தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  World Brain Tumour Day 2024: நரம்பியல் குறைபாடுகளை தடுக்கும் வழிகள்!உலக மூளை கட்டி தினம் 2024 கருபொருள் என்ன?

World Brain Tumour Day 2024: நரம்பியல் குறைபாடுகளை தடுக்கும் வழிகள்!உலக மூளை கட்டி தினம் 2024 கருபொருள் என்ன?

Jun 08, 2024, 06:00 AM IST

google News
உலக மூளை கட்டி தினம் இந்த ஆண்டு கருபொருள் ஆக மூளை ஆரோக்கியம் மற்றும் தடுப்பு உள்ளது. லக மூளைக் கட்டி தினம், இந்த கொடிய நோயை பற்றி மக்களுக்கு கற்பிக்க உதவும் இந்த நாள் நரம்பியல் அறிகுறிகள் மற்றும் குறைபாடுகளைத் தடுக்க உதவுகிறது. (Freepik)
உலக மூளை கட்டி தினம் இந்த ஆண்டு கருபொருள் ஆக மூளை ஆரோக்கியம் மற்றும் தடுப்பு உள்ளது. லக மூளைக் கட்டி தினம், இந்த கொடிய நோயை பற்றி மக்களுக்கு கற்பிக்க உதவும் இந்த நாள் நரம்பியல் அறிகுறிகள் மற்றும் குறைபாடுகளைத் தடுக்க உதவுகிறது.

உலக மூளை கட்டி தினம் இந்த ஆண்டு கருபொருள் ஆக மூளை ஆரோக்கியம் மற்றும் தடுப்பு உள்ளது. லக மூளைக் கட்டி தினம், இந்த கொடிய நோயை பற்றி மக்களுக்கு கற்பிக்க உதவும் இந்த நாள் நரம்பியல் அறிகுறிகள் மற்றும் குறைபாடுகளைத் தடுக்க உதவுகிறது.

மூளையை மிகவும் பலவீனப்படுத்தும் நோயாக மூளைக் கட்டி நோய் உள்ளது. ஆங்கிலத்தில் பிரெயின் ட்யூமர் என்று அழைக்கப்படும் இந்த நோய், மூளையின் செயல்பாட்டை சீர்குலைத்து, நடப்பதில் சிரமம், குறுகிய கால நினைவாற்றல் இழப்பு அல்லது கவனம் செலுத்துவதில் சிக்கல்கள் உள்ளிட்ட பல நரம்பியல் பிரச்னைகள் மற்றும் குறைபாடுகளை ஏற்படுத்தும்.

இந்த நோய் பாதிப்பு மூளை அல்லது அதன் உறையில் உள்ள திசுக்களின் அசாதாரண வளர்ச்சியாகும். மேலும் இது புற்றுநோயாகவோ அல்லது புற்றுநோயாக இல்லாமலோ இருக்கலாம். இந்த நோய் பாதிப்பை கண்டறிந்த பிறகு உடனடியாக சிகிச்சையளிக்கப்படாவிட்டால், மரணத்துக் வழிவகுக்கும். புற்றுநோய் கட்டிகளுக்கு உடனடி சிகிச்சை தேவைப்படும். இவை புற்றுநோய் அல்லாதவற்றை விட வேகமாக வளரும்.

மூளைக் கட்டியின் அறிகுறிகள் அவற்றின் இருப்பிடத்தைப் பொறுத்து வேறுபடலாம். மூளையின் குறைந்த செயல்பாட்டில் உள்ள பகுதிகளில் கட்டி உருவாகினால், கட்டி மிகப் பெரியதாக வளரும் வரை அறிகுறிகளை காட்டாது.

மூளை கட்டிகள் மூளை திசுக்களில் உருவாகலாம் அல்லது அவை உடலின் மற்ற பகுதிகளிலிருந்து மூளைக்கு பரவக்கூடும். இது மெட்டாஸ்டேடிக் மூளைக் கட்டி என்றும் அழைக்கப்படுகிறது.

