தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Neet Ug:'neet-ல் எதிர்க்கட்சிகள் மன்னிப்புக்கேட்க வேண்டும்.. 2 நாட்களில் இளநிலை நீட் முடிவுகள்': மத்திய அமைச்சர் பிரதான்

NEET UG:'NEET-ல் எதிர்க்கட்சிகள் மன்னிப்புக்கேட்க வேண்டும்.. 2 நாட்களில் இளநிலை நீட் முடிவுகள்': மத்திய அமைச்சர் பிரதான்

Marimuthu M HT Tamil

Jul 23, 2024, 10:59 PM IST

google News
NEET UG: நீட் தேர்வில் எதிர்க்கட்சிகள் மன்னிப்புக்கேட்க வேண்டும் எனவும், 2 நாட்களில் இளநிலை நீட் முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் மத்திய அமைச்சர் பிரதான் அறிவித்துள்ளார். (Photo via Sansad TV)
NEET UG: நீட் தேர்வில் எதிர்க்கட்சிகள் மன்னிப்புக்கேட்க வேண்டும் எனவும், 2 நாட்களில் இளநிலை நீட் முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் மத்திய அமைச்சர் பிரதான் அறிவித்துள்ளார்.

NEET UG: நீட் தேர்வில் எதிர்க்கட்சிகள் மன்னிப்புக்கேட்க வேண்டும் எனவும், 2 நாட்களில் இளநிலை நீட் முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் மத்திய அமைச்சர் பிரதான் அறிவித்துள்ளார்.

NEET UG: இளநிலை நீட் தேர்வை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தைச் சுட்டிக்காட்டி, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், எதிர்க்கட்சிகள் மன்னிப்புக்கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் இளநிலை நீட் தேர்வு முடிவுகளை இன்னும் இரண்டு நாட்களில் வெளியிடுவதாகவும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். 

மக்களவையில் எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி பாஜக எம்.பிக்களுடனும் மத்திய அமைச்சர்களுடனும் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்தது குறித்து அனல் பறக்க விவாதம் செய்தார். மேலும் சர்ச்சை நிறைந்த இந்த நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தினார். 

இந்நிலையில், சர்ச்சை நிறைந்த தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்தக்கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று காலை(ஜூலை 23) தள்ளுபடி செய்தது.

ராகுல் காந்தி குழப்பத்தை ஏற்படுத்துகிறார்: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்!

இந்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பின் பேசிய மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், "உச்ச நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்புக்குப் பிறகு எதிர்க்கட்சிகளின் பங்கு தெளிவாகிவிட்டது. மக்களவை எதிர்க்கட்சிகள் நேற்று வரை கடைப்பிடித்து வந்த அணுகுமுறை, நாட்டின் தேர்வு முறையை செல்லாததாக்குவதும், அதை 'குப்பை' என்று அழைப்பதும் அவரது மனநிலையை நிரூபிக்கிறது. இதை விமர்சித்ததன் மூலம் ராகுல் காந்தி இந்தியாவை விமர்சித்துள்ளார். நாட்டு மாணவர்களை தவறாக வழிநடத்துவது, குழப்பத்தை ஏற்படுத்துவது, சமூக பதற்றங்களுக்கு அவர்களைத் தூண்டிவிடுவது அனைத்தும் அவரது அரசியலின் ஒரு பகுதியாக திட்டமிடப்பட்டவை. நாட்டில் தேர்தல் முடிவுகளை நிராகரிப்பதன் மூலம், அராஜகம் மற்றும் உள்நாட்டு அமைதியின்மை அவரது பணிகளில் ஒரு பகுதியாக மாறியுள்ளது" என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

‘’தேர்வு அதன் புனிதத்தை மீறி சீர்குலைக்கப்பட்டது என்ற முடிவுக்கு வர எந்த ஆதாரமும் இல்லை’’ என்று உச்ச நீதிமன்றம் இன்று(ஜூலை 23) கூறியது.

எதிர்க்கட்சியினர் மாணவர்களிடம் மன்னிப்புக்கேட்க வேண்டும்: மத்திய அமைச்சர் பிரதான்

’’நீட் தேர்வுக்கு எதிராகப் பேசிய எதிர்க்கட்சி மற்றும் பிற எதிர்க்கட்சி உறுப்பினர்கள், நாட்டின் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பெற்றோர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்’’ என்றும் மத்திய கல்வி அமைச்சர் பிரதான் வலியுறுத்தினார்.

"நீங்கள் நாட்டை காயப்படுத்தியுள்ளீர்கள். நாட்டில் அராஜகத்தை உருவாக்க முயற்சித்தீர்கள். நாட்டில் உள்நாட்டு அமைதியின்மையை ஏற்படுத்த சதி செய்தீர்கள். நாடு உங்களை மன்னிக்காது. அரசியல் போட்டி வேறுபட்டதாக இருக்கலாம். ஆனால், மாணவர்கள் அனைவருக்கும் சொந்தமானவர்கள், "என்று அவர் மேலும் கூறினார்.

இன்னும் 2 நாட்களுக்குள் இளநிலை நீட் தேர்வின் இறுதி முடிவுகள்:

இளநிலை நீட் தேர்வின் இறுதி முடிவுகளை தேசிய தேர்வு முகமை இன்னும் இரண்டு நாட்களுக்குள் அறிவிக்கும் என்றும், உச்ச நீதிமன்றத்தின் கருத்துகளின்படி, தேர்வின் தகுதி பட்டியல் திருத்தப்படும் என்றும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.

மத்திய முன்னாள் கல்வி அமைச்சர் கபில் சிபல் சரமாரி கேள்வி:

இதற்கிடையில், அகில இந்திய தேர்வுகள் நடத்தப்படுவதற்கு முன்பு தேசிய தேர்வு முகமை 'முழுமையாக மறுசீரமைக்கப்பட வேண்டும்' என்று முன்னாள் கல்வி அமைச்சர் கபில் சிபல் ஏ.என்.ஐ. செய்தி முகமையிடம் தெரிவித்தார்.

’’இந்த ஆட்சியில் ஒவ்வொரு தேர்விலும் ஏன் வினாத்தாள் கசிவு ஏற்படுகிறது? கேள்வி என்னவென்றால், யார் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள், யாருடைய நலனுக்காக கசிவுகள் நடக்கின்றன? வேலை கிடைத்த தகுதி இல்லாதவர்கள் யார்? சமீபத்தில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவர், போலி சாதி சான்றிதழ் அடிப்படையில், பணியில் சேர்வதை பார்த்தோம். தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ) முழுமையாக மறுசீரமைக்கப்பட வேண்டும். தற்போதைய என்.டி.ஏ முறையின் கீழ் இந்த அளவிலான அகில இந்திய தேர்வை நீங்கள் நடத்தக்கூடாது" என்று முன்னாள் மத்திய கல்வி அமைச்சர் கபில் சிபல் கூறினார்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை