகளை பெற்றுள்ளார்
(5 / 9)

2019 தேர்தலில் பாஜக சார்பில் கெளதம் கம்பீர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் தற்போது அரசியலில் இருந்து விலகியுள்ளார்.
(6 / 9)

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் 2009 லோக்சபா தேர்தலில் எம்.பி.யானார். காங்கிரஸ் சார்பில் அசாருதீன் வெற்றி பெற்றார். இருப்பினும், இப்போது முகமது அசாருதீன் தீவிர அரசியலில் ஈடுபடவில்லை.
(7 / 9)

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து 2004 முதல் 2014 வரை எம்.பி.யாக இருந்தார். சித்து அமிர்தசரஸ் மக்களவைத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார்.
(8 / 9)

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேத்தன் செளகான், பாரதிய ஜனதா கட்சியில் நீண்ட காலமாக இருந்த அவர்,. 1991 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு முதல்முறையாக எம்.பி.யானார். இது தவிர, உத்தரப் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினராகவும் இருந்தார்.
(9 / 9)

:

    பகிர்வு கட்டுரை