தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Pamba River: பம்பை நதியில் பாக்டீரியாக்கள் அதிகரிப்பு; அதிர்ச்சியில் பக்தர்கள்!

Pamba River: பம்பை நதியில் பாக்டீரியாக்கள் அதிகரிப்பு; அதிர்ச்சியில் பக்தர்கள்!

Karthikeyan S HT Tamil

Jan 05, 2023, 03:03 PM IST

google News
Coliform bacteria increased in Pamba river: காலரா மற்றும் டைபாய்டு போன்ற நோய்களை ஏற்படுத்தும் கோலிஃபார்ம் பாக்டீரியாக்களின் அளவு சபரிமலை பம்பை நதியில் அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Coliform bacteria increased in Pamba river: காலரா மற்றும் டைபாய்டு போன்ற நோய்களை ஏற்படுத்தும் கோலிஃபார்ம் பாக்டீரியாக்களின் அளவு சபரிமலை பம்பை நதியில் அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Coliform bacteria increased in Pamba river: காலரா மற்றும் டைபாய்டு போன்ற நோய்களை ஏற்படுத்தும் கோலிஃபார்ம் பாக்டீரியாக்களின் அளவு சபரிமலை பம்பை நதியில் அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த விழாக்காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வருவது வழக்கம்.

இந்தாண்டு மண்டல பூஜைக்காக சபரிமலை கோயில் நடை கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் தேதி திறக்கப்பட்டு டிசம்பர் 27-ல் மண்டல பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றதுது. இதனைத் தொடர்ந்து மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதையொட்டி சபரிமலை ஐய்யப்பன் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பக்தர்கள் சன்னிதானத்தில் தங்கவும், பெருவழிப்பாதை வழியாக சன்னிதானம் செல்லவும் அனுமதிக்கப்படுகிறார்கள். ஆன்லைனின் புக்கிங் செய்யாத பக்தர்கள் வசதிக்காக நிலக்கல்லில் உடனடியாக புக்கிங் செய்து சுவாமி தரிசனம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

சபரிமலை ஐயப்பன் சன்னிதானம் - கோப்புபடம்

சபரிமலை வரும் பக்தர்கள் அங்குள்ள பம்பை நதியில் புனித நீராடுவது வழக்கம். அதன்படி, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வரும் ஐய்யப்ப பக்தர்கள் பம்பை நதியில் அனைத்து பகுதிகளிலும் புனித நீராடி வருகின்றனர். இதுபோல அங்கு பக்தர்கள் தர்ப்பணம் கொடுத்தும் வருகின்றனர்.

இந்நிலையில், பம்பை நதியில் கோலிஃபார்ம் என்கிற பாக்டீரியாக்கள் அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையின்போது பம்பை நதியில் வாரம் ஒரு முறை கோலிஃபார்ம் பாக்டீரியாவின் அளவு பரிசோதனை செய்யப்படும்.

மொத்த கோலிஃபார்ம் மற்றும் பீக்கல் கோலிஃபார்ம் அளவு பரிசோதிக்கப்படுகிறது. மொத்த கோலிஃபார்ம் என்பது தண்ணீரில் கலந்துள்ள மொத்த பாக்டீரியாக்களின் தொகுப்பாகும். பீக்கல் கோலிஃபார்ம் என்பது விலங்கு மற்றும் மனித கழிவுகள் மூலம் தண்ணீரில் ஏற்பட்டுள்ள பாக்டீரியாக்களின் அளவு.

சபரிமலை பம்பை நதி

மொத்த கோலிஃபார்மின் அளவு 500-க்கு மேல் இருந்தால் குளிக்க உபயோகிக்க முடியாது. ஆனால், பரிசோதனைக்காக பம்பை நதியில் இருந்து எடுக்கப்பட்ட தண்ணீரில் கோலிஃபார்ம் பாக்டீரியாக்களின் அளவு 6000-க்கும் மேல் கடந்துள்ளது.

தினமும் ஆயிரக்கணக்கானோர் குளிப்பதும், பம்பை நதியில் குளித்துவிட்டு அவர்களது ஆடைகளை ஆற்றிலேயே விட்டு செல்வதும் இந்த அளவு பாக்டீரியாக்களின் அளவு அதிகரிப்பதற்கான காரணம் என்று கூறப்படுகிறது.

கோலிஃபார்ம் பாக்டீரியாக்கள் அதிகம் உள்ள தண்ணீரில் குளித்தால் காலரா மற்றும் டைபாய்டு போன்ற நோய்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால், பாக்டீரியாக்களின் அளவை கட்டுப்படுத்த குள்ளார் அணையில் இருந்து பம்பை நதிக்கு கூடுதல் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

அடுத்த செய்தி