மூளைக் கட்டியின் சில அறிகுறிகளில் வலிப்புத்தாக்கங்கள், கைகள் அல்லது கால்களில் பலவீனம் அல்லது உணர்வின்மை, நடக்கும்போது சமநிலையின்மை, காது கேளாமை, நடத்தையில் மாற்றம், இரட்டைப் பார்வை, நினைவாற்றல் இழப்பு அல்லது தலைவலி ஆகியவற்றின் மூலம் வெளிப்படும்

உலக மூளை கட்டி தினம் 2024 எப்போது?

உலக மூளை கட்டி தினம் ஆண்டுதோறும் ஜூன் 8ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இது மக்களுக்கு மூளையின் ஆரோக்கியம், செயல்பாடு, மூளை கட்டியின் பாதிப்பு குறித்து மக்களுக்கு கற்பிப்பதிலும், மூளைக் கட்டிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிப்பதிலும் நிலையான முயற்சிகளின் அவசியத்தை உலகளாவிய சுகாதார சமூகத்துக்கு நினைவூட்டும் விதமாக அமைகிறது.

உலக மூளைக் கட்டி தினத்தின் வரலாறு

உலக மூளைக் கட்டி தினத்தின் வரலாறு 24 ஆண்டுகளுக்கு முந்தையதாக உள்ளது.2000ஆவது ஆண்டில் முதல் முதலில் ஜெர்மனி நாட்டிலுள்ள லீப்ஜிக் நகரை தலைமையிடமாக கொண்ட ஜெர்மன் மூளைக் கட்டி சங்கத்தால் அனுசரிக்கப்பட்டது. உலகெங்கிலும் உள்ள மூளைக் கட்டி நோயாளிகளுக்கும், இந்த மூளை நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் சர்வதேச தினமாக இது அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

உலக மூளைக் கட்டி தினம் 2024 முக்கியத்துவம்

நரம்பியல் அறிகுறிகள் மற்றும் குறைபாடுகளைத் தடுக்க மூளைக் கட்டியை முன்கூட்டியே கண்டறிவது மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஆரம்ப அறிகுறிகளைப் பற்றி விழிப்புடன் இருப்பதுடன், சரியான நேரத்தில் அளிக்கப்படும் சிகிச்சை விரைவான மீட்பையும் உறுதி செய்யும்.

குறிப்பாக புற்றுநோய் கட்டிகள் ஆபத்தானவை என்பதால், அவை ஆரம்பகட்டதிலேயே உடனடியாக கவனிக்கப்பட வேண்டும். உலக மூளைக் கட்டி தினம், இந்த கொடிய நோயைப் பற்றி மக்களுக்கு கற்பிப்பதற்கும், நோய் தொடர்பான சவால்களை எதிர்கொள்வதற்கும், ஆராய்ச்சியை ஆதரிப்பதற்கும், புதிய மற்றும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட சிகிச்சை விருப்பங்களைக் கண்டறிவதற்கும் சரியான வாய்ப்பாக உள்ளது

உலக மூளைக் கட்டி தினம் 2024 கருபொருள்

உலக மூளைக் கட்டி தினம் 2024 கருப்பொருளாக, 'மூளை ஆரோக்கியம் மற்றும் தடுப்பு' உள்ளது. உங்கள் மூளையின் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வதும், சாத்தியமான ஆபத்து காரணிகளை நீக்குவதும் நோயின் அபாயத்தை தவிர்ப்பதில் பெரிதும் பங்களிக்கும்.

மூளைக் கட்டியின் குடும்ப வரலாற்றைக் கருத்தில் கொள்வதிலிருந்து, புகைபிடித்தல் போன்ற சுற்றுச்சூழலுக்கு ஆபத்துகளை விளைவிக்கும் கதிர்வீச்சு வெளிப்படுவதைத் தவிர்ப்பதன் மூலம் இதன் ஆபத்தைக் குறைக்கலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி