தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Congress President Polls: கர்நாடகாவில் இருந்து வாக்களிக்கிறார் ராகுல்

Congress president polls: கர்நாடகாவில் இருந்து வாக்களிக்கிறார் ராகுல்

Karthikeyan S HT Tamil

Oct 16, 2022, 08:08 PM IST

காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இத்தேர்தலில் ராகுல் கர்நாடாகவில் இருந்து தனது வாக்கை செலுத்த இருக்கிறார்.
காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இத்தேர்தலில் ராகுல் கர்நாடாகவில் இருந்து தனது வாக்கை செலுத்த இருக்கிறார்.

காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இத்தேர்தலில் ராகுல் கர்நாடாகவில் இருந்து தனது வாக்கை செலுத்த இருக்கிறார்.

புதுதில்லி: காங்கிரஸ் கட்சித் தலைவருக்கான தேர்தல் நாளை (அக்.17) நடைபெற உள்ள நிலையில், ராகுல் கர்நாடகாவில் இருந்து தனது வாக்கை செலுத்த இருக்கிறார்.

ட்ரெண்டிங் செய்திகள்

’நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையில் பேசு பொருளான சர்ச்சை நாயகன்! யார் இந்த சாம் பிட்ரோடா?’

Shashi Tharoor: 'தொலைபேசியில் பேச மக்கள் பயப்படுகிறார்கள்': காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் குற்றச்சாட்டு

Hemant Soren: அமலாக்கத்துறை கைதை எதிர்த்து ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனு: ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் தள்ளுபடி

Dubai weather: ஐக்கிய அரபு அமீரகத்தில் கனமழை, விமானங்கள் ரத்து.. வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதி

பாரம்பரியம் மிக்க காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் 22 ஆண்டுகளுக்கு பிறகு நாளை (அக்.17) நடைபெற உள்ளது. நாளை நடைபெற உள்ள இந்தத் தேர்தலில் கட்சியின் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் சசி தரூர் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பொதுச் செயலாளர்கள், துணைப் பொதுச் செயலாளர்கள், காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் என 9,000-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இந்தத் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வாக்களிக்க அனைத்து மாநிலங்களிலும் வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்கள் தில்லியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நாளை பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 19ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.

இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் தற்போது இந்திய ஒற்றுமைக்கான யாத்திரை 'பாரத் ஜோடோ' நடைபயணத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். நாளை நடைபெற உள்ள காங்கிரஸ் கட்சித் தேர்தலில் அவர் எங்கிருந்து வாக்களிப்பார் என்ற கேள்வி எழுந்துள்ள சூழலில், நடைபயணத்தில் இருக்கும் ராகுல் கர்நாடகா மாநிலத்தில் இருந்து வாக்களிப்பார் என கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “காங்கிரஸ் தலைவருக்கான தேர்தலில் நாளை ராகுல் எங்கு வாக்களிப்பார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இது தொடர்பாக எந்த ஊகமும் தேவையில்லை. கர்நாடகா மாநிலம் பல்லாரியில் உள்ள சங்கனக்கல்லு பாரத் ஜோடோ முகாமிலிருந்து பிசிசி பிரதிநிதிகளான சுமார் 40 பாரத் ஜோடோ யாத்ரிகளுடன் ராகுல் காந்தி வாக்களிப்பார்'' எனப் பதிவிட்டுள்ளார்.

டாபிக்ஸ்