HBD Shiv Nadar: நாட்டை வியக்க வைக்கும் நன்கொடை நாயகன்! HCL தொழில்நுட்ப நிறுவனர் ஷிவ் நாடார் வென்ற கதை!
Jul 14, 2024, 06:00 AM IST
2008 ஆம் ஆண்டில், தகவல் தொழில்நுட்பத் துறையில் அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பைப் பாராட்டி, இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷன் அவருக்கு வழங்கப்பட்டது.
தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மற்றும் நன்கொடைக்கு அடையாளமாக எச்.சி.எல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நிறுவனர் என்ற ஷிவ் நாடார் உள்ளார்.
ஒரு சிறிய ஸ்டார்ட் அப் நிறுவனமாக தொடங்கப்பட்ட நிறுவனம் உலகளாவிய ஐ.டி நிறுவனமாக மாறுவதற்கான ஷிவ் நாடாரின் பயணம் அவரது வணிக புத்திசாலித்தனதின் அடையாளமாக விளங்குகிறது.
பிறப்பும் படிப்பும்
தமிழ்நாட்டில் உள்ள தூத்துக்குடி மாவட்டம் மூலைபொழி எனும் கிராமத்தில் ஜூலை 14, 1945 ஆம் ஆண்டு பிறந்த ஷிவ் நாடார், கோயம்புத்தூரில் உள்ள PSG காலேஜ் ஆப் டெக்னாலஜியில் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் படிப்பை முடித்தார்.
டெல்லியில் உள்ள டிசிஎம் டேட்டா புராடக்ட்ஸ் என்ற பொறியியல் நிறுவனத்தில் தனது தொழில்முறை பயணத்தைத் தொடங்கிய அவர், டிசிஎம் நிறுவனத்தில் பணியாற்றியபோது தொழில்நுட்ப உலகில் மதிப்புமிக்க நுண்ணறிவுகளையும், கணினிகள் மீது ஆழமாக வேரூன்றிய மோகத்தை வளர்த்துக் கொண்டார்.
HCL நிறுவனத்தின் எளிய தொடக்கம்
1976 ஆம் ஆண்டில், தெளிவான தொலைநோக்கு பார்வை மற்றும் பிரச்னைகளுக்கு தீர்வு தரும் தொழில்முனைவு மனப்பான்மை உடன் HCL நிறுவனத்தை தனது நண்பர்களுடன் இணைந்து ஷிவ் நாடார் நிறுவனார்.
திருப்பு முனையை ஏற்படுத்திய மைக்ரோ கம்யூட்டர்
ஷிவ் நாடார் தலைமையின் கீழ், HCL நிறுவனம் இந்தியாவின் முன்னனி வன்பொருள் மற்றும் மென்பொருள் நிறுவனமாக வளர்ந்தது. 1978 ஆம் ஆண்டில் அதன் முதல் உள்நாட்டு மைக்ரோகம்ப்யூட்டரான HCL 8C/2 ஐ உருவாக்கியதன் மூலம் நிறுவனம் முன்னேற்ற பாதையில் சென்றது. இது தனிநபர் கணினிகளை உற்பத்தி செய்யும் முதல் இந்திய நிறுவனமாக ஹெச்.சி.எல் நிறுவனத்தை உயர்த்தியது. . இன்று, HCL டெக்னாலஜிஸ், 50க்கும் மேற்பட்ட நாடுகளில் 150,000க்கும் அதிகமான பணியாளர்களைக் கொண்டு, உலகின் முன்னணி IT சேவை நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது.
சமூக பொறுப்பில் ஆர்வம்
பெருநிறுவனங்களுக்கான சமூக கடமைகளை செயல்படுத்துவதில் ஷிவ் நாடார் முக்கியமானவராக திகழ்ந்து வருகிறார். சமூகத்தில் இருந்து பெற்றதை மீண்டும் சமூகத்திற்கே கொடுக்கும் அவரது பெரும் ஆர்வம் சாமானியர்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்தியது. கல்வி மற்றும் சுகாதாரத்தில் அர்த்தமுள்ள தாக்கத்தை அவரது நன்கொடைகள் ஏற்படுத்தி உள்ளது.
1994ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஷிவ் நாடார் அறக்கட்டளை உலகத் தரம் வாய்ந்த ஷிவ் நாடார் பல்கலைக்கழகத்தை நிறுவி கல்வி சேவைகளை அளித்து வருகிறது.
பத்மபூஷன் விருது
ஷிவ் நாடாரின் சாதனைகள் மற்றும் பங்களிப்புகள் இந்தியா மற்றும் சர்வதேச அளவில் ஏராளமான பாராட்டுகளையும் அங்கீகாரத்தையும் பெற்றுத் தந்துள்ளது.
2008 ஆம் ஆண்டில், தகவல் தொழில்நுட்பத் துறையில் அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பைப் பாராட்டி, இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷன் அவருக்கு வழங்கப்பட்டது.
இந்தியாவின் நெ.1 நன்கொடையாளர்
ஷிவ் நாடார் தலைமையானது HCL நிறுவனத்தை உலகளாவிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமாக மாற்றியது மட்டுமல்லாமல் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு முயற்சிகள் மூலம் எண்ணற்ற நபர்களில் வளர்ச்சிக்கு உதவிக்கரம் நீட்டி உள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டில் 1,161 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியதன் மூலம் இந்திய நன்கொடையாளர்கள் பட்டியலில் ஷிவ் நாடார் முதலிடம் பெற்றது நினைவு கூறத்தக்கது.
டாபிக்ஸ்