தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Sabarimala Aravana: சபரிமலை பிரசாதத்தில் தரமற்ற ஏலக்காய்.. பக்தர்கள் அதிர்ச்சி!

Sabarimala Aravana: சபரிமலை பிரசாதத்தில் தரமற்ற ஏலக்காய்.. பக்தர்கள் அதிர்ச்சி!

Karthikeyan S HT Tamil

Jan 06, 2023, 01:10 PM IST

google News
Poor Quality Cardamom used for Sabarimala Aravana: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களுக்கு தரப்படும் அரவணை பாயாசத்தில் தரமற்ற ஏலக்காய் பயன்படுத்தியது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
Poor Quality Cardamom used for Sabarimala Aravana: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களுக்கு தரப்படும் அரவணை பாயாசத்தில் தரமற்ற ஏலக்காய் பயன்படுத்தியது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

Poor Quality Cardamom used for Sabarimala Aravana: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களுக்கு தரப்படும் அரவணை பாயாசத்தில் தரமற்ற ஏலக்காய் பயன்படுத்தியது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் நடை ஆண்டுதோறும் கார்த்திகை, மார்கழி மாதங்களில் மண்டல, மகரவிளக்கு பூஜை காலங்களில் திறக்கப்படுகிறது. இது தவிர மாதப் பிறப்பையொட்டி ஒவ்வொரு மாதம் முதல் நாளில் நடை திறக்கப்பட்டு 5 நாட்கள் சிறப்புப் பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.

மண்டல பூஜைக்காக சபரிமலை கோயில் நடை கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் தேதி திறக்கப்பட்டு டிசம்பர் 27-ல் மண்டல பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றதுது. இதனைத் தொடர்ந்து மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

கொரோனா கட்டுப்பாடுகள் முழுவதும் தளர்த்தப்பட்டுள்ளதால் சபரிமலை தரிசனத்துக்கு இந்த ஆண்டு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த முறை புல்மேடு, கரிமலை, நீலிமலை ஆகிய 3 வனப்பாதைகள் வழியாகவும் பக்தர்கள் சென்று ஐயப்பனை தரிசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் சன்னிதானத்தில் தங்கவும், பெருவழிப்பாதை வழியாக சன்னிதானம் செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆன்லைனின் புக்கிங் செய்யாத பக்தர்கள் வசதிக்காக நிலக்கல்லில் உடனடியாக புக்கிங் செய்து சுவாமி தரிசனம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

சபரிமலை ஐயப்பன் தரிசனத்துக்கு காத்திருக்கும் பக்தர்கள்

இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களுக்கு தரப்படும் அரவணை பாயாசத்தில் தரமற்ற ஏலக்காய் பயன்படுத்தியது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. அரவணை பாயாசத்தில் உள்ள ஏலக்காயில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகப் பூச்சிமருந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கேரள உயர் நீதிமன்ற உத்தரவுப்படி திருவனந்தபுரத்தில் உள்ள உணவுப் பொருள் ஆய்வகத்தில் அனுமதிக்கப்பட்டதைவிட அதிகப் பூச்சி மருந்து கொண்ட ஏலக்காய் அரவணை பாயாசத்தில் பயன்படுத்தியது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதுமட்டுமின்றி அரவணை பாயாசம், அப்பம், நெய், விபூதி, குங்குமம் ஆகியவற்றின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும் பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர். ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த அரவணை பாயாசம் 100 ரூபாயாக விலை உயர்த்தப்பட்டிருக்கிறது.

சபரிமலையில் சர்க்கரை பொங்கல் வழங்கப்படும் இடம்.

1 பாக்கெட் அப்பம் ரூ.30-க்கு வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 45 ரூபாயாக விலை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், பக்தர்கள் 25 ரூபாய் கொடுத்து வாங்கும் சர்க்கரை பொங்கலில் தரம் குறைவாக இருப்பதாகவும் சபரிமலை பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர். பக்தர்கள் விலை கொடுத்து வாங்கும் சர்க்கரை பொங்கலில் சுவை குறைவாக இருப்பதால் அப்படியே ஆங்காங்கே கீழேபோட்டுச் செல்கின்றனர். இதுகுறித்து உடனடியாக தேவசம் போர்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.

கடந்த 40 நாட்களில் மட்டும் சபரிமலைக்கு வந்த பக்தர்கள் மூலம் ரூ.223 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக தேவசம்போர்டு நிர்வாகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

அடுத்த செய்தி