தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Trending News For National And World On August 15

பீட்சா பிரியர்கள் அதிர்ச்சி, அம்பானிக்கு மிரட்டல் உள்பட முக்கிய செய்திகள்- ஆக.15

Karthikeyan S HT Tamil

Aug 15, 2022, 06:01 PM IST

பீட்சா பிரியர்கள் அதிர்ச்சி, அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்தது உள்பட இன்றைய முக்கிய செய்திகளை இந்த தொகுப்பில் சுருக்கமாக காணலாம்.
பீட்சா பிரியர்கள் அதிர்ச்சி, அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்தது உள்பட இன்றைய முக்கிய செய்திகளை இந்த தொகுப்பில் சுருக்கமாக காணலாம்.

பீட்சா பிரியர்கள் அதிர்ச்சி, அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்தது உள்பட இன்றைய முக்கிய செய்திகளை இந்த தொகுப்பில் சுருக்கமாக காணலாம்.

  • நாட்டின் 76வது சுதந்திர தினத்தை ஒட்டி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றிவைத்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
  • இந்தியாவின் சுதந்திரத்துக்காக தங்கள் வாழ்க்கையைக் கொடுத்த மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திர போஸ், அம்பேத்கர், சாவர்க்கர் ஆகியோரின் தியாகத்துக்கு மக்கள் நன்றி கடன் பட்டிருப்பதாக சுதந்திர தினவிழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
  • அடுத்த 25 ஆண்டுகளை தேச வளர்ச்சிக்காக அர்ப்பணிக்குமாறு இளைஞர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
  • பெங்களூரில் உள்ள ஒரு டோமினோஸ் உணவகத்தில், பீட்சா மாவு வைத்திருந்த இடத்தில் கழிவறை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் மாப், பிரஷ் உள்ளிட்டவைகள் இருந்ததால் பீட்சா பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
  • பிகார் மாநிலத்தில் 10 லட்சம் அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்தார்.
  • 2022 ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நான்கு மாதங்களில் ஒன்றிய அரசின் நேரடி வரி வருவாய் 40% உயர்ந்து ரூ.5 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
  • தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக மும்பையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
  • உலகின் உயரமான துபாய் புர்ஜ் கலிஃபா கட்டடத்தில் மிளிரும் இந்தியாவின் மூவர்ணக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.
  • சுதந்திர தின கொண்டாட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நாட்டுப்புறக் கலைஞர்களுடன் சேர்ந்து நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
  • சுயநலம் கொண்ட ஒன்றிய அரசு சுதந்திர போராட்ட வீரர்களின் மகத்தான தியாகங்களையும், நாட்டின் பெருமைமிக்க சாதனைகளையும் கொச்சைப்படுத்துகிறது என்று காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
  • சுதந்திர தின விழாவை முன்னிட்டு கொச்சி மெட்ரோவில் பயணிகள் வெறும் 10 ரூபாய் மட்டுமே செலுத்தி எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பயணிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ளது.
  • மூக்கு வழி செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்துக்கு அனுமதி கோரி இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையத்திடம் பாரத் பயோடெக் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
  • நாட்டில் ஒரேநாளில் மேலும் 14,917 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
  • இந்தியாவின் 75வது சுதந்திர தின விழாவையொட்டி வாகா எல்லையில் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் ராணுவ வீரர்களுக்கு இனிப்பு வழங்கினர்.
  • மகாராஷ்டிராவில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் அழைபேசியில் பேசும்போது, ஹலோ என தொடங்க கூடாது என்றும் வந்தே மாதரம் என சொல்லி பேச்சை தொடங்க வேண்டும் என அமைச்சர் சுதிர் முங்கந்திரவாரு உத்தரவிட்டுள்ளார்.
  • நாட்டிற்குத் தேவை புதிய திசை மற்றும் புதிய வேகம் என்று காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
  • ராஜஸ்தானின் பாலியில் பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது லாரி மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர்.
  • இந்தியா 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நிலையில் அமெரிக்காவின் நாசா, ஐரோப்பிய நாடுகளின் ஈஸா ஆகியவை விண்வெளியிலிருந்து வாழ்த்துகளை தெரிவித்துள்ளன.
  • அமெரிக்காவில் எழுத்தாளா் சல்மான் ருஷ்டி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தங்களுக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்று ஈரான் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
  • சீனாவால் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், தங்களுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்த இந்தியாவுக்கு தைவான் நன்றி தெரிவித்துள்ளது.
  • கேரளா பாலக்காட்டில் கம்யூனிஸ்ட் கட்சியின் செயல் வீரர் ஷாஜகான் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
  • இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை சுதந்திரமானது என்றும் பாகிஸ்தானின் வெளியுறவுக் கொள்கை அடிமைத்தனம் கொண்டது என்றும் இம்ரான் கான் விமர்சித்துள்ளார்.
  • ஸ்காட்லாந்து நாட்டில் பெண்களுக்கு நாப்கின்கள் உட்பட மாதவிடாய் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

IIT students: ‘20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை.. MIT-ல் இந்த எண்ணிக்கை அதிகம்’-RTI இல் அதிர்ச்சி தகவல்

Vistara: பைலட் பயிற்சியில் குறைபாடுகள்: விஸ்தாரா துணைத் தலைவரை இடைநீக்கம் செய்தது டிஜிசிஏ

Singapore Airlines: இந்திய தம்பதிக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு: சிங்கப்பூர் ஏர்லைன்ஸுக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

NCR schools receive threats: டெல்லியில் குறைந்தது 50 பள்ளிகளுக்கு வெடி குண்டு மிரட்டல், உஷார் நிலையில் போலீஸார்

டாபிக்ஸ்